நடிகர் அர்னாவ் “அப்படிப்பட்டவர்” பிளான் பண்ணி தான் இப்படி பண்ணுகிறார்.. சக நடிகை குற்றச்சாட்டு
சென்னை: சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செல்லமா சீரியலின் கதாநாயகன் பற்றி சக நடிகை குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.
அர்னாவ் தன்னுடைய மனைவியான திவ்யாவை பிளான் பன்னி தான் அவரை வெறுப்பேத்தி இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
அர்னாவ் சைலன்ட் கில்லர் ஆக வெளியே தெரியாத படி பல வேலைகளை செய்து திவ்யாவை மனநிலை சரியில்லாதவர் என்று பட்டம் சூட்டி வருகிறார் என்று குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

லிவ்விங் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை
திவ்யா தமிழ் கன்னடம் என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போது செவ்வந்தி எனும் சீரியலில் நடித்து வருகிறார். அதுபோல அர்னாவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் எளிமையாக திருமணத்தை செய்து முடித்திருக்கின்றனர். தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில், சமீபத்தில் தான் எனக்கும் அர்னாவ்க்கும் திருமணம் முடிந்திருந்தது. அவர் செல்லமா சீரியலில் நடித்து வருகிறார். சில வருஷத்துக்கு முன்னாடி சீரியல் ஒன்றில் நாங்கள் நடித்தோம்.அதற்குப் பிறகு நாங்க லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வந்தோம் என்று கூறியிருக்கிறார்.

நிம்மதி இல்லாத வாழ்க்கை
அர்னாவ் தன்னுடைய மனைவி மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார் என்று குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதை மட்டுமல்லாமல் பல நேரங்களில் தற்கொலை செய்து கொள்வதாக தன்னை மிரட்டி தனக்கு நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அதற்கான ஆதாரத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவரோடு கல்யாணப்பரிசு சீரியலில் அத்தை பெண்ணாக நடித்த நடிகை பரபரப்பான தகவல்களை கூறியிருக்கிறார்.

சூட்டிங் ஸ்பாட் சேட்டை
கல்யாணப்பரிசு சீரியலில் நடிக்கும் போது அர்னாவ் அந்த சீரியல் நடிகைக்கு பழக்கமாக இருக்கிறாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் சகஜமாக பேசும் போது போலத்தான் இவரிடமும் பேசி பழகி வந்திருக்கிறார். ஆனால் தற்போது செல்லம்மா சீரியலில் அர்னாவ் நடிக்கும் போது அந்த சீரியல் நடிகை சிப்பிக்குள் முத்து என்னும் சீரியலில் நடித்து வந்திருக்கிறார். இந்த இரண்டு சீரியலின் சூட்டிங் ஒரே இடத்தில் தான் நடக்குமாம். அதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் அர்னாவ் செல்லம்மா சீரியல் கதாநாயகி அன்ஷிதாவுடன் நெருக்கமாக இருப்பதை பல நேரங்களில் பார்த்திருக்கிறாராம்.

பிரச்சனைக்கு காரணம்
ஆரம்பத்தில் அர்னாவ் எதற்காக இப்படி எல்லாம் செய்கிறார் என்று தெரியாவிட்டாலும் தற்போது சமூக வலைத்தளத்தில் இவர்களுடைய பிரச்சனை புதாகரமாக வெடித்து வருவதால் அர்னாவ் பற்றி நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. அது மட்டுமல்லாமல் சைலன்ட் கில்லர் ஆக இருந்து தன்னுடைய மனைவியை வெறுப்பேற்றி அவரை மனநிலை சரியில்லாதவர் என்று பட்டமும் கொடுத்து வருகிறார். எந்த ஒரு மனைவியும் தன்னுடைய கணவர் தனக்கு பிடிக்கவில்லை என்று செய்வதை விரும்ப மாட்டார் .அது போல தான் திவ்யாவும் இருந்திருக்கிறார். ஆனால் திவ்யாவை வெறுப்பேற்ற வேண்டும் என்று அர்னாவ், அன்ஷிதா உடன் பழகி வருவது மேலும் மேலும் திவ்யாவிற்கு கோபத்தையும் வெறுப்பையும் தான் கொடுத்திருக்கிறது. அதுதான் இவ்வளவு பிரச்சனைக்கு காரணம். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தன்னுடைய கணவரின் அரவணைப்பு வேண்டும் என்று நினைப்பார் ஆனால் அர்னாவ் இப்படி நடந்து கொள்வது சரியல்ல என்று பல குற்றச்சாட்டுகளை செய்தி சேனல்களில் முன்பு வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications