முனீஸ் ராஜா வெளியிட்ட அடுத்த வீடியோ.. ஒரு வாரத்திற்குள் இப்படியா?? நெட்டிசன்ஸ் கிண்டல்
சென்னை: சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜா திருமணம் முடிந்த பிறகு வெளியிட்ட வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
திருமணத்திற்கு பிறகு தனது காதல் மனைவிக்காக தான் செய்த செயலை குறித்து அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
திருமணம் முடிந்தே ஒரு வாரம் தான் ஆகிறது அதற்குள் இப்படி ஒரு ஏற்பாடா என்று நெட்டிசன்கள் முனீஸ் ராஜாவை கலாய்த்து வருகிறார்கள்.

சன் டிவியில் அறிமுகம்
சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலின் மூலமாக முனீஸ் ராஜா அந்த சீரியலில் சம்பந்தம் என்னும் கேரக்டரின் மூலமாக தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்திருந்தார். பல வருடங்களாக நாதஸ்வரம் சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த சீரியலில் இவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலிலும் தற்போது சீரியலில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ராஜ்கிரணின் குற்றச்சாட்டு
சின்னத்திரையின் மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளும் நடிகராக இருக்கும் முனீஸ் ராஜா தற்போது ராஜ்கிரணின் வளர்ப்பு மகளை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய ரகசிய திருமணம் சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் அது குறித்த வீடியோ ஒன்றை ராஜ்கிரண் வெளியிட்டு, இனி தனக்கும் தனது வளர்ப்பு மகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் அந்த சின்னத்திரை நடிகர் தனது மகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டார். தன்னிடம் இருக்கும் பணத்திற்காகவும் தன் பெயரைச் சொல்லி சினிமா வாய்ப்பு பெறுவதற்காக தான் இவர் இப்படி திருமணம் செய்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

50 லட்சத்தில் வீடு
நடிகர் ராஜ்கிரணின் பதிவிற்கு எந்த எதிர் பதிவும் வெளியிடாமல் இருந்து வந்த முனீஸ் ராஜா தற்போது தனது காதல் மனைவிக்காக அவருடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்திருப்பதாக வீடியோ ஒன்று தெரிவித்து இருந்தார். அதில் தனது மனைவி ஆசைப்பட்ட பிசினஸை இவர் தொடங்கி வைத்துள்ளதாகவும் அது இந்த மாத இறுதியில் தொடங்கப்பட இருப்பதாகவும் கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் இவருடைய சொந்த ஊரில் ரூபாய் 50 லட்சத்திற்கு வீடு ஒன்று கட்டப்பட்டு வருவதாகவும் அந்த வீடு விரைவில் திறப்பு விழா கொண்டாடப்படும் போது ரசிகர்கள்,நண்பர்கள், உறவினர்களோடு சிறப்பாக கொண்டாட இருப்பதாக கூறி இருக்கிறார் கூறியிருக்கிறார்.

ரசிகர்களின் கேள்விகள்
முனீஸ் ராஜா மற்றும் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளுக்கு திருமணம் முடிந்து ஒரு வாரம் தான் ஆகி இருக்கும் நிலையில் தனது மனைவிக்காக முனீஸ் ராஜா ஐம்பது லட்சம் அளவில் வீடு கட்டி இருக்கிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்களிடம் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதாம். அதனால் அவருக்கு வாழ்த்துக்களை கூறி, உங்களை ஏளனம் செய்தவர்கள் முன்பு நீங்கள் நிமிர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அதே சமயம் ராஜ்கிரணின் தீவிரமான ரசிகர்கள் மனைவிக்காக இவர் வீடு கட்டி இருந்தால் அதை எதற்கு சமூக வலைதளத்தில் அனைவரிடமும் தெரிவிக்க வேண்டும். இது ராஜ்கிரணை கடுப்பு ஏற்றுவதற்காக தான் இந்த வீடியோவா?? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications