Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வாழ்வில் மிகப்பெரிய பரிசு” உருக்கமாக பதிவிட்ட சன் டிவி சீரியல் நடிகை..வாழ்த்தும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் நெகடிவ் ரோலில் நடிக்கும் விஜே அக்ஷயா வெளியிட்ட பதிவு பலரையும் கவர்ந்துள்ளதாம்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தன்னுடைய குழந்தையை நினைத்து உருக்கமாக பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

இந்த உலகத்தை பார்க்காத குழந்தைக்கு இப்போதே ஆசிர்வாதங்கள் அதிகரித்து வருகிறது.

பிரபலமான வணக்கம் தமிழா

பிரபலமான வணக்கம் தமிழா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் மூலமாக பல பிரபலங்களை பேட்டி எடுத்து, அவர்களிடம் சில நேரங்களில் மொக்கை வாங்கினாலும் அதை கண்டுகொள்ளாமல் சிரித்த முகமாகவே இருந்து வரும் விஜே அக்ஷயா அனைவருக்கும் பிரபலமானவர்தான். இவர் கோயம்புத்தூர் பொண்ணு ஆம், படித்தது எல்லாமே கோயம்புத்தூர் தானாம். கோயம்புத்தூரில் பி ஏ லிட்ரேச்சர் முடித்துவிட்டு மாஸ்டர் டிகிரி படிப்பதற்காக சென்னைக்கு வந்து வந்திருந்தாராம். அப்போது காலேஜில் இவர் பல நிகழ்ச்சிகளையும், விழாக்களையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

விஜேவாக அறிமுகம்

விஜேவாக அறிமுகம்

ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியோடு இணைந்து இவர் அசிஸ்டன்ட் ப்ரொடியூசராக இருந்திருக்கிறாராம். அதைத்தொடர்ந்து புரொடியூசர் ஆக இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் இவருக்கு ஏற்பட்ட சில மனகசப்பு காரணமாக சன் நெட்வொர்க்கை விட்டு விலகி விட்டாராம். ஆனால் சில காலங்களுக்கு பிறகு மீண்டும் இவருக்கு சன் நெட்வொர்க்கில் இருந்து அழைப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த முறை இவரை விஜே வாக அழைத்திருக்கிறார்கள். இதுவும் நன்றாக தானே இருக்கிறது என்று அக்ஷயாவும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் அங்கே சென்ற பிறகுதான் அக்ஷயாவுக்கு அதிர்ச்சியே இருந்ததாம். அங்கே இருந்தவர்கள் பலரும் இவரை மட்டம் தட்டிக் கொண்டிருந்தார்களாம். இவரை சுற்றி நெகட்டிவ் கமெண்டுகள் பலர் கொடுத்துக் கொண்டிருந்தனர். இவரால் எப்படியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என்று ஆனால் அதை எல்லாம் இவர் தட்டி விட்டு தனது திறமையை நிரூபித்து விட்டார் என்று கூறி இருக்கிறார்.

சிறந்த வில்லி

சிறந்த வில்லி

ஆரம்பத்தில் இவர் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முன்பு சன் மியூசிக்கில் தான் முதல் முறையாக விஜேவாக களம் இறங்கி இருக்கிறார் .அங்கே காலை வணக்கம் போன்ற ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவிட்டு தான் சன் டிவியில் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் தான் இவருக்கு ரோஜா சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் முறையாக நடிப்பை ஒரு கை பார்க்கலாம் என்று களம் இறங்கிய அக்ஷயாவிற்கு நடிக்க தொடங்கிய ஒரு வருடத்திற்குள்ளே இவருக்கு சிறந்த வில்லி 2020 -21 ஆண்டிற்கான விருதினை வாங்கி இருக்கிறாராம்.

குழந்தையின் மீது பாசம்

குழந்தையின் மீது பாசம்

தற்போது ரோஜா சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இவருக்கு திருமணம் முடிந்த செய்தியே தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்திருந்தாலும், இவர் காதல் திருமணம் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. இருந்தபோதிலும் தன்னுடைய காதல் கணவரோடு இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதுபோலத்தான் தற்போது கூட இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். ஆரம்பத்தில் இதை போட்டோ சூட் புகைப்படங்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது உண்மையான புகைப்படங்கள் தான் என்று கிளாரிஃபிகேஷன் கொடுத்ததும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. தற்போது பலரும் இவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய குழந்தையை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் உருக்கமான பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார். அதில், "வாழ்வில் மிகப்பெரிய அதிசயம் உனக்குள் ஒரு உயிர் வளரும் பரிசு,நாங்கள் ஒவ்வொரு நாளும் உன்னை காதலிக்கிறோம் என் சிறிய குழந்தை உங்களை சந்திக்க காத்திருக்க முடியாது "என அவருடைய கணவரான நியந்தன் மணி சேகரை டேக் செய்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+