"குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை”மருத்துவர்..நிறைமாதமாக இருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்த விஜய் டிவி ஜோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாய்மை என்பது ஒரு வரம் அது அனைவருக்குமே கிடைத்து விடுவதில்லை. அது தனக்கு இரண்டாவது முறையாக கிடைத்த மகிழ்ச்சியை ஆர் ஜே கவிதா ராஜ்மோகன் ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் கவிதாவிற்கு குழந்தை பிறக்கவே வாய்ப்பு இல்லை என்று கூறிய நிலையில் தற்போது இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பைனலிஸ்டாக வந்த ஆர் ஜே கவிதா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் அறிமுகம்

விஜய் டிவியில் அறிமுகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிட்சயமான ஆர் ஜே கவிதா ராஜ்மோகன் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார். இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஆர் ஜே வாக சக்தி எஃப்எம், சூரியன் எப்எம் போன்ற எஃப் எம் களில் நிகழ்ச்சிகளை ஆர் ஜே வாக பணியாற்றி கொண்டு இருந்திருக்கிறார். மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பைனல் லிஸ்ட் ஆக வந்து பலருடைய பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.

டாக்டர் கூறிய நெகட்டிவ் வார்த்தை

டாக்டர் கூறிய நெகட்டிவ் வார்த்தை

ஆர் ஜே கவிதா ராஜ்மோகன் திருமணத்திற்கு பிறகு ஒரு சில வருடங்கள் குழந்தை இல்லாமல் தான் தெரிந்திருக்கிறார்களாம். குழந்தைக்காக இவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவருக்கு நாட்கள் தள்ளிப் போகவே, அதை கன்ஃபார்ம் செய்யவதற்காக மருத்துவரிடம் சென்று இருக்கின்றார்கள். அப்போது அந்த மருத்துவர் இவருக்கு குழந்தை இருக்க வாய்ப்பே இல்லை. டெஸ்ட் டியூப் பேபி ட்ரை பண்ணலாம். ஆனால் அதுவும் சரியாக இருக்குமா? என்று சொல்ல முடியாது என்று குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக நெகட்டிவாகவே தகவலை கூறி இருந்தாராம். அதனால்
ஆர் ஜே கவிதா அழுதபடியே இருந்திருக்கிறார்.

கிடைத்தது முதல் பொக்கிஷம்

கிடைத்தது முதல் பொக்கிஷம்

தங்களுடைய எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றம் அடைந்த விரத்தியில் இருந்த கவிதா பிறகு வேற மருத்துவமனைக்கு சென்று டெஸ்ட் பண்ணி பார்த்து இருந்தாராம். அப்போது அவர்கள் பல மருந்துகளை கொடுத்து இருக்கிறார்கள். ஒரு சில மாதங்கள் கழித்து கவிதா முதல் முறையாக கர்ப்பமாக ஆகி இருக்கிறார். ஆனால் இவருடைய கர்ப்பத்திலும் பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தார்களாம். ஸ்கேன் செய்து பார்த்து துடிப்பு எல்லாம் சரியாக இருந்தால்தான் நாங்கள் எதுவும் சொல்ல முடியும் என்று கூறியிருந்தார்களாம். பதட்டத்தோடு தன்னுடைய கர்ப்பகால வாழ்க்கையை இவர் தொடங்கி இருக்கிறார். இவருடைய கணவரின் அரவணைப்பினால் இவர் முதல் குழந்தையை பல போராட்டங்களுக்குப் பிறகு பெற்றெடுத்திருக்கிறார்.

இரண்டாவது முறையாக கிடைத்த மகிழ்ச்சி

இரண்டாவது முறையாக கிடைத்த மகிழ்ச்சி

முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று இவர்கள் அதிகமாக ஆசைப்பட்டார்களாம். ஆனால் இவர்களுக்கு பிறந்தது ஆண் குழந்தையாம். ஆனாலும் பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த பொக்கிஷமாக அந்த குழந்தையை வளர்த்து வருகின்றனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பு கவிதா தன்னுடைய மகனுக்கு சின்னதாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கண்கலங்கியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியை தங்களுடைய ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கின்றார். நிறை மாதமாக இருக்கும் கவிதா ராஜ்மோகன் பகிர்ந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+