Dude OTT: பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' ஓடிடியில் வெளியீடு? எப்போது, எந்த தளத்தில் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் இளம் தலைமுறை ரசிகர்களின் பல்ஸை தெரிந்து வைத்து, இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றிக் கண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். 'கோமாளி' மற்றும் 'லவ் டுடே' ஆகிய படங்களின் மூலம் தன் திறமையை நிரூபித்த பிரதீப், தற்போது முழுநேர நடிகராக ஜொலித்து வருகிறார். அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி, பாக்ஸ் ஆஃபீஸில் மாபெரும் வெற்றி பெற்ற 'டியூட்' படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதனின் வெற்றி பயணம்
பிரதீப் ரங்கநாதன் இயக்குநராகவும் நடிகராகவும் இரட்டை பொறுப்பை திறம்பட ஏற்று, இளைஞர்களிடையே பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கிய 'டியூட்' படத்தில் பிரதீப் நடித்தார். இந்தப் படத்தைத் தயாரித்தது மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஆகும்.
வசூல் சாதனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியான 'டியூட்' திரைப்படம், 27 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, இதுவரை 110 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆஃபீஸில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 'டியூட்' திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்துடன் உருவானது.
சர்ச்சைகளை கடந்த பிரசென்டேஷன்
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த மூன்றாவது படம்தான் 'டியூட்'. இந்தப் படத்தை கீர்த்திஸ்வரன் என்பவர் இயக்குநராக அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்தில் 'பிரேமலு' படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த மமிதா பைஜு கோலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார்.
'டியூட்' படத்தின் கதை, சமுதாயத்தில் உள்ள சில சிக்கலான சமூகப் பிரச்சனைகளை கையில் எடுத்திருந்தது. கொஞ்சம் பிசகினாலும் ஏடாகூடமாகப் பெயர் எடுத்துவிடும் கதையைத்தான் இயக்குநர் கையில் எடுத்திருந்தார். இருப்பினும், அதனை மிக நேர்த்தியாகவும், 2K கிட்ஸ்களுக்கு ஏற்றவாறும், சமூகத்துக்கு தேவையானதையும் சரியான கலவையில் சொல்லி, இயக்குநர் முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்துவிட்டார்.
100 கோடி கிளப்பில் டியூட்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸான இந்தப் படம், தொடக்கம் முதலே அமோக வசூலை அள்ளியது. 'டியூட்' திரைப்படம் வசூலில் 100 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனமான 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 'லவ் டுடே', 'டிராகன்', 'டியூட்' என வரிசையாக மூன்று படங்களிலும் 100 கோடி ரூபாய் வசூலித்த முதல் ஹீரோ என்ற பெருமையை பிரதீப் ரங்கநாதன் பெற்றிருக்கிறார். இனி அவரது மார்க்கெட் எங்கேயோ போய்விடும் என்பது உறுதி.
நடிகர்கள்
இந்தப் படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், நேஹா ஷெட்டி, ஹ்ருது ஹாரூன், சத்யா, ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா மற்றும் கருட ராம் உள்ளிட்டப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்தார்.
கதை சுருக்கம்
இந்தப் படம், ஒரு கல்லூரி மாணவனின் காதல், நட்பு மற்றும் உறவுகளில் ஏற்படும் குழப்பங்களை வேடிக்கையாகவும், எமோஷனலாகவும்ச் சொல்கிறது. பிரதீப் ரங்கநாதனின் வழக்கமான காமெடி மற்றும் டைமிங் டயலாக்குகள், இந்தப் படத்திற்குப் பெரிய பலம் சேர்த்தன. படத்தின் வேகமான திரைக்கதை, பிரதீப் ரங்கநாதனின் துறுதுறு நடிப்பு மற்றும் மமிதா பைஜுவின் கியூட் நடிப்பு ஆகியவைப் படத்தை வெற்றி பெறச் செய்தன. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஓடிடியில் டியூட் ரிலீஸ்
திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், 'டியூட்' படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ஒரு பெரிய தொகைக்கு 'டியூட்' படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இதை நெட்ஃப்ளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 14ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் இன்னும் வெளியிடவில்லை.
திரையரங்குகளில் கிடைத்த அமோக வரவேற்பைப் போலவே, 'டியூட்' ஓடிடி தளத்திலும் அதே அளவு வெற்றியை பெறுமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications