இதுதான் டாஸ்க்..அல்லு விடும் போட்டியாளர்கள்!!!..ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சென்னை: மனசை சமன்படுத்தவே முடியல, இதுல எப்படி இந்த டாஸ்க் ல வின் பண்ண போறாங்களோ!!!என ரசிகர்கள் ஆர்வத்தில் புலம்பி வருகின்றனர்.
சர்வைவர் நிகழ்ச்சியில் லேட்டஸ்ட் ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள்.
கடைசில வச்சாங்க பாருங்க செக்!!!!என்று ஆர்ப்பரிக்கும் ரசிகர்களின் கூட்டம் சமூக வலைதளத்தை அலறவிடுகிறது.

இன்னைக்கு சம்பவம் இருக்கு
சர்வைவர் நிகழ்ச்சியில் முதல் ப்ரோமோவை பார்த்ததும், இன்னைக்கு வேற லெவல் என்டர்டைன்மென்ட் இருக்கு...என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அப்படி என்னதான் இந்த முதல் ப்ரோமோவில் இருக்கிறது என்று பார்த்தால்...எலிமினேஷன்!!! அதுவும் இறுதியான எலிமினேஷன்!!!யார் இந்த நிகழ்ச்சியிலிருந்து முழுமையாக வெளியேற போகிறார்கள்?' என்று போட்டியாளர்கள் மட்டுமல்லாமல், ரசிகர்களும் ரொம்பவே ஆர்வத்தில் இருக்கின்றனர். அதுவும் போட்டியாளர்களுக்குள்ளே.. 'ஈகோ' தலையெடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த மாதிரி போட்டிகள் கொஞ்சம் வெறியை ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

இது வேற ரகம்
'சர்வைவர்'நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கடந்த நிலையில்,ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பு கூடிக் கொண்டுதான் இருக்கிறது.இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு..நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில், நிகழ்ச்சி தொடங்கியது பிறகும் ரசிகர்களின் மத்தியில் ஜொலித்துக் கொண்டுதான் இருக்கிறது... இந்த நிகழ்ச்சி வேற எந்த நிகழ்ச்சியைப் போன்றும் இல்லாததால்,இதற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டனர். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு வரைக்கும், அதிகமான ரசிகர்கள் இது பிக்பாஸ் போன்ற இருக்கும் என்று கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் நிகழ்ச்சியில் முதல் நாள் எபிசோடை பார்த்ததும் இது அந்த மாதிரி நிகழ்ச்சி இல்லை என்று அனைவரும் புரிந்து கொண்டனர்.

டாஸ்க் எல்லாம் வெறித்தனம்
காட்டுக்குள்ளே!! அதுவும் கடற்கரையில்!! இவர்கள் செய்யும் டாஸ்க் எல்லாம் வெறித்தனமாகவும், வேகமாகவும் தான் இருந்து வருகிறது. ஒவ்வொரு டாஸ்க்கும் போட்டியாளர்களின் வேகத்தையும் விவேகத்தையும் பிரதிபலிக்கிறது. யாருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல!! என்று தங்களுடைய திறமைகளை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். உடல் வலிமையில் மட்டுமல்லாமல், மன வலிமையிலும் இவர்களின் போராட்டம் இருந்துகொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில நேரங்களில் இவர்களுக்குள்ளும் பிரச்சனைகள் தலைதூக்கி ஆடிக் கொண்டிருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், சிலநேரங்களில் இந்த நிகழ்ச்சியும் பிக்பாஸ் போன்றுதான் இருக்கிறது.. என்ன அவர்கள் வீட்டுக்குள்ளே சண்டை போடுவார்கள்', இங்கே காட்டுக்குள்ளே சண்டை போடுகிறார்கள்... என்று கூறி வருகின்றனர்.

விவேகம் முக்கியம் பிகிலு
முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது.. என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ரசிகர்களின் எண்ணத்தை பொய்யாக்கி முதல் வாரத்திலேயே இரண்டு போட்டியாளர்களை எலிமினேஷன் செய்து பெரும் பரபரப்பு ஆக்கிவிட்டனர்.ஆனால் அவர்கள் இருவரையும் மூன்றாவது உலகத்தில் தரையிறக்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்துவிட்டார்கள். தற்போது எலிமினேஷன் ஆகி மூன்றாவது உலகத்தில் இருக்கும் போட்டியாளர்களுக்கு என்று தனி போட்டி வைத்திருக்கின்றனர். அதுவும் ஸ்ருஷ்டி டாங்கே, மற்றும் காயத்ரி, இவர்கள் இருவரும் உடல் வலிமையில் மட்டுமல்லாமல், மனவலிமையும் நிரூபிக்கும் விதமாக இவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. பஸ்ஸில்ஸ்(puzzles) டவர் கட்டுவதில்' வேகத்தைவிட விவேகம் தான் முக்கியம்' என்பதை யார்? நிரூபிக்க போகிறார்கள். என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கடைசியாக அர்ஜுன் பேசிய அந்த ஒரு வசனம்தான் ஹைலைட்டே!!! '.. இந்த கேமில் தோற்றவர்கள் கண்டிப்பாக நிகழ்ச்சியை விட்டு முழுமையாக வெளியேறுபவர்கள்' என்று கூறியிருக்கிறார்.இதனை கேள்விப்பட்டதுமே இன்று இரவு தரமான சம்பவம்!! இருக்கிறது, என்று கூறி வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications