சிறகடிக்க ஆசை: சத்யாவிடம் முத்து கேட்ட கேள்வி.. கோபப்பட்ட அண்ணாமலை.. விஜயா உடைத்த ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் பத்தாம் தேதிக்கான எபிசோடில் முத்து ஜெயிலிலிருந்து வெளியே வந்திருக்கிறார். ஆனால் முத்து பற்றிய உண்மைகள் ஸ்ருதியின் அம்மா மூலம் அண்ணாமலை குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் பெரிய பிரச்சனையும் வெடிக்கிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவை ஜெயிலில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்பதற்காக என்ன செய்யலாம் என்று மீனா யோசித்துக் கொண்டிருக்கும் போது ஸ்ருதி ஞாபகம் வந்ததால் ஸ்ருதிக்கு போன் போட்டு உதவி கேட்கிறார். ஸ்ருதி தன்னுடைய அப்பா அம்மாவிடம் உதவி கேட்டு அவர்கள் முடியாது என்று சொல்லி விடுகிறார்கள்.

ஆனாலும் இந்த விஷயத்தை ஸ்ருதியின் அம்மா விஜயாவிடம் போய் சொல்லி விடுகிறார். பிறகு ஸ்ருதி மீனாவிற்கு ஃபோன் போட்டு நான் எங்க அப்பா அம்மாவிடம் உதவி கேட்டு அவங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் முத்துவிடம் மீனா போய் நடந்ததை சொல்ல, முத்து நான் தான் ஸ்ருதியின் அப்பாவை அடிச்சிருக்கிறானே அவங்க எப்படி உதவி செய்வாங்க? எப்படியும் நாளைக்கு காலையில் என்னை வெளியே விட்ருவாங்க நீ வீட்டுக்கு போ என்று அனுப்பி வைக்கிறார்.
அதோடு வீட்டில் யாரேனும் கேட்டால் நான் சவாரிக்கு போடுவதாக சொல்லிவிடு என்று முத்து சொல்ல, வீட்டிற்கு வந்த மீனாவிடம் விஜயா எங்க போயிட்டு வர முத்துவை எங்கே என்று அடுக்கடுக்கா கேள்வி கேட்க, மீனா முத்து சொன்னது போல சொல்ல கடைசியில் விஜயா எங்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். ஸ்ருதியின் அம்மா வந்து சொல்லிட்டாங்க என்று சொன்னதும் மீனா அதிர்ச்சியாகி நிற்கிறார்.

அதோடு என் மருமக பொய்யே சொல்ல மாட்டா என்று இவளுக்காக சப்போர்ட் பண்ணுவீங்களே இப்போ எத்தனை பொய் சொல்றா பாருங்க என்று அண்ணாமலையிடம் விஜயா ஏத்தி விட அண்ணாமலை கோபப்படுகிறார். உன் குடும்பத்து மேல எங்களுக்கு பாசம் இல்லையா? இந்த விஷயத்தை நீ என்கிட்ட சொல்லி இருந்தா நான் வேற யாரையாவது வச்சு பேசி பார்த்து இருப்போம் ஆனால் நீங்க பிரின்ஸ்பலை ஏமாத்துற மாதிரி இப்படி செஞ்சது தப்பு என்று கோபப்பட்டு கிளம்பி போகிறார்.
இதை பார்த்து விஜயாவும் மனோஜும் சந்தோஷப்படுகின்றனர். இதுவரைக்கும் ஒரு முறை கூட மீனா மீது கோபப்பட்டது கிடையாது. இப்போ மீனா மீது இவர் கோபப்படுவதை பார்க்கும் போதே சந்தோசமாய் இருக்கிறது என்று விஜயா சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் காலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு மீனா போகும்போது அங்கு சத்யாவும் மீன் சீதாவும் நிற்கின்றனர். அப்போ இங்கு நடந்த விஷயங்கள் எல்லாம் அம்மாவுக்கு தெரியுமா? என்று கேட்க, அவங்களுக்கு தெரியாது என்று சீதா சொல்கிறார்.

பிறகு உள்ளிருக்கும் இன்ஸ்பெக்டரிடம் மீனா சென்று நடந்த உண்மையை சொல்ல அவர் சரி என்று முத்துவை அனுப்பி வைத்து விடுகிறார். வெளியே வந்ததும் சீதா இப்பதான் சந்தோஷமா இருக்கு இதுவரைக்கும் எங்களுக்காக அக்கா தான் இருந்தாங்க இப்போ நீங்க எங்களுக்காக செஞ்ச உதவி எங்களுக்கு பெருசு என்று எமோஷனலாக பேசுகிறார்.
அதற்கு முத்து நான் என்ன அடுத்த ஆளா? நீங்க என் குடும்பம் தான உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால், நான் பாத்துட்டு இருக்க முடியுமா என்று பேச சத்யா முத்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அதற்கு முத்து நீ படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும் என்பதற்காகத்தான் நான் உனக்காக ஜெயிலுக்கு போயிட்டு வந்தேன். நீ இனி படிப்பில் கவனம் வை என்று அட்வைஸ் கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

-
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications