2 முறை அபார்ஷன்.. 10 வருட ஏக்கம்.. 42 வயது கர்ப்பமாக இருக்கிறேன்.. ஆனால்...! நடிகை ஜூலி எமோஷனல்
சென்னை: பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து பிரபலம் அடைந்த நடிகை ஜூலி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் தான் தற்போது 42 வயதில் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அதோடு தனக்கு ஏற்கனவே இரண்டு முறை அபார்ஷன் ஆனது குறித்தும் உருக்கமாக ஜூலி பேசி இருக்கிறார். பலர் குழந்தை பிறப்பை தள்ளி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஜூலி மற்றும் அவருடைய கணவர் மனம் திறந்து பேசி இருக்கின்றனர்.

அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிகை ஜூலி நடித்திருக்கிறார். இந்த நிலையில் இப்போது நிறை மாத கர்ப்பமாக இருக்கும் ஜூலி தன்னுடைய கணவரோடு பிரபல தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்.
இந்த குழந்தை எங்க ரெண்டு பேருக்கும் ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா திருமணம் ஆகி பத்து வருஷம் ஆயிடுச்சு நான் முதல்முறையாக கர்ப்பமானேன். அது அபார்ட் ஆயிடுச்சு இரண்டாவது முறையாக கர்ப்பமான போது கர்ப்பப்பை டியூப்பில் பேபி பார்ம் ஆனதால அபார்ட் பண்ண வேண்டியது ஆயிடுச்சு. இப்ப மூன்றாவது முறையா கர்ப்பமா இருக்கிறேன். இதற்கான டெஸ்ட் எடுத்து கொடுத்துட்டு ரிசல்ட் வர்ற வரைக்கும் நாங்க ரெண்டு பேருமே ரொம்ப பயந்துட்டு தான் இருந்தோம்.
பிறகு ரிசல்ட்டில் குழந்தைதான்னு கன்ஃபார்ம் பண்ணினதும் ஹாஸ்பிடலே அழுதுட்டேன். எதற்காகனா.. சிலர் வயசாயிடுச்சு இதுக்கு மேல எப்படி குழந்தை பிறக்கும் என்று கேட்கிறார்கள். எனக்கு ஒரே ஆசைதான் என்னுடைய கணவரை சந்தோஷமா பாத்துக்கணும். என்னுடைய கணவருடைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் குழந்தையோடு இருக்கும்போது இவர் மட்டும் தனியா நிற்கிறப்ப எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.
எங்களுக்கு ட்ரீட்மென்ட் மூலமா தான் இப்ப குழந்தை பிறக்க போகுது. எனக்கு இப்போ 42 வயது ஆகிடுச்சு. இப்போதுதான் நான் கர்ப்பமாக இருக்கிறேன். நான் வளைகாப்பு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் போகும்போது நமக்கு இந்த மாதிரி எப்போ நடிக்கும்..? நடக்குமானு..? கூட ஏங்கி இருக்கிறேன். இரண்டு முறை குழந்தை அபார்ட் ஆகும் போதெல்லாம் பயங்கரமா டிப்ரஷன் ஆகி இருக்கிறேன்.
என்னுடைய கணவரும் என் குடும்பமும் தான் எனக்கு ஃபுல் சப்போர்ட். எனக்கு டான்ஸ்னா உயிர். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பண்ணி என்னுடைய மனநிலையை மாற்றிக் கொண்டு இருந்தேன். இந்த முறை கர்ப்பமானதும் முதல் ஐந்து மாதம் வரை யாருக்குமே சொல்லல. பயந்துட்டு தான் இருந்தோம். குறிப்பிட்ட வயசுக்கு மேல கர்ப்பமாகி குழந்தை பெத்துக்கிறதுக்கு அதிக மன தைரியம் வேணும்.
அதனால நான் எல்லாருக்கும் ஒரே ஒரு அட்வைஸ் தான் சொல்லுவேன். சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டா சீக்கிரமே குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள். வேலை எப்போ வேணாலும் கிடைக்கும். அதுக்காக எல்லாம் குழந்தை பிறப்பை தள்ளி போடாதீங்க என்று ஜூலி உருக்கமாக பேசியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருடைய கணவர் மணிகண்டன் பேசுகையில் எங்களால நிறைய பங்க்ஷனுக்கு போக முடியாது.
பலரும் இன்னும் குழந்தை இல்லையானு தான் கேப்பாங்க. அது ரொம்ப வலியா இருக்கும். அதனாலேயே எந்த பங்க்ஷனுக்கு போக மாட்டோம். இரண்டு நாளைக்கு முன்னாடி பூச்சூடல் நிகழ்வு வச்சிருந்தோம். அப்ப வளையல் போடும்போது "இந்த தருணத்திற்காகவே இத்தனை நாள் காத்திருந்தீங்க" என்று ஒருத்தவங்க சொல்லவும், அதுவரை சிரித்துக்கொண்டிருந்த நாங்க ரெண்டு பேரும் உடைந்து அழுதுட்டோம்.
உண்மையாகவே இந்த தருணத்திற்காக ரொம்பவே ஏங்கி இருக்கிறோம் என்று மணிகண்டனும் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் ஜூலி மற்றும் அவருடைய கணவர் மணிகண்டன் ஆசைப்பட்ட மாதிரியே குழந்தை ஆரோக்கியமாக பிறக்க நாமும் வாழ்த்துக்கள் கூறிக்கொள்ளலாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications