சன் டிவிக்கு போன வெங்கடேஷ் பட்டின் புது பதிவு! இதுதான் வார்த்தையை விட்டு சிக்குறதா? ரசிகர்கள் கேள்வி
சென்னை: செஃப் "வெங்கடேஷ் பட்" குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நிலையில் அதிலிருந்து விலகி இப்போது சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் "டாப் குக்கு.. டூப் குக்கு" என்ற நிகழ்ச்சியில் நடுவராக இணைந்திருக்கிறார். இதற்கான ப்ரோமோ நேற்று வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் அந்த ப்ரோமோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த வெங்கடேஷ் பட் அது குறித்து ஒரு பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதுதான் இப்போது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து இருந்த நிலையில் ஐந்தாவது சீசன் ஆரம்பிக்கும் முன்பே பெரிய அளவில் பிரச்சனைகள் வெடித்துக் கொண்டிருந்தது. அதாவது திடீரென்று நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தான் திடீரென வெளியேற போவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதைத் தொடர்ந்து இயக்குனர், தயாரிப்பாளர், என ஒவ்வொருவராக இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் கடந்த வாரத்தில் இருந்து ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி சனிக்கிழமை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டபோது, இத்தனை சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் குறித்து யாரும் பேசவில்லை என்று குற்றசாட்டை ரசிகர்கள் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் அதற்கு பதிலளித்த வெங்கடேஷ் பட், "உண்மை ஒரு நாள் வெல்லும்" என்று கூறியிருந்தார். அதோடு இன்று இரவு 8 மணிக்கு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று இருக்கிறது என்றும் கூறியிருந்தார். ஏற்கனவே வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் இருந்து வெளியே வந்ததும் அவர் சன் டிவி நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் கூறி உள்ளனர்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று டாப் குக்கு டூப் குக்கு என்ற புத்தம் புது நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் ஜிபி முத்து, தீபா, மோனிஷா, பரத், தீனா, அதிர்ச்சி அருண் உட்பட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த பலர் சன் டிவி நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலந்து கொண்டு இருக்கின்றனர். கோமாளிகள் மட்டுமல்லாமல் இந்த புது நிகழ்ச்சியின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தான். இவர்களோடு பிரபலங்கள் குக்காக கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்று வெங்கடேஷ் பட் அந்த ப்ரோமோவில் பேசி இருக்கிறார்.
இந்த ப்ரோமோ வெளியானதும் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ப்ரோமோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த வெங்கடேஷ் பட் ,The Content is king always and content that is original is the Emperor .. A fresh new show from the stables of Media Masons on Sun TV very soon.....as always with all your support embarking on a new journey என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
எதிர்நீச்சல்: இந்த ஒரு சீனுக்காக எடுத்த ரிஸ்க்.. வீடியோ வெளியிட்ட ஜனனி.. முதலில் இதை கவனிங்க பாஸ்
இதற்கு ரசிகர்கள் நேற்று உங்களை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எல்லோரும் மிஸ் பண்ணுகிறோம் என்று பேசவில்லை என்று உண்மை ஒருநாள் வெளிவரும் என்று கூறி இருந்தீர்கள். நீங்கள் இன்று நான்கு வருடமாக பணியாற்றிய விஜய் டிவியில் இருந்து வெளியே வந்ததும் சன் டிவியில் நீங்கள் நடுவராக இருக்கும் நிகழ்ச்சி தான் ஒரிஜினல் நிகழ்ச்சி என்று கூறுவது சரியா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications