நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு
நெல்லை: ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது அசரப் அலி (26) என்பவர், அங்குள்ள அம்மா உணவகம் எதிரே ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார். வழக்கம்போல் செயல்பட்டு வந்த அவரது கடையில் நேற்று நடந்த சம்பவம்தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி
26 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுப்பதற்காக அந்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு தெரியாமல் முகமது அசரப் அலி தனது செல்போனில் அந்த பெண்ணின் புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணை ஆபாச கோணத்தில் வீடியோவும் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை எப்படியோ அறிந்துகொண்ட அந்த பெண் உடனடியாக தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கணவர் வந்ததும் ஓட்டம்
தகவல் அறிந்த கணவர் உடனடியாக கடைக்கு விரைந்து வந்து அசரப் அலியிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், நிலைமை மோசமாகும் என்பதை உணர்ந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
அவசரத்தில் அவர் பயன்படுத்திய செல்போன் மட்டும் அங்கேயே சிக்கியது. இதையடுத்து அந்த தம்பதி நேரடியாக பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

போலீசாருக்கு காத்திருந்த ஷாக்
புகாரின் அடிப்படையில் போலீசார் கைப்பற்றப்பட்ட செல்போனை ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
அதில் 20-க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடைக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களையும் தொலைவில் இருந்து ரகசியமாக புகைப்படம் எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதிய சட்டத்தின் கீழ் வழக்கு
இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 77-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பிறர் அறியாமல் அவர்களின் அந்தரங்கத்தை கண்காணிப்பது மற்றும் பதிவு செய்வது தொடர்பான பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மேற்பார்வையில் செயல்பட்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இறுதியில் கைது
பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு முகமது அசரப் அலியை போலீசார் கைது செய்தனர். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜெராக்ஸ் கடையில் தொடங்கிய இந்த சம்பவம், செல்போனில் இருந்த தகவல்களால் பெரிய அதிர்ச்சி விவகாரமாக மாறியுள்ள நிலையில், அந்த நபரிடம் இருந்து மேலும் என்னென்ன தகவல்கள் வெளியாகப் போகின்றன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!













Click it and Unblock the Notifications