ஆளே அடையாளம் தெரியல.. பூசணிக்காய் நடிகை புடலங்காய் மாதிரி.. ஒசாம்பிக் ஊசி ரொம்ப மோசம்: பிரபலம் நறுக்
சென்னை: ஒசாம்பிக் மருந்துகள் என்றில்லை, அதுபோல பல மருந்துகளை உடல் இளைக்க பயன்படுத்துகிறார்கள் .. டயாபடிக் நோயாளிகள் எடுக்க வேண்டிய இந்த மருந்தை, சர்க்கரை நோய் இல்லாதவர்கள் எடுக்கும்போது, எதிர்விளைவுகள் ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா அறிவுறுத்தியிருக்கிறார்.. இதுகுறித்து சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, சில நடிகைகள் உடல் எடையை குறைக்க ஆபத்தான சிகிச்சை முறைகளை நாடி செல்வதாகவும் கூறியிருக்கிறார்.
சமீபகாலமாகவே ஒசாம்பிக் என்ற ஊசியின் பெயர் சினிமா உலகில் அடிபட்டு வருகிறது.. ஒசாம்பிக் என்பது நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் ஒரு ஊசி மருந்து ஆகும். இது நீரிழிவு நோயாளர்களின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது பசியை கட்டுப்படுத்தவும், உணவு உட்கொள்ளுதலை குறைக்கவும் உதவுகிறது. இதனால், இது உடல் எடை எளிதாக குறைக்க உதவுகிறது.

ஆனால், இந்த ஊசியை சில நடிகைகள் உடல் இளைக்க பயன்படுத்துவதாக செய்திகள் கசிந்து வருகின்றன.. இதுகுறித்து King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா.
நடைபயிற்சி, உடற்பயிற்சி
அதில், "முன்பெல்லாம் வெயிட் லாஸுக்கு முழுக்க முழுக்க உடற்பயிற்சி, நடைபயிற்சிதான் பிரதானமாக உதவியது.. அன்றைய நடிகர், நடிகைகள் இப்படியான பயிற்சிகளை செய்துதான், தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தனர்.
80களில் இந்த முறை மாறியது.. பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை மாற்றி கொள்வது, மார்பகங்களை சிலிகான் வைத்து பயன்படுத்துவது என சில நடிகைகள் மேற்கொண்டனர். தங்களை இளமையாக காட்டி கொள்ள வேண்டும் என்பதற்காக, இந்த சிகிச்சைகளை நடிகைகள் கையாண்டனர்.. குறிப்பாக ஸ்ரீதேவி தனக்கு மூக்கு ஆபரேஷன் செய்து கொண்டபிறகுதான், பலருக்கும் இதை பற்றி தெரியவந்தது.
சிவாஜி கணேசன் வயது மூப்பு
ஆனால் நடிகர்கள் இதுபோன்ற சிகிச்சையில் இறங்கியதில்லை.. உடற்பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.. சிவாஜி கணேசன் தான் எப்படி இருந்தாரோ, அதுபோலவேதான் நடித்தார்.. வயது மூப்பில் உடல் இளைத்து காணப்பட்டாலும், அப்படியேதான் நடித்தார்.. இப்போது சில நடிகைகள், இயற்கைக்கு மாறாக, மருந்துகள் மூலமாக இளமையாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.. இது ஆபத்தில்தான் போய முடியும்.
ஏற்கனவே உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்யாமல், உணவு குறைத்து, எடையை குறைப்பது எனபதே ஆபத்தானதுதான். காரணம், தேவையான சக்தி உடலுக்கு கிடைத்தாக வேண்டும்.. அப்படியிருக்கும்போது, பசி எடுக்காமல் இருக்க மாத்திரைகள், ஊசிகள் போட்டுக் கொள்வது மேலும் ஆபத்தாகிவிடும்.. அதனால்தான் சில நடிகைகள் பூசணிக்காய் மாதிரி இருக்கிறார்கள், பிறகு திடீரென புடலங்காய் மாதிரி காணப்படுகிறார்கள்..
நடிகர் அஜித் - கார் ரேஸ்
நடிகர் அஜித் இப்படி மருந்துகள் மூலமாக உடலை இளைத்துக் கொள்ள மாட்டார்.. காரணம், அவர் கார் ரேஸில் இருக்கிறார்.. மருந்துகளுக்கு விளையாட்டுகளில் இடமில்லை.. விடாமுயற்சி படம் தாமதமாக காரணமாக, கார் ரேஸூக்கு முன்பு, அஜித் தன்னுடைய உடல் எடையை குறைத்து கொண்டு சென்றதுதான் என்றார்கள்.. இப்படி செயற்கைத்தனமாக வலுக்கட்டாயமாக உடலை குறைத்தால், சுருக்கங்கள் முகத்தில் வந்துவிடும்.. இயற்கையாக உடலை குறைத்தால் சருமம் தளர்ந்து போகாது.
டயாபடிக் நோயாளிகள்
சமீபகாலமாக ஒசாம்பிக் மருந்துகள் என்றில்லை, அதுபோல பல மருந்துகளை உடல் இளைக்க பயன்படுத்துகிறார்கள் .. டயாபடிக் நோயாளிகள் எடுக்க வேண்டிய இந்த மருந்தை, சர்க்கரை நோய் இல்லாதவர்கள் எடுக்கும்போது, எதிர்விளைவுகள் ஏற்படும்..
சர்க்கரை நோயே உடலில் இல்லாதபோது, இப்படி ஊசிகளை போட்டு செயற்கையாக திட்டமிட்டு, சர்க்கரை நோயை வரவழைப்பதாகும்.. இது இயற்கைக்கு மாறானது.. படித்தவர்கள், பிரபலமானவர்கள்தான் இப்படியான வேலையை செய்கிறார்கள்.. இது மிகவும் தவறானதும், ஆபத்தானதும்கூட.. உடல் எடை குறைக்க வேண்டுமானால், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலமாகவே தீர்வு கிடைக்கும்.. உணவே மருந்து என்பதே எக்காலத்திலும் சரி" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications