கூட இருந்தவங்க எல்லாரும் விட்டுட்டு போயிட்டாங்களே..பாவனிக்கு ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
சென்னை: பாவனி பீல் பண்ணி கொண்டு இருப்பதை பார்த்து அவருடைய ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
பாவனியுடன் யாரெல்லாம் நெருக்கமாக பழகுகிறார்களோ அவர்கள் எலிமினேஷன் ஆகி வெளியேறுவதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நிஜ வாழ்க்கையில் தான் அவர் தனியாக இருக்கிறார் என்றால் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் இப்படியா??என்று அவருடைய ரசிகர்கள் பீல் பண்ணுகின்றனர்.

கண்கலங்கிய பாவனி
பிக்பாஸ் வீட்டிற்குள் தான் நெருக்கமாக இருந்தவர்கள் வெளியே சென்றதால் கண் கலங்கி இருக்கும் பாவனிக்கு ரசிகர்களின் ஆதரவு மழைபோல பொழிகின்றது. சின்னத்திரை மூலமாக ரசிகர்களை கவர்ந்த பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை தன்னுடைய அழகால் கவர்ந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக இவருக்குத்தான் ரசிகர்கள் பேன்ஸ் பேஜ் ஓபன் பண்ணி இவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

ரசிகர்களின் கெஞ்சல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் போட்டியாளர்களுக்கு தாங்கள் கடந்து வந்த சோகக் கதைகளை சொல்லும் இவர் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றி கூறி அனைவருடைய அனுதாபங்களையும் பெற்றுவிட்டார். ஏற்கனவே இவர் மீது அதிக பாசத்தில் இருந்த ரசிகர்கள் இவர் மீது அனுதாபத்தையும் காட்டத் தொடங்கிவிட்டனர். அதற்குப் பிறகு இவர் ஒரு ப்ரமோவில் வந்தால் கூட போதும் என்று இவருடைய ரசிகர்கள் ஒவ்வொரு ப்ரமோக்களிலும் பிக் பாஸிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

பேரைக் கேடுத்த காயின் டாஸ்க்
ஆரம்பத்தில் ரசிகர்களின் மனதில் உயர்ந்த இடத்தில் இருந்த பாவனி, நாட்கள் செல்லச் செல்ல அவருடைய ஒரு சில செய்கையால் ரசிகர்கள் அவரை வெறுக்க தொடங்கி விட்டனர். அதுவும் முதல் முறையாக இவர் தாமரையுடன் காயின் டாஸ்க்கில் ஏற்பட்ட பிரச்சனை பலரையும் முகம் சுளிக்க வைத்து விட்டது. அதில் தெரிந்து சொன்னாரோ தெரியாமல் சொன்னாரோ..எதுவும் ப்ளான் போட்டு அந்த மாதிரி ஒரு விளையாட்டு விளையாட வில்லை என்று இவர் கூறியதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் திட்டமிட்ட செயல்கள் ரெக்கார்டு ஆகி ரசிகர்களின் முன்பு ஒளிபரப்பி விட்டது. இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிகமானோர் இவருக்கு நெகட்டிவ் கமெண்ட்களை அளித்து வந்தனர்.

பீல் பண்ணும் ரசிகர்கள்
அதற்குப் பிறகு பல பிரச்சனைகளை வைத்து இவருடன் சேரும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அடுத்த வாரமே வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இதை வைத்து ஒரு சில நாட்களாக பல மீம்ஸ் கிரியேட்டர்ஸ் மீம்ஸ்களை போட்டு கலாய்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் இசைவாணி வெளியே செல்லும் போது, பீல் பண்ணிக்கொண்டிருந்த பாவனியை பார்த்து பிரியங்கா அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக அவரை கட்டிப்பிடித்து நம்பிக்கையூட்டி கொண்டிருந்தார். பீலிங் ஆக இருந்த பாவனியை பார்த்ததும் ரசிகர்கள் ஒரு சிலர் மனது உருகிப் போய் விட்டதாம். என்னதான் இருந்தாலும் இப்படியா ஒருவருக்கு நடக்கவேண்டும் என்று இவர் மீது மீண்டும் அனுதாப அலை வீசத் தொடங்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications