மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்கள் தென் தமிழகத்தவர்... நிரூபித்தாரா ராஜுவின் அம்மா
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் ராஜூ மட்டுமல்லாமல் ராஜுவின் அம்மாவும் தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
ஒற்றை வார்த்தையால் தன்னுடைய கேரக்டரை நிரூபித்து விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர்கள் எப்போதும் தென் தமிழகத்தவரின் சிறப்பு தான் என்று ரசிகர்கள் ராஜுவின் அம்மாவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

தொடங்கிய ஃப்ரீஸ் டாஸ்க்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்பார்த்த ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்கள் பலரும் ஆர்வமாக எதிர்பார்த்தது ராஜுவின் ஃபேமிலியின் வருகைதான். அவர்களின் வருகையை எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆரம்பம் முதலே எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பு நேற்றைய எபிசோட்டில் நிறைவேறிவிட்டது. ராஜுவின் குடும்பத்தினர் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டனர்.

திருநெல்வேலிக்கார பொண்ணு
தற்போதைய சீசனில் போட்டியாளர்கள் பலருக்கும் பரிச்சயமான மற்றும் அதிகமாக ரசிக்கும் போட்டியாளராக இருக்கும் ராஜு அவருடைய அம்மாவை பார்த்ததும் கட்டி அனைத்து கண்ணீர் சிந்தி விட்டார். அதிகநாட்கள் அவருடைய அம்மாவை பார்க்காதன் ஏக்கம் அவர்கள் இருவரின் பாசப் பிணைப்பில் இருந்தே தெரிந்துகொள்ள முடிந்தது. ராஜு தன்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி என்று ஏற்கனவே கூறி இருக்கிறார். ஆனால் நேற்றைய எபிசோடில் அவரது அம்மா நடந்து கொண்டதை பார்க்கும் போது அவருடைய ரசிகர்கள் அப்படியே திருநெல்வேலி கார பொண்ணு என்பதை ராஜுவின் அம்மா நிரூபித்து விட்டார் என்று கூறி வருகிறார்கள்.

வெளிப்படையான பேச்சு
தன்னுடைய படபட பேச்சால் அனைவரிடமும் சகஜமாக பேசிக் கொண்டு இருந்தாலும் மனதில் பட்டதை எல்லாம் வெளிப்படையாக அவர் பேசிய விதத்தைப் பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். ஒருசிலர் ராஜுவின் அம்மாவா இப்படி எல்லாம் முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார்?? என்று சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக இவர் தென் தமிழகத்து பெண் என்பதை அப்படியே நிரூபித்துவிட்டார். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு நடிக்க தெரியாது அதனால் தான் என்னுடைய மகன் எப்படியும் வெற்றி பெறுவான். அவன் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்பதை முதல், அனைத்தையும் கூறி விட்டார் என்று கூறியிருக்கிறார்கள்.
Recommended Video

இது தான் ஸ்பெஷல் குணம்
பிக்பாஸ் ராஜுவின் அம்மா வெளியே செல்லும் நேரமாகிவிட்டது என்று சொன்னதும் ஒவ்வொரு போட்டியாளரும் ஃப்ரீஸில் இருந்தாலும் அனைவரிடமும் எல்லோரும் திருநெல்வேலிக்கு எங்க வீட்டுக்கு வரவேண்டும் என்று பாசத்தோடு அவர் அழைத்த விதம் பலரையும் கவர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைசியாக பிக்பாஸையும் விட்டுவைக்காமல் பிக்பாஸ் நீங்களும் எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று உரிமையோடும், பாசத்தோடும் அழைத்தது பார்த்ததும் ரசிகர்கள் இதுதான் எங்கள் ஊரின் பண்பு என்று சிலர் கூறி வருகிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications