காலை எழுந்து..தினம் குளித்து...பாவனியை பாராட்டிய பிரியங்கா
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனியைப் பற்றி பிரியங்கா பேசியிருப்பது ரசிகர்களுக்கு எனர்ஜி கொடுத்திருக்கிறது.
பாவனியைப் பற்றி பிரியங்கா பேசியதைக் கேட்டதும் பாவனியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆகா...எங்க தலைவி தான் வேற லெவல் என்று ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் சமூகவலைத்தளமே அல்லல்படுகிறது.

உண்மையைச் சொல்லிய ப்ரியங்கா
பிக் பாஸ் 5வது சீசனில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கும் நேரத்தில் அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று ரசிகர்கள் பலத்தை பெருக்கி வருகின்றனர். இந்த வகையில் அனைவரையும் பின்னுக்குதள்ளிவிட்டு முதன்மையான இடத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் பாவனியைப் பற்றி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாட்டுத்தனமாக பிரியங்கா பேசியது தான் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே பரிச்சயமான முகம்
எங்கள் எல்லாரையும் விடவும் எப்போதுமே க்யூட்டாகவும்...நீட்டாகவும் இருக்கும் பவானிதான் அனைவருக்கும் பேவரைட் என்று பிரியங்கா பேசியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு செம ஹாப்பியாக இருக்கிறதாம். இந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பல புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்தாலும் அதில் பலர், இருந்த இடம் தெரியாமல் இருந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர்கள் வந்ததும் ரசிகர்களின் மனதில் டக்கென்று பதிந்து விட்டனர். அவர்களில் ஒருவர் டான் பாவணி ரெட்டியும், இவர் சின்னத்திரையில் ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்ததால் ரசிகர்களுக்கு நன்றாகவே பரிச்சயமாகி விட்டார்.

சின்னத்தம்பி நந்தினி
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக புகழின் உச்சத்துக்கு சென்ற அஸ்வினுடன் இரட்டைவால் குருவி என்னும் சீரியலில் அறிமுகமாகி சீரியலில் காலடி எடுத்து வைத்த பாவனி அதற்கு பிறகு சின்னத்தம்பி என்னும் சீரியலில் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். இப்ப வரைக்கும் இவருடைய பெயரை பலர் நந்தினி என்றுதான் அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு அந்த சீரியலில் அவர் கதையோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதோடும் ஒட்டிவிட்டார். நாளுக்கு நாள் ரசிகர்கள் இவருக்கு அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சமூக வலைத்தளத்தில் பலர் இவருக்காக பேன்ஸ் பேஜ்க்களையும், ஆர்மிகளையும் அமைத்து வருகின்றனர்.

அதிகரிக்கும் ஃபேன்ஸ் பேஜ்க்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசனில் இருந்து இப்ப வரைக்கும் பல ரசிகர்களுக்கு ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ்க்களை ஓபன் பண்ணி இருக்கின்றனர். ஆனால் அவர்களை எல்லாம் விடவும் இவருக்கு தினமும் பல பேன்ஸ் பேஜ்க்கள் இவருடைய பெயரில் ஓபன் ஆகிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஆதரவு மற்றும் எதிர்பார்ப்புகள் மட்டுமல்லாமல் இவர் கடைசி வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் இருப்பார் என அனைவரும் கூறி வருகின்றனர்.
Recommended Video

ப்ரஸ் பாவனி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்கள் எப்போதுமே வீட்டிற்குள் இருக்கிற மாதிரிதான் அரைகுறை உடையோடு சுற்றி கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தூங்கி முழித்து, சாப்பாடு முடித்து
மதியத்துக்கு மேல தான் குளித்து பிரஸ் ஆகி வருகிறார்களாம். ஆனால் பாவனி அவர்களை போன்று அல்லாமல் காலையில் அனைவரும் தூங்கி முழிப்பதற்கு முன்பே குளித்துமுடித்து பிரஷ்ஷாக எப்போதும் ஜம்மென்று பார்ப்பவர்களுக்கு புத்துணர்வு கூட்டி வருகிறார் என்று சக போட்டியாளர்கள் கூறிவருவது அவருடைய ரசிகர்களுக்கு மேலும் எனர்ஜியாக இருக்கிறதாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications