For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விக்ரமனை பாராட்டி திருமாவளவன் வெளியிட்ட பதிவு.. எதிர்பார்க்காத பரிசளிப்பு... கலாய்க்கும் நெட்டிசன்கள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு தொல்.திருமாவளவன் விக்ரமனை டைட்டில் வின்னர் அல்ல டோட்டல் வின்னர் என பாராட்டி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் பற்றி முதல் முறையாக அரசியல் கட்சியின் தலைவர் ஆன தொல் திருமாவளவன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனுக்கு ஆதரவாக வாக்கு செலுத்துமாறு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விக்ரமன் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் டோட்டல் வின்னர் என்று அவருக்கு அறவேந்தர் சிலையை பரிசளித்து பாராட்டி twitter பக்கத்தில் பதிவு திருமாவளவன் பகிர்ந்து இருக்கிறார்.

அசீம், விக்ரமன் பற்றி உண்மையை லைவில் உளறிய அமுதவாணன்.. மொத்த பிரச்சனைக்கும் காரணம் இதுதானா? அசீம், விக்ரமன் பற்றி உண்மையை லைவில் உளறிய அமுதவாணன்.. மொத்த பிரச்சனைக்கும் காரணம் இதுதானா?

எதிர்பாராத வெற்றி

எதிர்பாராத வெற்றி

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு சில நாட்கள் கடந்த நிலையிலும் இந்த நிகழ்ச்சியை பற்றிய பேச்சு சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. காரணம், இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து அசீம் டைட்டில் ஜெயிக்க கூடாது என்று ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் கருத்து கூறி வந்தனர் ஆனால் கடைசியில் அது நடந்து விட்டது. வாக்குகளின் அடிப்படையில் அசீம் ஜெயிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும், ஆரம்பத்திலிருந்து டைட்டில் ஜெயிக்க போவது விக்ரமன் அல்லது ஷிவின் தான் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில் அது நடைபெறவில்லையே என்று பலர் ஏமாற்றத்தில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அசீம் வெளியிட்ட வீடியோ

அசீம் வெளியிட்ட வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் லைவ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார். அதை தொடர்ந்து பல்வேறு சேனல்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அசீம் எந்த ஒரு பேட்டியும் இதுவரைக்கும் கொடுக்கவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் அவருடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து ரசிகர்களுக்கு நன்றி கூறி தான் ஜெயித்த 50 லட்சம் பணத்தில் 25 லட்சம் பணத்தை பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கூறியபடியே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவி செய்வதாக கூறி இருக்கிறார்.

விக்ரமனின் கருத்து

விக்ரமனின் கருத்து

இந்த நிலையில் அசீம் ஜெயித்தது பற்றி விக்ரமன் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் விளம்பரத்திற்காக தான் அப்படி செய்து கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். அவர் வெற்றி பெற்ற பணத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவுவது பாராட்டக்கூடிய விஷயம் தான். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் தொடர்ச்சியாக பெண்களை இழிவாக பேசியது தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தியது போன்றவை சமுதாயத்தில் தவறான முன் உதாரணமாக ஆகிவிடக் கூடாது என்று நான் நினைத்தேன் ஆனால் வெற்றி பெற்றாலும் அது நடக்காது என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் என கூறி இருந்தார்.

திருமாவளவனின் பாராட்டு பரிசு

திருமாவளவனின் பாராட்டு பரிசு

இந்த நிலையில் விக்ரமன் தோல்வி அடைந்ததற்கு காரணம் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது அவருக்காக தொல் திருமாவளவன் பதிவு வெளியிட்டது தான் என்று நெட்டிசன்கள் அதிகமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக தொல் திருமாவளவன் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த தம்பி விக்ரமன் அவர்களை வரவேற்று வாழ்த்துகிறேன். பொழுதுபோக்கு தளம் எனிலும் அதனை கருத்தியல் களமாக்கிய சாதனையை பாராட்டினேன். நீங்கள் டைட்டில் வின்னர் அல்ல, டோட்டல் வின்னர் என ஆறத் தழுவி மெச்சினேன். ஆடை போர்த்தி அரவேந்தன் சிலை பரிசளித்தேன்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் தலைவரே நீங்கள் விக்ரமன் பிக்பாஸுக்குள் இருக்கும்போது அவருக்காக ஓட்டு கேட்காமல் இருந்திருந்தாலே அவர் ஜெயித்து இருப்பார். ஆனால் நீங்கள் ஓட்டு கேட்டதால்தான் அவர் தோற்றுவிட்டார் என்று நெட்டிசன்கள் கமெண்ட்களில் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள்.

English summary
After Bigg Boss Tamil Season 6, Thol Thirumavalavan, who became the leader of a political party for the first time, has released a post about Vikraman.He had already published a post asking him to vote in favor of Vikraman on Bigg Boss. This caused a stir.Although Vikraman did not win the title, Thirumavalavan shared a post on his twitter page praising him by presenting him with Aravendar's statue as a total winner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X