Kantara 2: வராக ரூபம்..! காந்தாரா 2-வுக்கு வந்த சோதனை! ஷூட்டிங்கில் அடுத்தடுத்து 3 பேர் பலி!
சென்னை: காந்தாரா 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பில் 3ஆவதாக ஒரு நடிகர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிஷப் ஷெட்டியின் காந்தாரா முதல் பாகத்தை யாராலும் மறக்க முடியாது.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான திரைப்படம் காந்தாரா. கர்நாடக மாநிலத்தின் துளு பேசும் மக்கள் இன்றும் பின்பற்றி வரும் சடங்குகளில் முக்கியமானது பூத கோலா.
இந்த தெய்வ வழிபாட்டையும் காடுகளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட படம்தான் காந்தாரா. இதில் வராஹ ரூபம் எனும் பாடல் தெய்வீக மணம் கமழும் வகையில் இருந்தது. சுவாமி அவதாரமாக வரும் பன்றியின் கால் கொலுசு சப்தம் கேட்கும் போதும் அது புல்லரிப்பை ஏற்படுத்தியது.
அதுபோல் இந்த படத்தில், அந்த சுவாமியை பார்க்கும் போது மெய் சிலிர்க்காமல் யாராலும் இருக்க முடியாது. ரிஷப் சுவாமியாக வேடமிட்டு ஆடும் நடனமும் அப்படித்தான். குல தெய்வ வழிபாட்டையும் இது சொல்கிறது. இந்த படத்தில் கர்நாடகாவின் பாரம்பரியமான கம்பளா ரேஸும் நடத்தப்பட்டது
படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இதையடுத்து தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. உலகளவில் இந்த படம் ரூ 400 கோடி வசூல் சாதனை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி வருகிறார்.
கர்நாடகாவில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதாவது ஷிமோகா, அகும்பே உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. படப்பிடிப்புக்காக வந்திருந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த விஜு, ஒரு விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அது போல் ஹோம்ஸ்டேயில் ஜூன்யர் கலைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் அறையில் 43 வயதான நிஜு தங்கியிருந்தார். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த காந்தாரா படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்லும் போது நடிகர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் காந்தாரா 2ஆம் பாகம் படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன் கபில், கேரளாவில் நதியில் மூழ்கி உயிரிழந்தார்.
அது போல் இந்த படத்தில் நடித்த காமெடியன் ராகேஷ் புஜாரி, கடந்த மாதம் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் உயிரிழந்தார். காந்தாரா படத்தின் 2 ஆம் பாகத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications