சித்தாந்த நடிகரின் கேரவன் அசிங்கம்? தொடரும் சினிமா அட்ஜெஸ்ட்மென்ட்ஸ்! ஹெல்ப் பண்ண சீனியர் நடிகை யார்
சென்னை: இந்த சினிமா துறை என்பது எப்போதுமே ஆணாதிக்க சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. பெண்களுக்கு மேக்கப் போடுவதும் ஆண்கள்தான்.. சிகை அலங்காரத்தையும் ஆண்கள்தான் நீண்ட காலமாகவே தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.. அரசியல்வாதிகளுடன் சில நடிகைகளின் அட்ஜெஸ்ட்மென்ட்களும் அந்த காலத்திலிருந்தே இருந்து வரும் விஷயம்தான் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் X தளத்தில் ரம்யா மோகன் என்ற பெண் விஜய் சேதுபதி பற்றி பாலியல் புகார் கூறி பதிவிட்டு இருந்தார்.

"பெண் ஒருவருக்கு தனது கேரவனுக்கு வர விஜய் சேதுபதி 2 லட்சம் கொடுத்தார், உடன் driveக்கு வருவதற்கு 50 ஆயிரம் தந்தார். பல வருடங்களாக விஜய் சேதுபதி பயன்படுத்திக்கொண்ட அந்த பெண் தற்போது மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார்" என ரம்யா மோகன் பதிவிட்டு, பிறகு அந்த பதிவினை நீக்கிவிட்டார்.
கோபத்தில் விஜய் சேதுபதி
இதையடுத்து, இந்த பாலியல் புகார் பற்றி விஜய் சேதுபதி கோபமாக பேசியிருந்ததுடன், தன்மீதான குற்றச்சாட்டையும் மறுத்தார்.. இந்த புகார் ஆதாரமற்றது, அசிங்கமான குற்றச்சாட்டு என்று கூறியிருந்தார்..
"என்னை பற்றி கொஞ்சமாக தெரிந்தவர்களுக்கு கூட இந்த புகார் உண்மை இல்லை என தெரியும். அவர்களே இதை பார்த்தால் சிரிப்பார்கள்.. தன்னை பற்றி எல்லோரும் பேச வேண்டும் என்பதற்காக அந்த பெண் இப்படி செய்திருக்கிறார். சில நிமிடங்கள் புகழ் அவருக்கு இதனால் கிடைக்கிறது.இது பற்றி தற்போது சைபர் க்ரைமில் புகார் அளித்து இருக்கிறேன்" என்றும் விஜய் சேதுபதி கூறியிருந்தார்.
இதனிடையே, நடிகை சனம் ஷெட்டி கூறும்போது, "திரைத்துறையில் இப்படியான பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கத்தான் செய்கிறது. இதனால் நடிகைகளுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடுகிறது.. திறமைசாலிகள் பலரும் ஒதுக்கப்பதுக்கப்படுகிறார்கள்" என்று வேதனை கூறியிருந்தார்.
ஆணாதிக்க சமூகம்
இந்நிலையில், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "சனம் ஷெட்டி சொல்லும் வார்த்தையில் நூற்றுக்கு நூறு உண்மை உள்ளது.. இந்த சினிமா துறை என்பது எப்போதுமே ஆணாதிக்க சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது..
பெண்களுக்கு மேக்கப் போடுவதும் ஆண்கள்தான்.. சிகை அலங்காரத்தையும் ஆண்கள்தான் நீண்ட காலமாகவே தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்..
இப்போது விஜய் சேதுபதி, பெண்ணுக்கு 2 லட்சம் தந்ததாக குற்றச்சாட்டு உள்ளது.. ஆனால், விஜய் சேதுபதி கேரவனில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
சித்தாந்த நடிகர், ரூ.150 புடவை
அன்றைய காலத்திலிருந்த பிரபல நடிகர், தன்னுடன் நடித்த கதாநாயகிகளுக்கு 5 வருடம் படங்களில் ஒப்பந்தம் செய்துவிடுவதுடன், மற்ற இயக்குனர்களின் படங்களில் அவர்களை நடிக்கக்கூடாது என்று சொல்லி, ஒப்பந்தம் போட்டுவிடுவார்.. அவருக்கு அடுத்தபடியாக இருந்த மற்றொரு பிரபல நடிகர், தன்னுடன் நடித்த நடிகைகளை, ஒரு மாத காலத்துக்கு நட்சத்திர ஓட்டலில் தங்க வேண்டும் என்பார்..
ஒரு சித்தாந்த நடிகர், காக்கா குருவிகளை வைத்து படம் எடுக்கக்கூடியவர்.. இவர், தன்னிடம் வாய்ப்பு கேட்டு வருகிற நடிகைகளை தவறாக பயன்படுத்தி கொண்டு, 150 ரூபாய் பெறுமானமுள்ள புடவையை தருவாராம்.. இப்படி புடவை தந்தால், அவரது பாவம் தீர்ந்துவிடுமாம். கடைசியில் இவரைவிட்டு, அவரது மனைவி விவாகரத்து செய்துவிட்டே சென்றுவிட்டார்..
மூத்த நடிகைக்கு பறந்த போன்
அதேபோல, நடிகைகளை சில அரசியல்வாதிகளால் பயன்படுத்தி கொள்ளும் வழக்கமும் எப்போதுமே இந்த சினிமாவில் உள்ளது.. காலம் காலமாகவே, நடிகைகள் கவர்ச்சி பிண்டங்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.. பொன், பொருள், வசதிவாய்ப்பு கிடைக்கவும், சில நடிகைகளும் இதுபோன்ற அட்ஜெஸ்ட்மென்ட்களுக்கு ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள்.
நடிகைகள் யாராவது பாலியல் புகாரில், அல்லது ஓட்டல்களில் நடத்தப்படும் ரெயிடுகளில் சிக்கினால், மறைந்த அந்த சீனியர் நடிகைக்கு உடனே போன் செய்து கண்ணீருடன் உதவி கேட்பார்கள்.. அந்த மூத்த நடிகையும், அப்போதுள்ள ஆட்சியாளர்களிடம் சொல்லி, அவர்களை காப்பாற்ற சொல்லி உதவி கேட்டு விடுவிக்க சொல்வாராம்" என்றெல்லாம் தன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications