சிறகடிக்க ஆசை: வாக்குவாதத்தில் ரோகிணி, மீனா.. முத்துக்கு சப்போர்ட் செய்த விஜயா.. மனோஜ் சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் ரோகிணிக்கு அட்வைஸ் செய்து மீனா பேசியதால் ரோகிணி மீனாவிடம் வாக்குவாதம் செய்கிறார். அதே நேரத்தில் முத்துவுக்கு சப்போர்ட்டாக விஜயா பேச அதனால் மனோஜ் கோபப்படுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரவியும் ஸ்ருதியும் எங்களுடைய ரெஸ்டாரண்டுக்கு மீனா செய்து கொடுத்த வடையால் நல்ல பேரு கிடைச்சிருக்கு என்று எங்களுக்கு கிப்ட் கொடுத்து இருக்காங்க அதில் பாதி பணத்தை நாங்க மீனாவுக்கு கொடுக்கிறோம் என்று ஸ்ருதி கொடுக்க மீனா முதலில் வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு வாங்கி கொள்கிறார். அப்போது ரவி நீங்க மாலை கட்டுறதோடு சேர்ந்து சைடு பிசினஸ் ஆக இந்த ஸ்நாக்ஸும் செய்யலாம், நீங்க பிசினஸ்வுமனாக முன்னேறிடுவீங்க என்று சொல்கிறார்.

முத்து கொடுத்த பதிலடி
அதைக்கேட்ட மனோஜ் போதும்டா ரெண்டு வாழைப்பூ வடை கட்டி கொடுத்தா பிசினஸ்மேன் ஆகிடுவாங்களா? இவங்களுக்கு பிசினஸ் பத்தி என்ன தெரியும் என்று நக்கலாக கேட்க, அதற்கு முத்து நீ அடுத்தவங்க செஞ்ச பொருளை வாங்கி விற்கிற அவ்வளவுதான் செய்யற ஆனா மீனா தன்னுடைய சொந்த புத்தியால் கிரியேட்டிவா செய்யுற உனக்கு அவ எவ்வளவோ மேல் என்று சொன்னது விஜயா டேய் நமக்கு வாச்சது சரியில்லன்னா எல்லாரும் இப்படித்தான் கண்டபடி பேசுவாங்க என்று மனோஜை திட்டுகிறார்.
விஜயா சொன்ன வார்த்தை
அதோடு மீனா மாலை கட்டி சொந்தமா பிசினஸ் பண்ணுற ஆனால் ரோகிணி பார்லருக்கு கூலி வேலைக்கு தானே போய்கிட்டு இருக்கிறா என்று விஜயா திட்டுகிறார். அதற்கு அண்ணாமலை யாரையும் மட்டம் தட்டி பேசாத என்று திட்டுகிறார். பிறகு மீனா முத்துவிடம் பாவம் ரோகிணி தேவை இல்லாமல் நம்மளால அத்தை கிட்ட பேச்சு வாங்குறாங்க என்று சொல்ல, அதற்கு நீ எத்தனை முறை அம்மாகிட்ட பேச்சு வாங்கியிருக்கிறா? ஆனால் எப்பவாவது அந்த பார்லர் அம்மா உனக்காக வருத்தப்பட்டு இருக்காங்களா? அம்மாவிடம் இன்னும் கொஞ்சம் ஏத்தி தான் விடுவாங்க. ஆனால் நீ மட்டும் ஏன் தான் இப்படி இருக்கியோ என்று திட்டுகிறார்.
ரவி கேட்ட கேள்வி
அடுத்ததாக இரவு மாடியில் ரவி, மனோஜ், முத்து மூன்று பேரும் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது மனோஜ் சோகமாக இருக்க ரவி ஏன்டா நீ மட்டும் இப்படி இருக்கிற உன் கண் முன்னாடியே அண்ணியை அம்மா திட்டுறாங்க நீ எதுவும் கேட்காமல் இருக்கிறா? என்று கேட்க, ரோகிணி பக்கம் பேசுறதா இல்ல அம்மா பக்கம் பேசுறதானு தெரியல என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு ரவி, அண்ணி உனக்காக தானே ஏமாற்றி உன்னை கல்யாணம் பண்ணி இருக்காங்க அப்போ நீ அவங்க பக்கத்துல தான் பேசணும் என்று சொல்கிறார்.

மனோஜ் புலம்பல்
அப்போ அம்மா என்னை நிரந்தரமா மறந்திடுன்னு சொல்றாங்க எனக்கு அவங்களும் முக்கியம் என்று சொல்ல, அதற்கு முத்து முதலில் ஒன்று தெரிந்துகோ, யாரு நமக்காக யோசிக்கிறாங்க? யார் நம்ம கூட அதிக நாள் இருப்பாங்கன்னு புரிஞ்சு நடந்துக்க என்று அட்வைஸ் கொடுக்க, அதற்கு மனோஜ் திமிராக பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் மீனா, ரோகிணி, ஸ்ருதி மூன்று பேரும் கிச்சனில் பால் காய்ச்சி குடித்தபடி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
ஸ்ருதி கேட்ட கேள்வி
அப்போது ரோகிணி சோகமாக இருப்பதை பார்த்து ஸ்ருதி சோகமா இருக்கீங்க என்று கேட்க, அத்தை எப்போதும் திட்டிக்கிட்டே இருக்கிறாங்க இதுக்காக என்ன பண்றதுன்னு தெரியல என்று சொல்ல, அதற்கு மீனாவிடம் இதுக்கு ஏதாவது ஐடியா கொடுங்க என்று ஸ்ருதி சொல்ல, நான் தான் ஏற்கனவே அவங்க கிட்ட சொல்லி இருக்கிறேன் பார்வதி ஆன்ட்டி கிட்ட பேசினா தான் இதுக்கு சரியா வரும். அவங்க தான் அத்தைக்கு புரியிற மாதிரி எடுத்து சொல்லுவாங்க என்று மீனா சொல்ல, ஸ்ருதி என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு என்று சொல்கிறார்.
மீனா கொடுத்த ஐடியா
என்ன ஐடியா என்று கேட்கும் போது அதை மாந்திரீகம், சாமியார் போன்றவற்றை ரொம்ப நம்புவாங்க அதனால் ஒரு சாமியாரை செட் பண்ணி அவரிடம் இந்த மருமகள் உங்க கூட இருந்தா தான் உங்களுக்கு நல்லது. உங்க பையனுக்கு நல்லது என்று ஏதாவது சொல்ல சொல்லுவோம். அப்படி சொன்னால் அத்தை கேட்பார்கள் என்று சொல்ல, அதற்கு ரோகிணி ஏற்கனவே ஆன்ட்டியிடம் நான் பொய் சொன்னேன்னு என் மேல கோபமா இருக்காங்க. இப்போ இதையும் செஞ்சா ஆன்ட்டி என் மேல ரொம்ப கோபப்படுவாங்க. அப்புறம் என்கிட்ட பேசவே மாட்டாங்க என்று சொல்ல, அதற்கு ஸ்ருத இந்த விஷயம் அத்தைக்கு தெரியாம பாத்துக்கலாம் என்று சொல்கிறார்.
ரோகிணி கேட்ட கேள்வி
அதற்கு ரோகிணி என்னை மாட்டி விடுறதுக்கே இந்த வீட்டில் ரெண்டு பேரும் இருக்காங்களே என்று மீனாவை பார்த்து ரோகிணி சொன்னதும் மீனா எங்களுக்கு உங்களை விடனும்னு ஆசை ஒன்னும் கிடையாது. உங்க நல்லதுக்காக தான் நாங்க வீட்டில் உங்க மாமா பற்றிய உண்மையை சொன்னோம் என்று சொல்ல அதற்கு ரோகிணி நான் நல்லா இருக்கணும்னு நீங்க உண்மையிலேயே நினைச்சிருந்தா என்னை தனியா கூப்பிட்டு இதை சொல்லி இருக்கலாமே என்று கேட்கிறார்.

மீனா பதிலடி
அதற்கு மீனா, நீங்க அப்பவும் இந்த உண்மையை வீட்டில் சொல்லி இருக்க மாட்டீங்க மேலும் மேலும் பொய் சொல்லிக்கிட்டே இருந்திருப்பீங்க. அதனால தான் நாங்க அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வீட்டில் வந்து சொன்னோம். அதுபோல மாமாவை நாங்கள் எந்த சூழ்நிலையும் ஏமாற்ற மாட்டோம் என்று மீனா சொன்னதும் ரோகிணி கோபமாக அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு அடுத்த நாள் காலையில் ரோகிணி பார்வதி வீட்டிற்கு வருகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications