நிவிஷா இடுப்புல யாருடா ஜிகினா ஒட்டுனது.. மயங்கிக் கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி விட்டு இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியாலும் அழகாலும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருப்பவர் நிவிஷா.
இவர் மாடல் உடைகளிலும் சேலைகளிலும் ரசிகர்களை கிறங்கடித்து கொண்டிருக்கிறார். அறந்தாங்கியில் வசிக்கும் இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
தெய்வமகள் சீரியலில் இவர் அறிமுகமாகும்போது காலேஜ் படிக்கும் பொன்னாக நடித்திருந்தார். இந்த சீரியல் ரசிகர்களிடம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. முதல் சீரியலில் பட்டையை கிளப்பியிருப்பார். இதனைத்தொடர்ந்து வந்தது எல்லாம் வில்லி கேரக்டர் தான்.

அழுதா பிடிக்காது
இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். கதாநாயகியாக எப்பவும் அழுது கொண்டிருக்கும் பிறருக்காக தியாகம் பண்ணுவது, கிளிசரின் போட்டு அழுகாச்சியாக நடிப்பது கொஞ்சம் கூட இவருக்கு பிடிக்கவில்லையாம் சீரியல்களில் யார் செத்தாலும் கூட மேக்கப்போடு செம கெத்தா இருப்பது இவருக்கு ரொம்ப பிடிக்குமாம்.

மேக்கப்னா பைத்தியம்
சும்மாவே இவரை இவருடைய பிரெண்ட்ஸ் மேக்கப் பைத்தியம் என்று சொல்வார்களாம். அந்த அளவிற்கு எப்பவும் மேக்கப்போடு இருப்பார். சீரியலில் கேட்கவா வேணும். இவர் சின்ன குழந்தையாக இருக்கும்போது திருமண வீட்டிற்கு சென்றால் மணப்பெண்ணுக்கு போடும் மேக்கப்பை கண்ணிமைக்காமல் அப்படியே பார்த்துக் கொண்டே இருப்பாராம். அந்த அளவிற்கு அப்பவே இவருக்கு மேக்கப் மீது காதலாம்.

மேக்கப் கட்டாயம் தேவை
இவர் புருஷன் இல்லாமல் கூட இருப்பாராம். ஆனால் லிப்ஸ்டிக் இல்லாமல் இருக்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார் .இவருடன் நடித்திருக்கும் நடிகையான அனன்யா இவரது நெருங்கிய தோழி இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டிக்கு அளவேயில்லை. சீரியலுக்கு இருவரும் எதிரெதிர் கேரக்டரில் நடித்து விட்டு சூட்டிங் முடிந்ததும் இவர்கள் அடிக்கும் கொட்டத்திற்கு அளவே இல்லை என்று இவர்கள் கூட நடிக்கும் நடிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

லூட்டியடிக்கும் தோழிகள்
அந்த அளவிற்கு இவர்கள் கூட நடிக்கும் நடிகர்களையும் இவர்கள் பாடாய் படுத்தி விடுவார்கள். இவர் மட்டுமல்ல இவர்களுடன் சுஜாவும் உண்டாம். மூவரும் சேர்ந்து வெளிநாடு சுற்றுப்பயணங்கள் அடிக்கடி சென்று விடுவார்களாம். ஊர் சுற்றுவது இவருக்கு ரொம்பவும் பிடித்தமான தாம். இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அப்பப்ப போடும் போஸ்டர்களும் வேற லெவல் வைரலாகி கொண்டிருக்கிறது.

வைரலான போஸ்
கொஞ்ச நாளுக்கு முன்னாடி இவர் போட்டிருந்த இரவு நேரத்தில் நடுத்தெருவில் அமர்ந்து போட்டிருந்த போஸ்ட் வைரலாக பரவி வந்தது அதைத்தொடர்ந்து இப்போ சேலையிலும் கலை கட்டிக் கொண்டிருக்கிறார். பச்சை வண்ண கலர் சேலையில் இடுப்பு தெரிய இவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை காந்தம் போல இழுக்கிறதாம்.

பரந்து விரிந்த மனசுக்காரர்
பரந்த மனதை பற்றியும் சிலர் இடுப்பைப் பற்றியும் சிலர் அதற்கு மேலும் இவரை பார்த்து ரசித்து ரசித்து கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். சீரியல்களில் வில்லத்தனத்தை கண்களில் காட்டி மிரட்டிய இவர் இணையதளங்களில் தன்னுடைய இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். என்னதான் சொல்லுங்க சேலைக்கு இருக்கும் அழகும், கவர்ச்சியும் தனி தாங்க.












Click it and Unblock the Notifications