சிறகடிக்க ஆசை: முத்துவுக்காக அருணை மிரட்டிய மீனா.. விஜயா கண்ட காட்சி.. பெரிய பஞ்சாயத்து வந்தாச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 17ஆம் தேதிக்கான எபிசோடில் அருண் மற்றும் சீதாவிற்கு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து வைப்பதற்காக மீனா சம்மதம் தெரிவிக்கிறார். அதேபோல முத்துக்காக அருணிடம் மீனா வாக்குவாதமும் செய்கிறார். மறுபக்கத்தில் விஜயா கண்ட காட்சியால் அதிர்ச்சியில் இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா சாமியிடம் பதிவு திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்று சீட்டு போட்டு பார்க்கிறார். அதில் பதிவு திருமணம் செய்யலாம் என்று வருகிறது. உடனே மீனாவும் நான் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணுவதற்கு சம்மதிக்கிறேன் என்று சொன்னதும் சீதா சந்தோஷப்பட்டு அருணுக்கு போன் பண்ணி சொல்கிறார். அப்போது மீனா நான் உங்க மாமாவை மீறி இதை பண்றது எனக்கு கஷ்டமா இருக்கிறது. ஆனால் நீ அப்பா இருந்தா என் ஆசையை நிறைவேற்றி இருப்பார் என்று சொன்னா... அதனால தான் இந்த முடிவு எடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

சந்தோஷத்தில் அருண்
மறுபக்கத்தில் சீதா சொன்ன விஷயத்தை கேட்டு அருணும் சந்தோஷப்படுகிறார். அப்போது சீதா மீனாவிடம் அம்மா கிட்ட சொல்லிடலாமா என்று கேட்க, அவங்க மாமாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டாங்க இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று சொல்கிறார். மறுபக்கத்தில் முத்து சவாரிக்கு போனா போது ஒருவர் பணத்தை கொடுக்காமல் வேக வேகமாக சூட்டிங் ஸ்பாட் நடக்கும் இடத்திற்கு போய்விடுகிறார். அதனால் அவரை துரத்தி பின்னாடியே ஓடி வந்த முத்துவை அங்கிருக்கும் ஒருவர் தடுத்து நிறுத்துகிறார்.
முத்து போட்ட நாடகம்
அப்போது தனக்கு பணம் தராமல் வந்து விட்டார் என்று முத்து சொன்னதும் அவர் கொடுக்க வேண்டிய காசை நான் கொடுக்கிறேன் கொஞ்சம் உட்காரு என்று சொல்லிவிட்டு போகிறார். அப்போது அங்கு எம தர்மராஜா வேஷம் போட்டவருக்கு சரியாக நடிக்க தெரியாமல் இருக்கிறது. அதனால் முத்து இது ஈசியான டயலாக் தானே இதை பேச மாட்டேங்கறீங்க இரண்டு வாட்டி சொன்னா கத்துக்க போறாரு என்று சொன்னதும், நீ பேசுவியா என்று அந்த நபர் கேட்கிறார்.

அருணுக்கு பதிலடி
உடனே முத்து டயலாக்கை சொல்கிறார். மறுபக்கத்தில் மீனா அருணை சந்தித்து பேச, அருண் ரொம்ப சந்தோஷம் என்று சொல்கிறார். அதற்கு மீனா எனக்கு இப்ப கூட என் புருஷனுக்கு தெரியாம இதை பண்றது குற்ற உணர்ச்சியா இருக்கு என்று சொன்னதும், அருண் முத்துவை பற்றி தப்பாக பேச வருகிறார். அதனால் கோபமான மீனா, அவரை பற்றி தப்பா பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? அவர் பக்கமும் நியாயமும் நேர்மையும் இருக்கு.
மீனாவின் மிரட்டல்
நீங்க எந்த விதத்திலேயே தப்பு பண்ணலையா? அந்த வயசான தாத்தா பாட்டியை ரோட்ல தள்ளி விட்டிங்க, அது இல்லாம அவர் மேல தேவையில்லாமல் கேஸ் போட்டீங்க. இப்போ அவர் செஞ்ச உதவிக்கு நீங்க செஞ்ச மாதிரி பண்ணுனீங்க. சீதா லவ் பண்ற ஒரே காரணத்துக்காக தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன். நீங்க அவளை சந்தோஷமா பாப்பீங்கன்னு நம்புறேன் என்று சொல்ல, நான் கண்டிப்பா சீதாவை நல்லா பார்த்துப்பேன் என்று அருண் சொல்கிறார்.
மனோஜ் சந்தேகம்
அதற்கு மீனா சீதாவை லவ் பண்ணாம நீங்க பொண்ணு கேட்டு வந்தீங்கனா நான் உங்க கல்யாணத்துக்கு சம்மதித்து இருக்கவே மாட்டேன். அதுபோல இதை வச்சு என் புருஷனை ஜெயிச்சுட்டேன்னு நீங்க நினைக்காதீங்க இன்று மீனா அருணுக்கு பதிலடி கொடுக்கிறார். மறுபக்கத்தில் மனோஜ் ரூமில் சாமியார் சொன்ன விஷயத்தை வச்சி எங்க அம்மாவுக்கு பெருசா நம்பிக்கை வரலைன்னு தோணுது என்று சொல்கிறார்.

முத்துவின் வேஷம்
அதற்கு ரோகிணி அவங்க கண்டிப்பா நம்புவாங்க. இப்ப வேணா பாரு அவங்க சிகப்பு கலர் புடவை கட்டி இருப்பாங்க என்று சொல்லி, கதவை திறந்து பார்க்க அங்கு விஜயா வேற புடவை கட்டி இருக்கிறார். பிறகு எல்லோரும் டைனிங் டேபிளில் இருக்கும்போது வீட்டு வாசலில் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டு விஜயா பயந்து திரும்பி பார்க்கிறார். அப்போது முத்து எமதர்மன் வேஷம் போட்டு நின்று கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications