அப்போ கண்ணம்மா, இப்போ பாரதி!? இது தான் இந்த சீரியலின் மொத்த கதையா? ஏமாற்றத்தில் ரசிகர்கள்
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் ஆரம்பத்தில் கண்ணம்மா செய்த அதே வேலையை தற்போது பாரதி தொடங்கியிருப்பதால் நெட்டிசன்கள் இதை வைத்து அதிகமாக மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள்.
என்னதான் சீரியலாக இருந்தாலும் ஒரே கதையே திரும்பத் திரும்ப சீரியலில் கொண்டு வருவதால் இந்த சீரியலில் எந்த அளவிற்கு ரசிகர்கள் ரசிகிரார்களோ அந்த அளவிற்கு அதிகமாக கலாய்த்து வருகிறார்கள்.

முதல் பாகம் முடிவு வதந்தி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலின் முதல் பாகம் விரைவில் முடிவடையை இருக்கிறது எனும் தகவல்கள் இணையத்தில் வெளியானதும் ரசிகர்கள் அதிகமாக சந்தோஷம் அடைந்தனர். காரணம் இந்த சீரியல் எப்போது முடியும் என்று பல வருடங்களாகவே நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிகமாக பிடித்த ஒரே சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் ஆகத்தான் இருக்க முடியும். ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதைவிட பல மடங்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். ஆனாலும் டிஆர்பி மட்டும் குறைந்தபாடு இல்லை.

தெருவில் அப்பாவை தேடிய ஹேமா
ஆரம்பத்தில் பாரதியோடு கோபித்துக் கொண்டு கண்ணம்மா வீட்டை விட்டு கையில் பேக்கோடு கிளம்பி இருந்தார். அதற்குப் பிறகு கண்ணம்மா நடப்பதை வைத்து சமூக வலைதளத்தில் அதிகமான மீம்ஸ்கள் வலம் வந்தது. ட்ரெண்டிங்கில் இந்த சீரியல் முதல் இடத்திற்கு வருவதற்கு காரணம் மீம்ஸ் கிரியேட்டர்கள் என்று சொல்லும் அளவிற்கு இருந்து வந்தது. அதை தொடர்ந்து தற்போது
மீண்டும் கண்ணம்மாவின் மகள் ஹேமா தன்னுடைய அப்பா யாரு என்று தேடி தெருவில் அலைந்து கொண்டிருந்தார். பல போராட்டங்களுக்குப் பிறகு பாரதி தான் கண்ணம்மாவின் கணவர் என்றும் தங்களுடைய அப்பா என்றும் ஹேமா தெரிந்து கொண்டார்.

மீண்டும் கிளம்பிய கண்ணம்மா
ரசிகர்கள் பல வருடங்களாகவே எதிர்பார்த்து இருந்த டிஎன்ஏ டெஸ்ட் தற்போது தான் பாரதி எடுத்து அதில் தன்னுடைய குழந்தைகள் தான் லட்சுமி, ஹேமா என்பதை தெரிந்து கொண்டார். இனி சீரியல் முடிந்துவிடும் என்று நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்களுக்கு நீங்கள் நினைப்பதை நாங்கள் செய்ய மாட்டோம் என்று சீரியல் அணியினர் காட்டி இருக்கின்றனர். அதுவரைக்கும் பாரதியோடு நாம் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழலாமா என்று கேட்டு வந்த கண்ணம்மா டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து வந்த பாரதியிடம் இனி நான் உன்னோடு சேர்ந்து வாழ மாட்டேன் என்று மீண்டும் கையில் பேக்கோடு வீட்டை விட்டு போகப்போகிறேன் என லெட்டர் எழுதி வைத்துவிட்டு கிளம்பி விட்டார்.

கையில் பேக் அம்மா
கண்ணம்மா ஒரு வழியாக இப்போது தன்னுடைய அப்பாவோடு அப்பாவின் சொந்த ஊருக்கு வந்து இருக்கும் நிலையில் கண்ணமாவையும், குழந்தைகளையும் தேடி பாரதி கையில் பேக் உடன் இப்போது வீட்டை விட்டு கிளம்பி இருக்கிறார். ஒவ்வொரு ஊராக பாரதி, கண்ணம்மாவை தேடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோட்டில் அவர் கண்ணமாவை அவருடைய சொந்த ஊரில் கண்டுபிடித்து இருந்தாலும், தெருவிலேயே இவர்கள் குடும்ப பிரச்சனை நடந்து கொண்டிருப்பதை வைத்து சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். சீரியலில் கதையே இல்லாமல் ஒரு தெருவில் குடும்பமே கையில் பேக் ஓடு வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் ஆகத்தான் இருக்க முடியும். இந்த சீரியலுக்கு பாரதிகண்ணம்மா என்று பெயர் வைக்காமல் "கையில் பேக் அம்மா" என்று வைத்திருக்கலாமே என்று சிலர் கலாய்த்து வருகிறார்கள்.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications