ஜெய்சங்கரை துப்பாக்கியால் துரத்திய எம்ஜிஆர்? அந்த நடிகைதான் காரணமா? உயர்ந்த நபர் ஜெய்சங்கர்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எப்போதுமே சினிமாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமை பூராவும், அரசியலால் மறைக்கப்பட்டுவிடும்.. அரசியல் போர்வையால் போர்த்தப்பட்டுவிடும்" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா ஒரு பேட்டியில் விரிவாக கூறியிருக்கிறார்.

சமீபத்தில், BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் வருகை தந்திருந்தார். அப்போது கேரள திரையுலகில் நடக்கும் பாலியல் விவகாரம் குறித்து பேசியவர், தமிழ் சினிமா பற்றியும் விரிவாக பேசியிருந்தார். அப்போது மறைந்த நடிகர் ஜெய்சங்கர் பற்றி உயரிய கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். அதன் சுருக்கம்தான் இது:

television actor jaishankar mgr

"மம்முட்டியை பொறுத்தவரை நேர்மையான நடிகர்.. அவருக்கு இயல்பான குணமே, திரையுலகத்தை தாண்டி ஒரு நல்லபெயர் உண்டு. இங்கே சிவக்குமார் மீது கிசுகிசு என்பதே கிடையாது. சிவக்குமாரின் தாய் கொங்கு நாட்டு சமுதாயத்தை சேர்ந்தவர்.. வீட்டில் பார்த்த பெண்ணையே, சிவக்குமார் திருமணம் செய்து கொண்டார்.

ஜோதிகா:
அதுபோலவே தங்கள் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்ய ஆசைப்பட்டார். ஆனால், சூர்யா, ஜோதிகாவை கல்யாணம் செய்துட்டார்.. சினிமா வாசமே இல்லாத பெண்ணை, கார்த்தி திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் திரையுலகில் தேடப்பட்ட நபர் யாரென்றால் அது ஜெய்சங்கர்தான்.. பணம் என்பது இவருக்கு எப்போதுமே ஒருபொருட்டே கிடையாது. எம்ஜிஆருடனான சண்டையில்தான், ஜெய்சங்கர் சினிமா துறையைவிட்டே ஒதுங்கிவிட்டார். ஜெய்சங்கர் சினிமா செட்டுக்குள் நுழைந்தாலே, லைட்பாய் முதல் சகநடிகர் வரை அங்கிருக்கும் எல்லாருக்கும் ஹாய் சொல்லுவார்.

நாகையில் புயல்: 1977-ல் எம்ஜிஆர் முதலமைச்சராக பதவியேற்ற சமயத்தில், நாகப்பட்டினத்தில் பெரிய புயல் வீசுகிறது.. நாகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கமே ஒன்றுமே செய்யல.. ஆனால் ஜெய்சங்கர், 5 லாரியில், பெட்ஷீட்கள், உணவுப் பொருட்கள், மருந்துகளை ஏற்றிக்கொண்டு நாகப்பட்டினம் போனார். இத்தனைக்கும் அரசியல் நோக்கம் இல்லாதவர் ஜெய்சங்கர்.

இதைப்பார்த்து எம்ஜிஆர் பயந்துட்டார்.. ஒருவேளை முதலமைச்சர் பதவியை அடைவதற்கு ஜெய்சங்கருக்கு திட்டம் இருக்குதோ? என்று நினைத்தார். உடனே நாகப்பட்டினம் கலெக்டர் ஜெய்சங்கரிடம், "நீ லாரியில் கொண்டு வந்திருக்கும் சாப்பாட்டில் விஷம் கலந்து இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது.. இதை சாப்பிட்டுவிட்டு யாராவது இறந்துவிட்டால், கடைசியில் நீதான் ஜெயிலுக்கு போகவேண்டி வரும்" என்கிறார்.


அரசியல், பாலியல்:
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெய்சங்கர், லாரியில் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் தெருவிலேயே இறக்கிவைத்துவிட்டு போய்விட்டார். சினிமா என்பது அரசியல் , பாலியல் இரண்டுமே கலந்ததுதான்.

ஜெய்சங்கரை ஒரு நடிகையின் வீட்டிலிருந்து, துப்பாக்கியுடன் துரத்திக்கிட்டே ஓடிவந்தார் எம்ஜிஆர்.. ஜெயலலிதாவை எம்ஜிஆர் விரும்ப, ஜெய்சங்கரை ஜெயலலிதா விரும்பினார். அந்தவகையில் ஜெயலலிதாவால்தான், ஜெய்சங்கருக்கும் - எம்ஜிஆருக்கும் தகராறு வந்தது.

அரசியல் போர்வை: எப்போதுமே சினிமாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமை பூராவும், அரசியலால் மறைக்கப்பட்டுவிடும்.. அரசியல் போர்வையால் போர்த்தப்பட்டுவிடும். ஆனால் கேரளாவில், நடிகர், நடிகைகைள், அரசு, அந்த அரசுஅமைத்திருக்கும் போலீஸ் புலனாய்வுகுழு எல்லாமே சக்தி வாய்ந்தது. யாரும் யாரையுமே அங்கு கட்டுப்படுத்த முடியாது" என்றெல்லாம் பேசியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன். பழைய பேட்டி என்றாலும் இது தற்போது இணையத்தில் மறுபடியும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+