சாமிகிட்ட வேண்டியது நடந்தது.. வினோத வழிபாடு செய்த ஆர்.ஜே பாலாஜி.. இப்படியும் ஒரு வேண்டுதலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.ஜே பாலாஜி தான் வேண்டிய வேண்டுதல் நிறைவேறியதற்காக கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் சிலை ஒன்றை செய்து வைத்திருக்கிறார். அந்த கோவிலில் தான் நினைத்தது நடந்தால் விதவிதமான சிலைகள் வைத்து தான் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவார்களாம். இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி வைத்த சிலை இணையத்தில் பலரையும் கவர்ந்து வருகிறது.

பொதுவாக மக்கள் பலரும் தங்களுக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டாலே கடவுளிடம் தான் முறையிடுவார்கள். நமக்கு பிடித்த வெவ்வேறு விதமான கடவுளிடம் நம்முடைய வேண்டுதல் வைத்து மன ஆறுதல் பெற்று வருவது வாடிக்கைதான். சில நேரங்களில் நாம் நினைத்த மாதிரி நடந்து விட்டால் அந்த கடவுளுக்கு பல்வேறு விதங்களில் காணிக்கை செலுத்தி வருவதை கேட்டு இருப்போம். பொதுவாக காணிக்கை என்றால் பணமாகவோ அல்லது பொருளாகவோ பலர் கொடுப்பார்கள்.

Television RJ Balaji

இன்னும் ஒரு சிலர் தங்களுடைய தலைமுடியை மொட்டை அடித்து காணிக்கை செலுத்துவார்கள், ஒரு சிலர் அலகு குத்தி, காவடி எடுத்து என்று விதவிதமாக பலவிதங்களில் செலுத்தி வருகிறார்கள். ஆனால் கடலூர் மாவட்டத்தில் தென்னம்பாக்கம் கிராமத்தில் அழகு முத்தையனார் என்ற கோவிலில் விதவிதமான சிலைகள் வடிவமைத்து கொடுத்து மக்கள் தங்களுடைய காணிக்கையை செலுத்தி வருகிறார்கள். பொதுவாக கோவில் என்றால் அங்கு கலை நயம் மிக்க அழகழகான சிலைகள் மற்றும் கோபுரங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் இந்த கோயிலில் விதவிதமான அலங்காரத்தில் சிலைகள் பக்தர்களால் செய்யப்பட்டு வேண்டுதல்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் பல சிலைகள் திருமண ஜோடிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், போலீஸ், டாக்டர், பொறியாளர்கள் என தங்களின் வேண்டுதல்களுக்கு ஏற்றார் போல பக்தர்கள் சிலைகளை வடிவமைத்து கோவிலில் வைத்துள்ளனர்.

புது BMW காரில் குழந்தைகளை கூட்டிட்டு போன காரணமே இதுதான்.. அம்மாவின் ஏக்கம்! KPY தங்கதுரை நெகிழ்ச்சி

இந்த கோவிலில் எப்போதுமே பக்தர்கள் கூட்டம் திருவிழா போல வந்து கொண்டே இருப்பார்களாம். அங்கு வைக்கப்பட்டிருக்கும் அத்தனை சிலைகளுக்கு மத்தியில் ஒரே ஒரு சிலை மட்டும் தனித்து இருக்கிறது. அது நடிகராகவும் இயக்குனராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் ஆர் ஜே பாலாஜி வேண்டுதலுக்காக வழங்கிய சிலைதானாம்.

நெப்போலியன் மகன் திருமணத்திற்கு ஓலைச்சுவடி வடிவில் பத்திரிக்கை.. திருமண தேதி திடீர் அறிவிப்பு

அந்த சிலை கிளாப் போர்டுடன் டேக் சொல்வது போல இருக்கிறது. அந்த சிலையின் முதுகு பகுதியில் ஆர்.ஜே பாலாஜி சரவணன் சென்னை என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆர் ஜே பாலாஜி கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர். அவரே எழுதி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி இந்த வேண்டுதலை செலுத்தி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+