சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றிய உண்மை முத்துக்கு தெரிந்து விட்டது! ஆனால் மீனா கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 6ஆம் தேதிக்கான எபிசோடில் ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து இருந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ரோகிணி பற்றிய உண்மை எப்போது தெரியும் என்று எதிர்பார்த்து இருந்த தருணம் இன்று நடந்திருக்கிறது. ரோகிணி நிஜ பெயர் கல்யாணி தான் அவர்தான் கிரிஷின் அம்மா என்ற உண்மை முத்து கண்டுபிடித்திருக்கிறார். இனி என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துக்கு சந்தேகம் வந்ததால் ரோகிணியை தனியாக அழைத்த மீனா இன்னும் ஏழு நாளில் உன்னை பற்றிய உண்மையை சொல்ல போறேன் என்று சொல்லி இருக்கிறார். இதனால் ரோகிணி பயத்தில் இருக்கிறார். அதைத்தொடர்ந்து ரோகிணியின் முதல் கணவர் சேகரின் அண்ணன் முத்துவுக்கு போன் செய்து வரவைத்து அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

அப்போது தான் ட்ரீட்மென்ட்காக வந்த விஷயம் சீக்கிரமாக நிறைவேறும் என்று டாக்டர் சொல்லி இருக்காங்க, இனி நாங்க ஊருக்கு போறோம் என்று சொல்லிவிட்டு அதற்கு முன்பு போய் என்னுடைய தம்பி கல்யாண போட்டோவை பிரிண்ட் போடணும் என்று சொல்கிறார். முத்துவும் சரி என்று அவர்களை அங்கு கூட்டிட்டு போகிறார். அப்போது போனை காரிலேயே அவர் விட்டு விட்டு சென்று விடுகிறார்.

அந்த நேரத்தில் அவருக்கு போன் வந்ததும் முத்து அந்த போனை கொண்டு போய் ரோகிணி உறவினரிடம் முத்து கொடுக்கிறார். அந்த நேரத்தில் போட்டோ ரெடியாகி விடுகிறது. ரோகிணி உறவினர் போனில் தன்னுடைய நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து அந்த போட்டோவை பார்க்கிறார். அதை பார்த்ததும் அதிர்ச்சி ஆகிறார்.

அவரிடம் இது யார் என்று கேட்கும் போது, இதுதான் என்னுடைய தம்பி சேகரின் பொண்டாட்டி கல்யாணி, நீங்க கூட கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு கோவிலில் வைத்து ஒரு சின்ன பையனை பார்த்தீங்களே அவனை ஏற்கனவே எனக்கு தெரியும்னு சொன்னீங்களே, கிரிஷ் அவனோட அம்மா தான் இவங்க அந்த பொண்ணு இப்பவும் சென்னையில தான் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு இருக்கிறா எங்க கூட பேச கூட விரும்பலன்னு சொல்லிட்டா என்று சொன்னதும் முத்து அதிர்ச்சியாகி நின்று கொண்டிருக்கிறார்.

பிறகு அவர்களை காரில் ட்ராப் செய்து விட்டு வீட்டுக்கு கோபமாக வருகிறார். மறுபக்கத்தில் மனோஜ் ஷோரூமில் இருக்கும்போது அவருடைய பிஏ ஜீவா வந்து பேசுகிறார். கிரிஷை தத்தெடுக்க லண்டனில் உள்ள ஒரு தம்பதி ஆசைப்படுவதாகவும் அதற்கு அவர்கள் 25 லட்சம் தர ரெடியாக இருப்பதாகவும் சொல்கிறார். பணம் கிடைக்கிறது என்றதும் மனோஜ்க்கு சந்தோஷமாகி விடுகிறது.

அந்த நேரத்தில் ரோகிணி வந்ததும் இது பற்றி ரோகிணியிடம் சொல்ல, அதற்கு ரோகிணி அதெல்லாம் வேண்டாம் முத்துக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவான் என்று சொல்கிறார். ஆனால் மனோஜ் தொடர்ந்து ரோகிணியின் மனதை மாற்ற முயற்சி செய்கிறார். அதைத்தொடர்ந்து மீனா தன்னுடைய தோழிகளோடு சேர்ந்து பூ கட்டிக் கொண்டிருக்கிறார்.

சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு கெடு விதித்த மீனா.. இனி அடுத்த சம்பவம் ரெடி! முத்து கண்டுபிடிக்கும் உண்மை!
அப்போது அங்கிருக்கும் எல்லோரும் மீனா ஏன் டல்லா இருக்க என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு ஒன்றும் இல்லை என்று மீனா சமாளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ரோகிணி மீனாவிடம் தனியாக பேசணும் என்று கூப்பிட்டு சென்று நீங்க கொடுத்த ஏழு நாள் எனக்கு போதாது என்று கெஞ்சி கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கு மீனா சம்மதிக்கவில்லை ஏழு நாளில் நீ உண்மையை சொல்லல என்றால் நான் கண்டிப்பாக குடும்பத்திடம் சொல்லிடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.

கடைசியாக முத்து கோபமாக வீட்டிற்கு வந்து எல்லோரும் ஹாலுக்கு வர சொல்கிறார். அப்போது இத்தனை நாள் பார்லர் அம்மா நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டு இருந்து இருக்கா, நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி இவ ரோகிணி இல்ல கல்யாணி என்று சொன்னதும் ரோகிணி அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைக்கு என்ன நடக்கப் போகிறது என்று ஆர்வம் வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+