காருக்குள்ளே சகலமும்...கலக்கும் ஷிவானி...கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: புது கார் வாங்கிய ஷிவானியை கையிலே பிடிக்க முடியவில்லை எது செஞ்சாலும் காருக்குள்ளே தான் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
ஆனாலும் பிஎம்டபிள்யூ கார் வாங்க காசு இருக்கிற ஷிவானிக்கு ஒரு பேண்ட் நல்லபடியா வாங்க முடியலையே என்று நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கலாய்ப்பதற்கு வந்துவிட்டார்கள்.
காபி கப்போடு கலக்கலாக அமர்ந்திருக்கும் ஷிவானியை பார்த்து அசந்து போன ரசிகர்கள் கமெண்ட்களில் கவிதைகளை பாட தொடங்கிவிட்டார்கள் .

அங்க என்ன நடக்குது
தான் ஆசைப்பட்டு வாங்கிய புது காருக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும் ஷிவானி தற்போது காபி குடிப்பதற்காக கூட இந்த காரை விட்டு நான் இறங்க மாட்டேன் என்று விடாப்பிடியாக காருக்குள்ளேயே காபி குடித்துக் கொண்டு இருக்கிறார். அதுவும் அவர் காபி குடிக்கும் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள் எங்களுக்கும் காபி கிடைக்குமா என்று கமெண்டுகளை வீசி பார்க்கிறார்கள். சும்மாவே ரசிகர்களின் கமெண்டுகளை பார்த்து படிப்பதோடு மட்டுமே நிறுத்தி கொண்டிருக்கும் ஷிவானி இந்த மாதிரி கமெண்ட்களுக்குக் கூட பதில்களை அனுப்புவதே இல்லை. ஷிவானி பதில் அளிக்கவில்லை என்றாலும் நாங்கள் கடமை தவறமாட்டோம் என்று கடமை உணர்வோடு கமெண்டுகளை அனுப்பிக் கொண்டிருக்கும் ரசிகர்கள் கூட்டத்தால் இன்ஸ்டாகிராமே கொஞ்சம் திணறித்தான் இருக்கிறது.

ரசிகர்கள் அதிகம் தான்
ஷிவானி சீரியலில் நடித்து பிரபலமானதை விடவும் சமூக வலைத்தளத்தில் செம பிரபலம் ஆகிவிட்டார். வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் கதாநாயகிகளுக்கு இணையாக சின்னத்திரையில் கதாநாயகியாக இருந்தாலும் நானும் யாருக்கும் சளைத்தவரல்ல என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ரசிகர்கள் படை பட்டாலும் இவரை சுற்றிக் கொண்டிருக்க அனைவருக்கும் கெத்து காட்டி கொண்டிருக்கிறார். இவர் சீரியலில் அறிமுகமாவதற்கு முன்பு டிக்டாக், இன்ஸ்டாகிராமில் பெரும் பாப்புலராக இருந்திருக்கிறார். அதுவும் ஸ்கூலில் படிக்கும்போதே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்திருக்கிறார்.

ஸ்கூல் படிக்கும்போதே கலக்கல்
இன்ஸ்டாகிராம் மூலமாக இவருக்கு முதல் சீரியல் வாய்ப்பு கிடைத்து இருந்தாலும் இவர் கிடைத்த வாய்ப்பில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார். முதல் சீரியலில் பாவாடை தாவணியில் பருவப் பெண்ணாக வலம் வந்து கொண்டிருந்த இவர், அந்த சீரியலில் நடிக்கும்போது ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தாராம். ஆனாலும் அப்பவே இவர் கதாநாயகியாக கலக்கிவிட்டார். முதல் சீரியலின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து சீரியல் வாய்ப்பு வந்த வண்ணமாகவே இருந்தது. இவரும் அடுத்ததாக கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா என சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை சீரியலுக்கு டாட்டா காட்டி விட்டார். இதனால் இவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் ஆகிவிட்டனர்.

பிக்பாஸில் ஏமாற்றம்
சீரியலில் இவருடைய வெற்றியை தொடர்ந்து இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தையும் பார்த்த விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரை களமிறக்கி விட்டது. இந்த நிகழ்ச்சியில் இவர் டாப்பில் வருவார் என்று எதிர்பார்த்த இவருடைய ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் இருந்திருக்கிறது. இவர் இந்த நிகழ்ச்சியில் சரியாக விளையாடவில்லை என்று இவருடைய ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணி கொண்டிருந்தனர். அதனாலேயே இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து மீண்டும் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்த வேண்டும் என ஆர்வமாக இருந்தனர். ரசிகர்களின் ஆசையின் படியே பாதியில் இந்த நிகழ்ச்சியிலிருந்து வந்து விட்டார். ஆனால் அதற்குப் பிறகு பழைய மாதிரி போட்டோ ஷூட்டுகளில் கவனத்தைச் செலுத்தவில்லை. உடற்பயிற்சியில் வெறிகொண்டு தன்னுடைய அழகை மெருகேற்றிக் கொண்டிருந்தார்.

விட்ட இடத்தை பிடித்துவிட்டாரே
தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் இருக்கும் போது இவருடைய உடல் அமைப்பை வைத்து பலர் கிண்டல் செய்து கமெண்டுகளை போட்டு கொண்டிருந்ததும் இவருடைய இந்த வேதத்திற்கு காரணமாக கூட இருந்திருக்கலாம். தன்னைப்பற்றி கலாய்த்த ரசிகர்களின் முன்பு கலக்கலாக வரவேண்டுமென்று இவரும் விடா முயற்சியாக பயிற்சி எடுத்து தற்போது மீண்டும் பழைய ஃபார்மில் வந்துவிட்டார். அதனாலேயே இவருக்கு திரைப்படங்களிலும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. இவர் தற்போது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் வீட்டில் இருக்கும் போது இவர் வாங்கிய அதே காருக்குள்ளேயே போட்டோ சூட்டை தொடங்கிவிட்டார். ஏற்கனவே வீட்டு விலங்குகளின் மீது அதிக பாசம் கொண்ட இவர் தற்போது காரின் மீதும் செம பாசமாக இருப்பதை பார்த்து பலர் பொறாமைப்பட்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications