விவாகரத்து பேப்பர்ஸ் ரெடி.. மனைவியை விட்டு பிரிய ரெடியான பிரபல ஹீரோ.. அவரா? ட்விஸ்ட்
சென்னை: தமிழ் திரை உலகில் எந்த ஒரு விஷயமும் நீண்ட நாட்களுக்கு ரகசியமாக இருக்காது. தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் என்னவென்றால், பிரபலமான தமிழ் நடிகர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளார் என்பதுதான்.
இதற்காக ஏற்கனவே சட்ட ரீதியிலான செயல்களை அவர் செய்ய தொடங்கிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. அந்த திரையுலகில் நன்கு அறியப்பட்ட டாப் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகர் விவாகரத்து செய்ய திட்டம்?
நடிகர் இதுகுறித்து வெளிப்படையாக எதுவும் பேசவில்லை என்றாலும், திரையுலக வட்டாரங்களில் நெருங்கிய வட்டத்தினர் அவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் இருப்பதாக கிசுகிசுக்கின்றனர். இப்போது அந்த நடிகரின் மனைவி இங்கே இல்லையாம். வெளிநாட்டில் இருக்கிறாராம். மேலும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், சென்னையில் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இந்த ஜோடி கடந்த சில வருடங்களாக தனித்தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த நடிகர் நகரத்தின் மற்றொரு பகுதியில் உள்ள தனது சொந்த பிளாட்டுக்கு சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. மனைவி வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.
இது குறித்து தம்பதியினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், நடிகரை ஏற்கனவே வழக்கறிஞரிடம் பேசியுள்ளதாகவும், விரைவில் விவாகரத்து மனு தாக்கல் செய்யபட்டாலும் வியப்பு இல்லை கூறப்படுகிறது. இந்த விவகாரம் காரணமாக ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சட்ட ரீதியாக ரெடி
மனைவியும் தன் பங்கிற்கு விவாகரத்திற்காக ஏற்கனவே சட்ட ரீதியாக காய் நகர்த்த தொடங்கிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக அவர்கள் பங்கேற்பது இல்லை. அவர்கள் ஒன்றாக ஒரு வீட்டில் இருந்தே 3-4 வருடத்திற்கும் மேலாகிவிட்டதாக கூறப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை அவர்கள் ஒன்றாக இருந்தனர். ஆனால் இப்போது, விஷயங்கள் தடம் மாறி போய்க்கொண்டிருப்பதாக நெருக்கமான வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அந்த நடிகர் வேறு ஒரு நடிகை உடன் நெருக்கமாக இருக்கிறார். கடந்த சில வருடங்களாக இவர்கள் மிக நெருக்கமாக இருப்பதால்.. தனது மனைவியை அந்த நடிகர் விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள்.
உள் வட்டார தகவல்களின்படி, சுமார் 4 வருடங்களுக்கு முன்பு இந்த பிரச்சனைகள் தொடங்கியுள்ளன. நடிகருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன, மேலும் அவரது புகழ் உச்சத்தை தொட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தனது பழைய தோழியுடன் அவர் காதலில் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுவே பின்னர் நெருக்கமாகி இப்போது அந்த நடிகர் மனைவியை விவாகரத்து செய்யும் அளவிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சில தகவல்களின்படி, இருவருக்கும் இடையே சந்தேகம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நடிகர் அடிக்கடி தனியாக பார்ட்டிகளுக்கு சென்றதாகவும், அந்த நடிகையுடன் நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை மனைவி கையும் களவுமான பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு டீன் ஏஜ் குழந்தைகள் உள்ளதுதான் கொடூரமான தகவல். சமீபத்தில், நடிகர் தனது மனைவி இல்லாமல் திருமண நிகழ்ச்சிகளிலும் பார்ட்டிகளிலும் கலந்து கொண்டார். மேலும் சமூக ஊடக கணக்குகளில் அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவதை நிறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications