எளிமையாய், புடவையில் புன்னகைக்கும் ரச்சிதா...ரசிகர்களுக்கு கூறிய அறிவுரை
சென்னை: மழைக் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பவ்யமாய் அறிவுரை கூறியிருக்கிறார் ரச்சிதா.
உடல் மெலிந்து புடவையில் போட்டோ வெளியிட்ட ரச்சிதாவை பார்த்ததும் ரசிகர்கள் அசந்து போய் இருக்கின்றனர்.
பூ போட்ட புடவையில் வந்த இவர் கூறிய அறிவுரை பலருக்கும் தேவைதான் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
முன்பெல்லாம் அவ்வப்போது சமூக வலைதளங்களில் போட்டோக்களை போஸ்ட் செய்துவந்த ரச்சிதா... சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகிய பிறகு,அடுத்தடுத்து போட்டோக்களை அப்லோட் செய்து ஷோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். ஒருவேளை ரசிகர்கள் தனது முகத்தை மறந்து விடுவார்களோ..?! என்று நினைத்தாரோ என்னவோ..?

மறக்கமுடியாத மீனாட்சி
சரவணன் மீனாட்சி 2 சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் மீனாட்சியாக நீங்கா இடம் பிடித்த ரச்சிதா.. பல இளைஞர்களின் சின்னத்திரை கனவு நாயகியாக வலம் வந்தார். சேலை, தாவணி காஸ்ட்யூம்கள் இவருக்கு என்றே கண்டுபிடித்தது போல் அவ்வளவு அம்சமாக இவருக்கு பொருந்தி இருக்கும். சீரியல்களில் குடும்பப் பெண், கிராமத்துப் பெண் போன்ற கேரக்டர்களுக்கு இவர் போல் இருக்க வேண்டும் என்று இயக்குனர்கள் சுட்டிக்காட்டும் அளவிற்கு நேச்சுரல் பியூட்டி ஆக சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கன்னட திரைப்படத்தில் அறிமுகம்
சன் டிவி, விஜய் டிவி என்று சீரியல்களில் மட்டும் தன் திறமையை காட்டி வந்த ரச்சிதாவிற்கு, கன்னட சினிமா உலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்துள்ளது. தற்பொழுது கன்னட சினிமாவில் இவர் கவனம் செலுத்தி இருப்பதால்தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. விஜய் நடித்த 'காவலன்' படத்தை கன்னட ரீமேக்கில் கண்டம் பண்ணியிருந்த ஹீரோவுடன் இவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போல் வெளியான வீடியோக்கள்... 'என்ன மேடம்.. உங்க அழகுக்கு... போயும் போயும் இவர் கூடவா..!!?? என்று இவரது ரசிகர்களே நொந்து போகும் அளவிற்கு இருந்தது.

ரசிகர்களின் வேண்டுகோள்
ஸ்ரீவில்லிபுத்தூர் மருமகளாக இருந்தாலும் பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா, தன் சொந்த மாநிலத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவாரா.. உடனே ஓகே சொல்லிவிட்டார் போல, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலிருந்து விலகிய பிறகு,இவரை மிகவும் மிஸ் பண்ணுவதாக சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அவ்வாறு புலம்பி வரும் ரசிகர்களுக்கு எல்லாம் சற்று ஆறுதலாக இருக்கும்படி அடிக்கடி இப்பொழுது தனது போட்டோக்களை சமூக வலை தளங்களில் போஸ்ட் செய்து வருகிறார்.ஆனால் இவரது ரசிகர்கள் அவரை சின்னத்திரையில் மிகவும் மிஸ் பண்ணுவதாகவும்.. சீக்கிரம் மறுபடியும் ஏதாவது ஒரு சீரியலில் என்ட்ரி கொடுக்குமாறும் அந்த போஸ்டுக்கு கவலையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் நீங்கள் சீரியலில் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை.. இப்படி அடிக்கடி போட்டோக்களை அப்லோட் செய்வது தங்களுக்கு புத்துணர்ச்சியை தருவதாகவும்.. இதை இப்படியே மெயின்டன் பண்ணுங்க..' என்றும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications