மறைந்த SP பாலசுப்ரமணியம் -க்கு பாடகர்கள் செய்த நெகிழ வைத்த செயல்! அன்புக்கு உண்டோ அழிவு? உருகும் ரசிகர்கள்
சென்னை: கேரள மாநிலம் பாலக்காட்டில், இசை உலகையே நெகிழவைக்கும் ஒரு நினைவுச்சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நினைவாக அவரது சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மலையாள திரைப்பட பின்னணி பாடகர்கள் சங்கமான 'சமம்' மற்றும் 'ஸ்வரலயா' அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

எஸ்பிபிக்கு சிலை
பாலக்காடு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள வி.டி. பட்டத்திரிப்பாடு நினைவகத்தில், கண்ணூர் மாவட்டம் பய்யன்னூரை சேர்ந்த சிற்பி கானாயி உன்னி வடிவமைத்த பத்தடி உயர கண்ணாடி உலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வு சாதாரண விழா அல்ல; எஸ்.பி. பாலசுப்ரமணியம் மீது கலை உலகம் வைத்திருக்கும் அளவிட முடியாத அன்பின் வெளிப்பாடாக அமைந்தது. அங்கு கூடியிருந்த ரசிகர்களும், கலைஞர்களும் ஒரே மனதுடன் அவரை நினைவு கூர்ந்தனர்.
கலைஞர்கள் ஒன்றுகூடிய நினைவுநாள்
இந்த நிகழ்வில் சித்ரா, சுஜாதா மோகன், ஹரிஹரன், உன்னி மேனன், ஸ்ரீநிவாஸ், விஜய் யேசுதாஸ், எஸ்.பி.பி. சரண், மனோ, மது பாலகிருஷ்ணன் மேலும் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, எஸ்.பி. பாலசுப்ரமணியன் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதன் பின் "சங்கீத மேகம்" என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த மேடையில் ஒலித்த ஒவ்வொரு பாடலும், அவரின் குரலை மீண்டும் உயிரோட்டமாக உணர வைத்தது.
ரசிகர்களின் அன்பு
எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்பது ஒரு பாடகர் மட்டுமல்ல; ஒரு உணர்வு. அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றும் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கின்றன. "இளைய நிலா", "மன்னில் இந்த காதல்", "சுந்தரி கண்ணால்" போன்ற பாடல்கள் தலைமுறைகளை தாண்டியும் ரசிகர்களின் மனதில் வாழ்கின்றன.
அவரது குரலில் இருந்த அந்த மென்மை, எமோஷனல், உயிரோட்டம்-இவை அனைத்தும் நேராக மனதைத் தொடும் தன்மையுடையவை. அதனால் தான் அவர் பாடல்கள் காலம் கடந்தும் அழியாமல் இருக்கின்றன.

விருதுகள் மற்றும் சாதனைகள்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் தனது வாழ்க்கையில் பல தேசிய விருதுகள், மாநில விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற உயரிய விருதுகளை பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய விருது ரசிகர்களின் அன்பே.
இன்னும் ஆறாத வலி
2020ஆம் ஆண்டு அவர் மறைந்த செய்தி வெளிவந்த போது, அது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ரசிகர்கள் மட்டுமல்ல, முழு கலை உலகமே துயரத்தில் மூழ்கியது. பலர் அவரை நினைத்து கண்ணீர் வடித்தனர். இன்றும் அவரது பாடல்கள் ஒலிக்கும் போது, "அவர் இப்போது இருந்திருந்தால்..." என்ற ஏக்கம் ரசிகர்களின் மனதில் எழுகிறது.
பாலக்காட்டில் நிறுவப்பட்ட இந்த சிலை, ஒரு சிலை மட்டும் அல்ல. அது ஒரு காலத்தை நினைவூட்டும் சின்னம். ஒரு குரல் எப்படி கோடிக்கணக்கான மனங்களை தொட முடியும் என்பதற்கான சாட்சியம்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலால் நம்முடன் இல்லாவிட்டாலும், அவரது குரல் என்றும் நம்முடன் இருக்கும். அந்த குரல் தான் இன்றும் பலரின் மனதிற்கு ஆறுதலாக உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications