பிக் பாஸ் நிகழ்ச்சியில் நெகட்டிவ் கமெண்டுகள் வராத ஒரே போட்டியாளர் இவர்தான்
சென்னை: பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் முதல் முதலாக இவருக்குத்தான் ரசிகர்கள் ஆர்மி தொடங்கியிருக்கின்றனர்.
Recommended Video
ப்ரோமோவில் மட்டுமல்ல நிகழ்ச்சியிலும் அவர் எப்போது வருவார் என்று இவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வாழ்க்கையில் யாரும் படக்கூடாத கஷ்டத்தை தான் பட்டிருந்தாலும் அதை சொல்லும்போது உணர்வுபூர்வமாக போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பீல் பண்ண வைத்துவிட்டார்.

செம வரவேற்பு
வலிகள் ஆயிரம் மனதில் இருந்தாலும் சிரித்த முகமாக பலரையும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் பாவனிக்கு பாசிட்டிவ் கமெண்டுகள் குவிந்து வருகிறது. சமூகவலைத்தளங்களில் தற்போது பாவனி என்னும் பெயருக்கு செம வரவேற்பு இருந்து வருகிறது. இவர் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் போது இவருக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தார்களோ அதைவிடவும் தற்போது பலமடங்கு இவருடைய பெயரை ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்களின் தேவதை
ரசிகர்கள் அதிகமாக ரசிக்கும் தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் பாவனி ரெட்டி செய்யும் ஒவ்வொரு செயல்களையும் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் இவர் கூறிய கதை தான் பலரையும் பீல் பண்ண வைத்த இருந்தாலும் இவருக்கு தொடர்ந்து ஆதரவுகளும் அதிகமாக குவிந்து வருகிறது. இவர் இந்த அளவிற்கு மனதின் வலி இருந்தாலும் வாழ்க்கையில் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கு அவருடைய ரசிகர்களும் காரணம் தான்.

பிக்பாஸில் மோட்டிவேஷன்
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல கஷ்டமான சூழ்நிலைகளை கடந்துதான் வெற்றி பெற்று வருகின்றனர். அதில் யாரும் விதிவிலக்கல்ல சந்தோஷத்தை மட்டுமே யாராலயும் கொண்டாடி வர முடியாது என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், தனக்கு என்று ஒரு பிரச்சனை வரும் போது வாழ்க்கையில் மனம் தளருபவர்களுக்கு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒவ்வொருவரின் கடந்தகால வாழ்க்கை கதை ரசிகர்களின் மனதிற்கு மோட்டிவேஷன் ஆக இருந்து வருகிறது. இவர்கள் இன்று இவ்வளவு பெரிய இடத்திற்கு வருவதற்கு ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்ததும் ரசிகர்கள் அவர்களுக்கு ஆதரவு கூறிவருகின்றனர். பலர் மோட்டிவேஷனல் ஆகவும் எடுத்து வருகின்றனர்.

வேதனையான சோகக்கதை
தான் உயிருக்கு உயிராக காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட காதல் கணவரின் மறைவு எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அவருடைய வார்த்தைகளில் மட்டுமல்லாமல் கண்ணீரில் இருந்தும் ரசிகர்களுக்கு புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நிலையில் அந்த கஷ்டத்திலிருந்து வெளிவருவதற்க்காக எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் இவருக்கு வேதனையை கொடுக்கும் விதமாக இருந்ததை, இவர் கூறவும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு மட்டும் அளிக்காமல் அவருடைய வாழ்க்கைக்காக பலர் பிரார்த்தனைகளை தொடங்கிவிட்டனர்.

தொடரும் பாசிட்டிவ் கமெண்டுகள்
இந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் பதிந்து ரசிகர்களிடம் அதிகமான பாசிட்டிவ் கமெண்டுகள் பெற்றுவரும் போட்டியாளர்களில் முதன்மையானவராக இவரும் இருந்து வருகிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் போதும் இவருடைய போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாகவே வருகிறது. அதுவும் இன்ஸ்டாகிராமில் இவர் எடுத்த போட்டோ ஷூட் போட்டோஸ்கள் எல்லாம் அவருடைய அட்மின் ஒவ்வொன்றாக போஸ்ட் போட்டு வருகிறார். இது ரசிகர்களுக்கு மேலும் எனர்ஜி ஊட்டுவதாக இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அந்த போட்டோஸ்க்கு பலர் லைக்குகளையும் ஹார்ட்டின்களையும் அனுப்பி வருகின்றனர். ரசிகர்களின் ஆதரவை பார்க்கும்போது இவர் சின்னத்திரையில் அல்ல சீக்கிரத்தில் வெள்ளித்திரை கதாநாயகியாக மாறிவிடுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications