சிறகடிக்க ஆசை: மீனா கண்டுபிடிச்ச விஷயம்.. போலீசுக்கு போன் செய்த முத்து! அதிர்ச்சியில் மனோஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 22ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் ஏமாற்றியதற்காக முத்து போட்டு அடிக்கிறார். அதே நேரத்தில் திருமணத்தில் நடந்த பெரிய சம்பவத்தை மீனா கண்டுபிடித்து இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து குடிக்கவில்லை என்று எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. அப்போது குடித்துவிட்டு திரிந்த இரண்டு குடிகாரர்களை கண்டுபிடித்து முத்து அவர்களிடம் என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லும்படி சொல்கிறார். அதற்கு அவர்கள் முத்து மீது சரக்கு கொட்டிடுச்சு என்ற உண்மையை சொல்கிறார்கள். அதனால் மீனா முத்துவிடம் சாரிங்க தெரியாம பேசிட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

முத்துக்கு தெரிய வந்த உண்மை

அப்போது முத்து, ரவியிடம் நான் உன்கிட்ட என்னைக்காவது பொய் சொல்லி இருக்கேனாடா? நீயும் என்னை நம்பல இல்ல என்று கேட்க, அதற்கு ரவி அண்ணி வந்து சொன்னாங்க அதனால நம்பிட்டேன் என்று சாரி கேட்கிறார். அப்போது மீனா உங்க அண்ணன் தான் நீங்க குடிச்சி இருக்கிறதா உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி இருக்காரு. அவங்க வந்து என்கிட்ட சொன்னதுனால தான் நான் உங்க மேல கோபப்பட்டு திட்டிட்டேன் மன்னிச்சிடுங்க என்று நடந்த விஷயத்தை மீனா சொன்னதும் அந்த ஓடுகாளி அதான் எல்லாத்துக்கும் காரணமா அவ எங்க இருக்கா என்று தேடிக்கொண்டு போகிறார்.

திருடர்கள் என்ட்ரி

அப்போது ரோகிணியும் மனோஜும் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும்போது முத்து மனோஜின் ஃபோனை புடுங்கி கொண்டு கொஞ்ச நேரம் ஆட்டம் காட்டுகிறார். பிறகு நான் குடிக்கவில்லை என்று இப்போ நிரூபணம் ஆகி இருக்கு நீ என்கிட்ட மன்னிப்பு கேளுடா என்று மிரட்டி கொண்டிருக்கிறார். அடுத்ததாக ஒரு கணவன் மனைவி மண்டபத்தில் வந்து உட்காருகிறார்கள். அவர்கள் அங்கே இருப்பவர்களின் நகைகளை திருடுவதற்காக பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணாமலை கேட்ட கேள்வி

மறுபக்கத்தில் பரசு மீனாவிடம் முகூர்த்தத்திற்கு நேரமாயிடுச்சு பொண்ணை கூட்டிட்டு வாமா என்று சொல்ல, முத்து அண்ணாமலை பக்கத்தில் சேர் போட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நீ மீனாவை திட்டினியா என்று அண்ணாமலை கேட்க, அதற்கு முன்னாடிலாம் நான் குடிச்சிட்டு வந்தா கூட மீனா கண்டுபிடிச்சுக்க மாட்ட ஆனா இப்போ நான் குடிக்காமலே என்னை திட்டிட்டா என்று சொல்கிறார்.

மீனா கண்ட காட்சி

அதற்கு அண்ணாமலை ஒரு தடவை தப்பு பண்ணி அடுத்தவங்களை கஷ்டப்படுத்திட்டா எப்பவும் இவங்க இப்படித்தான் இருப்பாங்க என்ற ஒரு சிந்தனை எல்லோருக்கும் வந்துடும் சரி விடு என்று அண்ணாமலையும் சொல்கிறார். அடுத்ததாக மீனா பரசுவின் மகள் பவானியை கூட்டிக்கொண்டு வருவதற்காக ரூமிற்குள் போக அங்கிருந்த திருட்டுபெண் சொந்தக்காரர்கள் போல சகஜமாக பேசுகிறார்.

மீனாவிற்கு வந்த சந்தேகம்

பிறகு அந்தப் பெண் கதவை பூட்டிக் கொண்டு வரேன் என்று போகும் போது கையில் இருந்த கத்திரிக்கோல் கீழே விழுகிறது. இதனால் மீனாவுக்கு சந்தேகம் வருகிறது. நீங்க யாரு உங்களுக்கு என்ன சொந்தம் என்று கேட்க, நான் மாப்பிள்ளையோட அக்கா நாத்தனார் என்று சொல்லி சமாளிக்கிறார். மீனாவிற்கு சந்தேகம் வருகிறது.

முத்து கொடுத்த பதில்

கொஞ்ச நேரத்தில் முத்துவிடம் சென்று எனக்கு சந்தேகமா இருக்கு என்று சொல்ல, முத்து இப்போதானே என்னை சந்தேகப்பட்ட அதுதான் குடிக்கலன்னு நிரூபிச்சிட்டேனே அப்புறமும் சந்தேகமா என்று கேட்க, இல்லை இங்க ஒரு பொண்ணு மாப்பிள்ளை ஓட அக்கா நாத்தனார்னு சொன்னாங்க. கையில கத்திரிக்கோல் வச்சிருந்தாங்க. மாப்பிள்ளைக்கு தான் அக்காவே கிடையாதே என்று சொல்ல, ஆமால நான் இதை யோசிக்கவே இல்ல. ஏதோ பிரச்சனை பண்ணி கல்யாணத்தை நிறுத்திடுவாங்களோனு பயமா இருக்கு என்று சொன்னதும் முத்து நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி அனுப்புகிறார்.

பிறகு முகூர்த்தம் முடிந்ததும் ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் கிளம்ப அண்ணாமலை நானும், விஜயாவும் கிளம்புகிறேன் என்று கிளம்புகிறார்கள். இவர்கள் நான்கு பேரும் கிளம்பி விடுகிறார்கள். முத்து மீனா மண்டபத்தில் இருந்து அந்த லேடியை தேடி பார்க்க மீனா பேக்குடன் அவர் போவதை பார்த்து பின் தொடர்கிறார். பிறகு முத்துவும் வந்து அவர்களை மடக்கி பிடிக்கப் போகிறார்கள்.

மாட்டிய திருடர்கள்

அவர்கள் முத்து மற்றும் மீனாவை ஏமாற்றிவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறுகிறார்கள். அப்போது முத்து அந்த ஆட்டோவை நிறுத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்கிறார் உடனே அவர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி வெளியே ஓடுகிறார்கள். மீண்டும் மீனாவும் முத்துவும் அவர்களை பின்தொடர்ந்து ஓடும்போது மீனா கையில் அந்த பெண் வெட்டி விடுகிறார்.

போன் செய்த முத்து

ஆனாலும் நகை பையை மீனா பிடித்துக் கொள்கிறார். பிறகு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் ஓடி வந்து என்னன்னு பார்க்கிறார்கள். அப்போது அந்த பெண் பின்னாடி சிலர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மீனா கையில் இருந்த பேக்கில் என்ன இருக்கிறது என்று பார்க்கும்போது உள்ளே எல்லாம் நகையாக இருக்கிறது. இதனால் இவர்கள் திருடன் தான் வந்தார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. அப்போது பரசுராமன் ரொம்பவும் சந்தோஷப்படுகிறார். அதற்கு முத்து இந்த விஷயத்தை பவானி கிட்ட சொல்ல வேண்டாம் அவ பயந்துருவா இத நாம போலீசுக்கு சொல்லுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+