செக் வைத்த சர்வைவர்..கதி கலங்கி போன லீடர்ஸ்..ஆர்வத்தில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கமாக இருக்கும் நடைமுறைகள் தான் இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டது.

வித்தியாசத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு வித்தியாசத்தை தாராளமாக அள்ளி கொடுத்திருக்கும் சர்வைவருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

முதல் வாரத்திலேயே இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்ப்பார்க்காத ரசிகர்கள் கொஞ்சம் குழம்பித்தான் போயிருக்கிறார்கள்.

ஏமாத்திட்டாங்க குமாரு! !

ஏமாத்திட்டாங்க குமாரு! !

என்னவோ நடக்கும் என்று நினைத்த ரசிகர்கள் இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்து வருகின்றனர். ஆக ரியாலிட்டி ஷோக்களில் நடக்கும் டாஸ்க் போலத்தான் இதிலும் இருக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு முதல் டாஸ்கே வேற லெவலில் கலக்கி விட்டார்கள். ரூமுக்குள்ளே விளையாடும் விளையாட்டு இல்லை சர்வைவர் ஒரு கோடி ஜெயிப்பதற்காக உயிரை பணயம் வைத்து தான் விளையாட வேண்டும் என்று முதல் நாள் எபிசொடே போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் நச்சென்று புரிய வைத்து விட்டார்கள். ஆனாலும் அதற்கு பிறகு வழக்கமாக நடக்கும் சடங்குகளை போலவே இதிலும் ஒரு சில நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்ததை பார்த்த ரசிகர்களுக்கு தற்போது பெருத்த ஏமாற்றம் கிடைத்துவிட்டது.

நேத்து அப்படி இன்னைக்கு இப்படியா

நேத்து அப்படி இன்னைக்கு இப்படியா

நேற்றைய எபிசோட்டில் அனைவரையும் கதை சொல்ல சொல்லி ரசிகர்களுக்கு வழக்கமான பாணிதான் என்று நம்ப வைத்துக் கொண்டிருந்தவர், இன்று எலிமினேஷன் ரவுண்டில அதிரடியான சில மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். இது என்னய்யா புது கதையா இருக்கு என்று ரசிகர்களும் போட்டியாளர்களும் பெரிய அதிர்ச்சியில் இருக்கின்றனர். எலிமினேஷன் இருக்கிறது ஆனால் அதற்கான வரைமுறை தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கிறது என்பதை அனைவரின் மனதிலும் பதிய வைப்பதற்காக தான் இந்த ஒரு ப்ரோமோ வெளியிட்டிருக்கிறார்கள் போல சர்வைவர் நிகழ்ச்சியில் ஆறாவது நாளில் இரண்டாவது ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி சொல்லி விட்டார்கள் என்றுதான் பலரும் பேசி வருகிறார்கள்.

எப்படி புரிஞ்சுக்க முடியும்

எப்படி புரிஞ்சுக்க முடியும்

ஒருவாரத்திற்கு உள்ளே போட்டியாளர்களின் நிறை குறைகளை தெரிந்து கொள்ள முடியாது. அதனால் எப்படி அவர்களை எலிமினேஷன் செய்ய முடியும் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அனைவரும் இந்த வாரம் எலிமினேஷன் இருப்பதால் இந்த நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரத்தோடு வெளியேற்றப்படும் நபரை தேர்ந்தெடுங்கள் என்று டாஸ்க் கொடுத்து மிரட்டி இருக்கிறார்கள். டாஸ்க் கொடுத்தால் அதை செய்ய தானே ஆக வேண்டுமென்று போட்டியாளர்களும் தங்களுடைய டாஸ்க்கை முடித்துவிட்டனர். ஆனால் கலக்கலாக வந்த அர்ஜுன் கடைசியில் அனைவரின் வயிற்றிலும் புளியைக் கரைத்து விட்டார்.

கடைசில பெரிய ஆப்பு தான்

கடைசில பெரிய ஆப்பு தான்

இதுவரைக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றிருக்கும் கன்டஸ்டன்ட் கள் அந்த வார இறுதியில் எலிமினேட் ஆகிவிடுவார்கள். இதுதான் ரூல்ஸ் இதனை எதிர்பார்த்து கொண்டிருந்த போட்டியாளர்களும் ரசிகர்களும் இந்த வாரம் கண்டிப்பாக இவர்தான் வெளியேறுவார்கள் என்று தொடர்ந்து ஒரு நான்கு போட்டியாளர்களின் பெயரை கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் முதலில் ரசிகர்களை நம்ப வைப்பது போலவே பேசிய அர்ஜுன் கடைசியாக கதையையே மாற்றிவிட்டார். இந்த வாரம் நீங்கள் போட்ட ஓட்டுகள் எல்லாம செல்லாது ஆனால் ப்ரைம் லீடர்ருக்கு. யார் வீக் பாயிண்ட் கொடுத்திருக்கிறார்களோ அவர்கள் தான் இந்த வாரம் எலிமினேஷன் என்று பெரிய ஆப்பை வைத்து விட்டார். இதனை கேட்டதும் லீடர்ஸ் வாட் என்று பெரிய அதிர்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அவர்களே அப்படி என்றால் ரசிகர்களை நிலைமை எப்படி இருக்கும். இன்று இரவு தரமான சம்பவம் இருக்கு என்று ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர். எப்படியோ இப்படியே வித்தியாசத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தால் "சர்வைவர் சாதித்துக் காட்டிவிடும்".

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+