வாழ்க்கையில் எனக்கு குறிக்கோள்களே இல்லை...பிரியங்காவின் பேச்சுக்கு சம்மட்டி அடி கொடுத்த ஐக்கி
சென்னை: மனதில் தோன்றியதை எல்லாம் பேசிய பிரியங்காவை போட்டியாளர்கள் வாயடைக்க வைத்து விட்டார்கள்.
ஹார்ட்டின் கொடுத்த ரசிகர்கள் கூட அன்லைக் கொடுத்துவிட்டனர். ப்ரியங்காவின் அந்த ஒற்றை வார்த்தையால்.
பல பேருக்கு முன்னுதாரணமாக இருக்கும் பிரியங்கா இப்படி பேசலாமா என்று ரசிகர்களும் பொங்கி வருகிறார்கள்.

உலாவரும் சோகக்கதை
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைத்து இருந்தாலும் காலங்கள் மாறினாலும் போட்டிகள் மாறாது என்பது போல தற்போது ஒவ்வொரு சீசனிலும் உலாவரும் அதே சோகக்கதை...சொந்தக்கதை தான் இப்போது இரண்டு வாரமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆக்கிரமித்து வருகிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சீசனிலும் கண்ணீரை பிழிந்து பிழிந்து ரசிகர்கள் எப்படா முடிப்பார்கள் என்று பீல் பண்ண வைத்து வருகிறது. ஆனால் அது இந்த சீசனில் கொஞ்சம் தூக்கலாக தான் இருந்து வருகிறது.

அதிகமான பெண் போட்டியாளர்கள்
இந்த சீசனில் அறிமுகமான போட்டியாளர்கள் 18 பேரில் அதிகமான போட்டியாளர்கள் புதுமுகங்களாக இருந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பெண் போட்டியாளர்கள் அதிகமாகவும் அவர்களில் மாடலிங் பெண்கள் அதிகமாகவும் இருந்து வருகின்றனர். இதனால் இளைஞர்களுக்கு கொஞ்சம் கொண்டாட்டமாக இருந்தாலும் ஒரு சிலருக்கு தங்களுக்கு பரிச்சயமான போட்டியாளர்கள் இல்லையே என்று கொஞ்சம் பீல் பண்ணி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையாக விஜே பிரியங்கா, சின்னத்திரை கதாநாயகி பாவனி ரெட்டி, இமான் அண்ணாச்சி, சின்னத்திரை காமெடி நடிகர் ராஜு போன்ற ஒரு சிலர் மட்டும்தான் இருந்து வருகின்றனர்.

எலிமினேஷனை கண்டுகொள்ளாத போட்டியாளர்கள்
ரசிகர்களின் பேராதரவோடு போட்டியாளர்கள் முதல் வாரம் முழுக்க ஜாலியாகவும், கலகலப்பாகவும் இருந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் மட்டும் சண்டை சச்சரவுகளை காட்டி எபிசோடில் ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறார்கள் என்று ரசிகர்கள் புலம்பி வந்தாலும் கண்டுகொள்ளவில்லை இந்த வாரத்தில் முதல் எலிமினேஷன் இருக்கும் நிலையில் ரசிகர்களை செய்யும் வேலையில் எலிமினேஷனில் இருக்கும் போட்டியாளர்கள் கவனமாக கையாண்டு வருகின்றனர் இது இன்றைய நேற்றைய எபிசோடில் பிரியங்கா பேசியிருப்பது ரசிகர்களை மட்டுமல்லாமல் சக போட்டியார்களுக்கும் கொஞ்சம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video

பிரியங்காவின் கதை
கதையை ஆரம்பிக்கும் போது தன்னுடைய தந்தையை எவ்வளவு பிடிக்கும் என்றும் தந்தை இவர் மீது வைத்திருக்கும் பாசத்தையும் இவர் அவர் மீது வைத்திருக்கும் பாசம் காதல் போன்றவற்றை அழகாக சொல்லிக்கொண்டிருந்த இவர் தந்தையின் மறைவு அதற்குப்பிறகு இவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், இவருடைய கேரக்டரை சொல்லிக்கொண்டு இருக்கும்போது எனக்கு எந்த ஒரு குறிக்கோளும் கிடையாது எனக்கு பிடிச்ச வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறிவிட்டார். இது சக போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் இவர் பேசி முடித்ததும் அவசரஅவசரமாக ஹார்டின்களை வைத்த போட்டியாளர்கள் பின்பு யோசித்து அதனை எடுத்துவிட்டு அன் லைக் கொடுத்து விட்டனர். அதுமட்டுமல்லாமல் இவருடைய கருத்துக்கு பல எதிர் கருத்தும் கூறியிருக்கின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications