பட்டுச்சேலை சரசரக்க... பார்வையாலே சுண்டி இழுக்கும் பிரியங்கா நல்கரி
சென்னை: எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பேரழகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சன் டிவியின் ரோஜா.
மாடர்ன் உடையிலும் சரி, புடவையிலும் சரி, எப்படி பார்த்தாலும் கலக்குறாரே என ரசிகர்களின் மனது ஏங்கி போய் இருக்கிறதாம்.
விதவிதமாக போஸ் பார்த்ததும் ரசிகர்களின் ஹார்ட்டின்கள் இன்ஸ்டாகிராமில் ஆக்கிரமித்து வருகிறது.

சன் டிவியின் ரோஜா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் தெரியாதவர்களே இருக்க முடியாது. சின்ன திரை ரசிகர்களின் பேவரைட் சீரியல்களில் இந்த சீரியல் இருந்துவருகிறது. சீரியலை ரசிக்கும் ரசிகர்களை விடவும் சீரியலின் கதாநாயகியை ரசிக்கும் ரசிகர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். பொதுவாக சீரியல் என்றாலே வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும் தான் தொடர்ந்து பார்த்து வருவர் ஆனால் இந்த சீரியலை பொருத்தவரையில் இளைஞர்கள் முதல் வீட்டில் இருக்கும் பெண்கள் வரை பலரும் பார்த்து வருகின்றனர்.

முதல் சீரியலில் வெற்றி
சன் டிவியின் டிஆர்பி க்கு இந்த சீரியல் முதன்மையாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் சிரித்த முகமாகவும், கம்பீரமான கெட்டப்பிலும், பார்த்ததும் டக்கென்று மனதிற்கு பிடித்து விடும் அழகில் இருக்கும் அந்த சீரியலின் கதாநாயகி தான். அவருடைய பெயர் ப்ரியங்கா நல்கரி என்பதே பலருக்கும் தெரியாது. அவரை ரோஜா என்றுதான் அனைவரும் அழைத்து வருகின்றனர். சின்னத்திரையின் ரோஜாவாகவும், சமூக வலைத்தளத்தில் கலக்கும் கலக்கல் பிரியங்கா நல்கரியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்காகவே பல இளைஞர்களும் இந்த சீரியலை பார்த்து வருகிறார்களாம்.

எதிர்பார்க்காத ரசிகர்களின் அன்பு
தமிழில் முதன்முதலில் அறிமுகமான சீரியலில் இந்த அளவிற்கு பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் ஆவார் என்று அவருடைய ரசிகர்களே எதிர்பார்க்கவில்லை. அது மட்டுமல்லாமல் அவரும் இதனை எதிர்பார்க்கவில்லை. முதலில் தமிழ் சீரியலில் நடிப்பதற்கு ரொம்பவே பயப்பட்டுருக்கிறார். தமிழே தெரியாமல் எப்படி தமிழ் சீரியலில் நடிப்பது என்று நினைத்த இவர்தான் இப்போது, தமிழில் பேசியே தமிழ் இளைஞர்களை கவர்ந்து விட்டார். பொதுவாக நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இதில் இவரும் ஒருவர்.

உயிருள்ள சிலையா? ?
சீரியலில் மட்டுமல்லாமல் போட்டோசூட்டிலும் பிஸியாக இருக்கிறார். சூட்டிங் ஸ்பாட்டில் தொடங்கி கிடைக்கும் கேப்பில் எல்லாம் அங்கே இங்கே நின்றபடி இவர் எடுக்கும் போட்டோஸ்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடும். அந்த மாதிரிதான் தற்போதும் கூட பட்டுபுடவையில் பலருடைய மனதையும் பறித்து விட்டார். கல் சுவற்றின் அருகில் உயிருள்ள சிலையாக இவர் நிற்பதைப் பார்த்ததும் பலர் சொக்கிப்போய் இருக்கிறார்களாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications