"பாய் காட்" பாலிவுட்டுக்கு ஆதரவா...!!?? பிரபல தமிழ் பாடகரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்
சென்னை:சமீபத்தில் பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் குறித்து பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ள கருத்து சினிமா ரசிகர்களால் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஒரு சினிமாக்காரரே சினிமாவைப் பற்றி இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்வதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பாடகர் சீனிவாஸ் க்கு படம் பிடிக்கவில்லை என்றாலும் இவ்வளவு மோசமாக விமர்சித்திருக்க வேண்டாம் என்று பல நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாடகர் ஸ்ரீனிவாஸ்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீநிவாஸ். இசைக் குடும்பத்தில் பிறந்த ஸ்ரீனிவாஸ் கமலஹாசன் நடித்த நம்மவர் படத்தின் சொர்க்கம் என்பது நமக்கு என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஏ.ஆர் ரகுமானின் மின்சார கனவு படத்தில் "மானாமதுரை', உயிரே படத்தில் "என் உயிரே" போன்று பாடல்களை பாடி மிகவும் பிரபலமானார்.தமிழ், தெலுங்கு மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 2000 பாடல்களை பாடியுள்ளார். படையப்பா படத்தில் இடம்பெற்றிருந்த மின்சார பூவே படலுக்காகவும், ரோஜா கூட்டத்தில் இடம் பெற்றிருந்த ஆப்பிள் பெண்ணே பாடலுக்காகவும் தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகர் விருதை பெற்று இருக்கிறார். பல பாடல்களை பாடிய ஸ்ரீநிவாஸ் விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

பாய்காட் பாலிவுட்
அமீர்கானின் பிகே படத்தில் நடித்ததற்காகவும், பிரம்மாஸ்திர படத்தில் ஜீன்ஸ் பேண்ட் போட்டு கையில் சூலம் வைத்திருந்ததற்காகவும்,மற்றும் ரன்பீர் கபூர் மாட்டுக்கறி சாப்பிடும் பழக்கம் உள்ளவர் போன்ற காரணங்களுக்காக அவரது படங்களை பாய் காட் செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் சமூக வலைதளங்களில் ரன்பீர் கபூர், அமீர்கான் படங்களை பார்க்க கூடாது என்றும் பாய் காட் செய்ய வேண்டும் என்று கூறி வரும் நிலையில் பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்கள் கூறியுள்ள கருத்து அந்த அமைப்பிற்கு ஆதரவளிப்பது போல் இருப்பதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பிரம்மாஸ்திர திரைப்படம்
எட்டு வருடமாக களப்பணி ஆற்றி நான்கு வருடமாக தயாரிப்பு பணியை முடித்து பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாகவும், மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக வெளிவந்துள்ளது .பிரம்மாஸ்திரா.ரன்பீர் கபூரை வைத்து இதற்கு முன்பே "ஏதிவாணி ஹாய் திவானி" "வேக்கப் சித்" என்ற இரண்டு வெற்றி படங்களை குடுத்த இயக்குனர் அயன் முகர்ஜி மூன்றாவதாக ரன்பீர் கபூரை வைத்து இப்படத்தை எடுப்பதால் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருந்தது. படத்திற்கான பிரமோஷன் மிகப்பெரிய அளவில் இருந்தது. இது ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி இருக்கிறது.

விமர்சித்த ஸ்ரீனிவாஸ்
பிரமாஸ்திரா படத்தை பார்த்த ஸ்ரீநிவாஸ் தன் பிரம்மாஸ்திர படத்தை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நம்ப முடியவில்லை என்றும், "இடைவேளையிலே ஓடிவிடலாம் போல் தோன்றுகிறது" என்று ட்டுவிட் செய்துள்ளது சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. பாய் காட் பாலிவுட் அறிவிப்பு செய்துள்ள குறிப்பிட்ட அமைப்பிற்கு ஆதரவாக பாடகர் ஸ்ரீநிவாஸ் செயல்படுகிறார் என்று நெட்டிசன்கள் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர். என்ன இருந்தாலும் ஒரு சினிமாவைப் பற்றி சினிமா துறையைச் சார்ந்த ஒருவரே இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்திருக்க வேண்டாம் என்று பாடகர் ஸ்ரீனிவாசைக்கு அறிவுரை கூறி வருகின்றனர். கதை ரீதியாக பலவீனமாக இருந்தாலும் டெக்னிக்கலாக நல்ல ரிவ்வியூ பெற்றிருக்கும் பிரம்மாஸ்திர படத்தை பாடகர் ஸ்ரீனிவாஸ் விமர்சித்துள்ளது ஏதோ உள்நோக்கத்தோடு தான் என்றும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications