ஜாமினில் வெளியே வந்த நடிகர் அர்ணவ் வெளியிட்ட பதிவு... இந்த நிலையிலும் இப்படியா பேசுவாங்க!
சென்னை: சின்னத்திரை நடிகர் ஆன நடிகர் அர்ணவ் அவருடைய மனைவியான திவ்யா ஸ்ரீதர் அவரை அடித்து துன்புறுத்தினார் என்று கொடுத்த போலீஸ் கம்ப்ளைன்ட் காரணமாக போலீஸ் காவலில் இருந்த அர்ணவ் தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கிறார்.
ஜாமினில் வெளியே வந்த அர்ணவ் வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் பலர் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

காதலும் கல்யாண பிரச்சனையும்
சின்னத்திரை தம்பதிகளான நடிகர் அர்ணவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இருவரும் காதலித்து திருமணத்தை செய்திருக்கின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலில் மூலமாக இவர்கள் இருவரும் நட்பாக பழகி பின்பு காதலர்களாக 5 வருடம் ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கின்றனர். அப்போதெல்லாம் இவர்களுக்குள் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தாலும் அது அந்த அளவிற்கு வெளியே தெரியாமல் தான் இருந்து வந்துள்ளது .ஆனால் இவர்களுடைய திருமணம் முடிவடைந்த பிறகு தான் இவர்களுக்குள் பிரச்சனைகள் பூதாகரமாக வெடிக்க தொடங்கி இருக்கிறது.

கைதான அர்ணவ்
இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு காரணம் செல்லமா சீரியலில் அர்ணவ் உடன் கதாநாயகியாக நடித்து வந்த அன்ஷிதா உடன் அர்ணவ் நெருங்கி பழகுவது தான் காரணம் என்று திவ்யா தெரிவித்து இருந்தார். அதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டைகள் காரணமாக தற்போது கர்ப்பமாக இருக்கும் திவ்யாவை அர்ணவ் அடித்து துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு செல்லம்மா சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அர்ணவ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நீதி வேண்டும்
சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சின்னத்திரை தம்பதிகளின் குடும்ப பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடாக இல்லை. கடந்த வாரம் ஜாமீனுக்கு அப்ளை செய்திருந்த அர்ணவ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது நீதி கிடைத்துவிட்டது என்று திவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி கூறி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இதனை குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு நீதி வேண்டும் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

ரசிகர்கள் கூறும் அறிவுரை
ஜெயிலில் இருந்து வெளியே வரும்போது அர்ணவ் செய்தியாளர்களிடம் பேசிய வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வைத்திருக்கிறார். அதில் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதால் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறி இருக்கிறார். இந்த பதிவையும் இவர் வெளியிடவே ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் பலர் உங்கள் இருவருக்கும் இருக்கும் குடும்ப பிரச்சனையை நீங்கள் சுமுகமாக பேசி தீர்த்தால் பெரிய பிரச்சனையாகாது. அதை விடுத்து விட்டு இருவரும் தனித்தனியாக நீதி வேண்டும் நீதி வேண்டும் என்று கூறுவது
உங்களை நீங்களே கேவலப்படுத்திக் கொள்வதற்கு சமம். இருவரில் யார் மீது தப்பு இருக்கிறது என்பது பெரியதல்ல. கணவன் மனைவிக்குள் இருவரும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications