புத்தாண்டு தினத்தில் கணவர் பற்றி உருக்கமானபதிவு..சுந்தரி சீரியல் கதாநாயகிக்கு குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கதாநாயகி தன்னுடைய கணவரை பற்றி முதல் முறையாக தன்னுடைய இந்த வருடத்தின் ஆசையை உருக்கமாக தெரிவித்து இருக்கிறார்.
சுந்தரி சீரியல் கேப்ரெல்லாவிற்கு திருமணம் முடிந்ததே தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அவர் அவருடைய கணவரோடு எடுத்த புகைப்படங்கள் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

கனவுக்காக வீட்டை விட்டு ஓட்டம்
தற்போது சன் டிவியில் சுந்தரியாக ரசிகர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் வாழ்ந்து வரும் கேப்ரெல்லா திருச்சியில் தான் பிறந்து இருக்கிறாராம். ஸ்கூல் படிப்பில் இவருக்கு அந்த அளவிற்கு படிப்பு ஏறவில்லையாம். அதனாலே அப்போது இருந்தே இவர் நடிப்பில்தான் நாம் போக வேண்டும் என்று நினைத்திருந்தாராம். இவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த பிறகு தான் அடுத்து என்ன செய்யலாம் என்று இவருக்கு இவரே கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாராம். அப்போதுதான் படிப்பை முடித்ததும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாராம் வீட்டில் யாரிடமும் தன்னுடைய முடிவை பற்றி சொல்லாததால் வீட்டை விட்டு ஓடி வரும் போது இவருடைய கழுத்தில் இருந்த ஒரு செயினை அடகு வைத்து அந்த பணத்தில் தான் இவர் சென்னை வந்து சேர்ந்திருக்கிறார்.

ஆறுதல் கொடுத்த பெற்றோர்
இவர் வீட்டை விட்டு வெளியே வரும்போது மனதில் அடுத்து என்ன செய்கிறாய் போகிறோம் என்ற வைராக்கியம், இருந்தாலும் குடும்பத்தையும் ஊரையும் நினைத்து அதிகமாக பயப்பட்டு இருக்கிறார். ஏனென்றால் இவருடைய ஊர் கிராமமாம், ஒரு வீட்டில் ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் ஊருக்கே தெரிந்துவிடுமாம் .இவர் இவருடைய கனவு ஜெயிக்க வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில் இவரைப் பற்றி ஊருக்குள் தவறாக பேச தொடங்கிவிட்டாராம். இவர் ஓடிப் போய்விட்டார் என்று இவரோட குடும்பத்தினரிடம் பேசி அக்கம் பக்கத்தினர் வந்து வேதனையை ஏற்படுத்தி இருந்தார்களாம்.

வாழ்வில் கிடைத்த சிறந்த உறவு
ஆனால் அந்த நேரத்தில் இவருக்கு ஆறுதலாக இருந்தது இவருடைய அம்மாவும் அப்பாவும் தானாம். நாங்கள் இருக்கிறோம் நீ கவலைப்படாதே என்று சொன்ன வார்த்தையை நம்பி, மீண்டும் இவர் சென்னைக்கு வந்து தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக பல இடங்களில் வாய்ப்புக்காக அழைத்து இருக்கிறார். ஷார்ட் பிலிம் களில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இவருக்கு கேமராமேனாக இருந்த இவருடைய கணவர் சுருளி அறிமுகம் ஆகி இருக்கிறார்.

உறுதுணையான கணவர் இவர்தான்
இவருடைய கனவை நினைவாக்குவதற்கு பல வகையிலும் அவருடைய கணவர் ஆரம்பத்திலேயே உறுதுணையாக இருந்திருக்கிறார். அதற்கு பிறகு தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது. இவர்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பிரம்மாண்டமாக திருமணத்தை செய்து இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு கேப்ரெல்லாவிற்கு எவ்வளவோ பிரச்சனை ஏற்பட்டாலும், அவருடைய கணவர் தான் உறுதுணையாக இருந்து வருகிறார். குறிப்பாக இவர் பொள்ளாச்சி சம்பவத்தை நடித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அது பல்வேறு நெகடிவ் கருத்துக்களை பெற்றிருந்தது. அந்த சமயத்தில் இவருடைய கணவர் தான் இவருக்கு சப்போர்ட்டாக இருந்திருக்கிறார். தற்போது வரைக்கும் தன்னுடைய கணவர்தான் தனக்கு சப்போர்ட் என்று கூறியிருக்கிறார்.

கணவருக்கு ஸ்பெஷல் வாழ்த்து
இந்த நிலையில் தன்னுடைய கணவர் கேமராவை சுமத்தபடி பதிவு செய்து கொண்டிருக்கும் ஒரு போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "ஹலோ மை டியர் வூட்டுக்காரரே, இந்த வருடம் நான் நேசிக்கிற உனக்கு பெரிய மேஜிக் சினி ஃபீல்டுல நடக்க என்னுடைய வாழ்த்துக்கள் இந்த நியூ இயர் ல என்னுடைய முதல் ஆசை இதுதான் என்று தன்னுடைய கணவரை டேக் செய்து இருக்கிறார். நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும்போது அதே துறையில் கேமரா மேன் ஆக வேலை செய்து கொண்ட சுருளி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கேப்ரில்லா தன்னுடைய கணவரின் மீது இப்போதும் அதே காதல் குறையாமல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்களை வாழ்த்தி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications