ராஜலட்சுமி வீட்டு பங்க்ஷனில் விஜய் டிவி பிரபலம் செய்த செயல்...நல்ல மனசு மட்டும் இருந்தால் போதும்.!
சென்னை: விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் வீட்டு பங்க்ஷனில் விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வாழ்த்துவதற்கு நல்ல மனம் இருந்தால் மட்டும் போதும் என்று புரிய வைத்து விட்டார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
என்னதான் வளர்ச்சி அடைந்தாலும் நன்றி மறவாத குணம் எப்போதும் சிறப்பு தான் என்று நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகம்
நாட்டுப்புற பாடல்கள் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்த ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷுக்கு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்று தான் கூற வேண்டும். அதற்கு முன்பு அவர்கள் பல திருவிழாக்களிலும் ஒரு சில பங்ஷன்களில் மட்டுமே பாட்டு பாடி தங்களுடைய திறமையை வெளிக்காட்டி வந்துள்ளார்கள். ஆனால் விஜய் டிவி இவர்களுடைய பாடல்களை உலகம் எங்கும் ஒலிக்க செய்துவிட்டது.

நெகட்டிவ்க்கு டா டா
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர்களாக கலந்து கொண்ட செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுவிட்டனர். ஆரம்பத்தில் இருந்ததற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் பெரிய அளவில் இருந்து வந்துள்ளது. அதனால இவர்களுக்கும் ஒரு சிலர் நெகட்டிவ் கருத்துக்களையும் பரப்பி வந்தனர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத இந்த ஜோடி தற்போது பல திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருகின்றனர்.

புது வீடு கட்டியாச்சி
முன்னணி திரைப்படங்களில் இவர்கள் இருவரின் பாடல்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சொந்த வாழ்க்கையிலும் இவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். இவர்கள் சொந்தமாக வீடு கட்டி முடித்திருக்கிறார்கள். அந்த வீட்டின் கிரஹபிரவேச பத்திரிக்கையை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அழைப்பு கொடுத்திருந்தனர். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி மேலும் மேலும் இதுபோல வளர்ச்சி அடைய வேண்டும் என்று தங்களுடைய அன்பை கமாண்டுகளாக அனுப்பி வந்தனர்.

அந்த மனசு தான் சிறப்பு
ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தங்கள் வீட்டின் கிரஹப்பிரவேச அழைப்பிதழை அவர்களுக்கு தெரிந்த விஜய் டிவி பிரபலங்களுக்கும் கொடுத்து அவர்களுக்கும் அழைப்பு கொடுத்து இருக்கின்றனர். அவர்களுடைய அழைப்பை ஏற்று ஏற்றுக்கொண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இயக்குனர் ரவூஃபா இவர்கள் வீட்டின் பங்க்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார். தங்களுடைய வாழ்க்கையை மாற்றிய நிகழ்ச்சியின் இயக்குனர் என்று நினைத்ததாலோ அல்லது இவர்களுக்குள் இருக்கும் அன்பினாலோ என்னவோ இவர்கள் சூப்பர் சிங்கர் இயக்குனர் ரவூஃபாவை தங்கள் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்ற சொல்லி இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையின் விளக்கேற்றி வைத்தவர்கள் வீட்டிலும் விளக்கேற்ற வேண்டும் என்பது இவர்களின் அன்பு கட்டளையாம். அதனால் ரவூஃவா விளக்கேற்றி வைத்து பங்க்ஷனை தொடங்கி வைத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். சாமி புகைப்படங்கள் பல இருந்த ராஜலட்சுமியின் வீட்டில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண் விளக்கேற்றி வைத்தது குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications