அழகான மஞ்சப் புறா.. அதன் கூட நீல புறா.. ராதிகாவும், சரத்குமாரும்... அள்ளுதே!
சென்னை: ராதிகா அழகு என்றால்.. அவருடைய பேத்தி அவரை விட ரொம்ப அவழகுதான். இப்போது ராதிகா தனது பேத்தியை மடியில் வைத்து முகம் மலர புன்னகையுடன் இருக்கும் புகைப்படம் பேசுபொருளாகி யுள்ளது.
நடிகை ராதிகாவின் மகள் ரயான். எல்லோரும் அறிந்ததுதான். அவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும் திருமணமானது. இருவரும் சந்தோஷ தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு முதலில் பையன் பிறந்தான். பிறகு மகள் பிறந்தாள். மார்ச் மாதம் மகள் பிறந்தாள்.
தனது தாயாருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக தனது மகளுக்கு ராதியா மிதுன் என்று பெயரிட்டுள்ளார் ரயான். இந்த நிலையில் ராதிகா தனது பேத்தியை கையில் தூக்கியபடி காட்சி தரும் ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் டிபியாக மாற்றியுள்ளார்.

ராதிகாவின் பெருமிதம்
வாய் நிறைய புன்னகை.. கண்களில் பெருமிதம்.. கையில் பேத்தி என கலக்கலாக காட்சி தருகிறார் ராதிகா. கூடவே ராதிகாவின் கணவர் சரத்குமாரும் பெருமிதத்துடன் தனது மனைவி மற்றும் பேத்தியைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். பார்க்கவே படு சூப்பராக இருக்கிறது இந்த புகைப்படம். இப்படம்தான் இப்போது பரவி வருகிறது

சின்னத்திரையில் சித்தி
நடிகையாக வெற்றிகரமாக பெரிய திரையில் வலம் வந்தவர் ராதிகா. பின்னர் சின்னத் திரைக்கு வந்தார். அவர் தயாரித்து,நடித்த அத்தனை சீரியல்களுமே மக்கள் மத்தியில் பிரபலமாகின. குறிப்பாக சித்தி சீரியல். அதன் வெற்றி இமாலய வெற்றியாகும். இன்று வரை சித்தி வெற்றியை யாராலுமே முறியடிக்க முடியவில்லை. ராதிகாவுக்கே சித்தி என்ற செல்லப் பெயர் வந்து ஒட்டிக் கொண்டது.

சித்தி 2ம் பாகம்
சில மாதங்களுக்கு முன்புதான் சித்தி 2ம் பாகத்தை அறிமுகப்படுத்தினார் ராதிகா. அதுவும் சிறப்பாக ஓடி வந்தது. இந்த நிலையில்தான் கொரோனா குறுக்கிட்டு காரியத்தைக் கெடுத்து விட்டது. இப்போது சீரியல்கள் இல்லை. இந்த நிலையில் தனது குடும்ப உறுப்பினர்களோடு நிறைய செலவு செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது ராதிகாவுக்கு. அதை வைத்து அவ்வப்போது ஏதாவது போட்டோ, வீடியோ போட்டு வருகிறார் ராதிகா.
Recommended Video

மடியில் பேத்தியுடன் ராதிகா
அந்த வகையில்தான் தற்போது தனது பேத்தியைத் தூக்கி கொஞ்சியபடி காட்சி தந்துள்ளார் ராதிகா. கூடவே கணவரும். இந்த புகைப்படம் பல செய்திகளை சொல்கிறது. ராதிகாவின் மு கத்தில் அத்தனை பெருமை. சந்தோஷம் பூரிப்பு. கணவருக்கோ அதை விட பெருமிதம். மனைவியின் மகிழ்ச்சியைப் பார்த்து அவர் சந்தோஷமடைவது அதை விட சிறப்பு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications