விஜய் பிறந்தநாளுக்கு போட்ட போஸ்ட்.. அதுக்கு பின்னால இதுதான் இருக்கு! வெளிப்படையாக மறு போஸ்ட் போட்ட திரிஷா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை திரிஷா சமீபத்தில் நடிகர் விஜயின் பிறந்தநாளுக்கு விஜய்யோடு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இது அதிகமாக ட்ரோல் ஆகி வரும் நிலையில் தன்னை மோசமாக விமர்சிப்பவர்களுக்கு திரிஷா பதிலடி கொடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைத்திருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை திரிஷாவுக்கு இது போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் சின்ன கேரக்டரில் சினிமாவில் என்ட்ரி கொடுத்த திரிஷாவுக்கு பிறகு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. மௌனம் பேசியதே திரைப்படம் இவருக்கு என்று ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதற்கு பிறகு மனசெல்லாம், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, திருப்பாச்சி, ஆறு, குருவி, அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா உட்பட சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி, விடாமுயற்சி, தக் லைஃப் என்று பல படங்களில் தொடர்ச்சியாக திரிஷா நடித்துக் கொண்டிருக்கிறார்.

Trisha Vijay

இப்போதும் கதாநாயகி

40 வயதை கடந்தாலும் இவருக்கு மட்டும் வயது ஆகவில்லையா? இளமை கூடிக்கொண்டே போகிறதே என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. அந்த அளவிற்கு அழகு பதுமையாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷா சமீபத்தில் நடித்த சில திரைப்படங்கள் அவருக்கு நெகடிவான இமேஜை உருவாக்கி இருக்கிறது. ஆனால் சினிமா என்று வந்துவிட்டால் எல்லா கேரக்டரிலும் நடிக்க வேண்டும் என்று திரிஷா தனக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சர்ச்சைகள்

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் நடிகை திரிஷா பெரிதாக எந்த சர்ச்சைகளும் சிக்கியது இல்லை. ஆனால் சமீப காலமாக விஜயுடன் இணைத்து வைத்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். விஜய் அரசியல் வாழ்க்கைக்கு அடி எடுத்து வைத்த பிறகு விஜய்யையும் திரிஷாவையும் பற்றி சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய் மற்றும் திரிஷா ஒன்றாக கலந்து கொண்டதுதான்.

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து

விஜய்யும் திரிஷாவும் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி படத்தின் மூலமாகத்தான் முதல்முறையாக இவர்கள் இருவரும் நடித்திருந்தனர். பிறகு கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தனர். அதுபோல விஜய் நடித்த கோட் படத்தில் ஒரு பாடலுக்கு திரிஷா டான்ஸ் ஆடி இருந்தார். இந்த நிலையில் தான் விஜயின் பிறந்தநாளுக்கு த்ரிஷா அவருடன் எடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Trisha Vijay

திரிஷா பதிவு

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நிதி சங்கர் பலரும் இது குறித்து மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகிறார்கள், அதற்கு திரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி மூலமாக பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் "நாம் அன்பால் நிறைந்திருக்கும் சமயத்தில் அது அசிங்கமான எண்ணம் கொண்டவர்களை குழப்புகிறது" என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் அதிகமாக கவனம் பெற்று வருகிறது. பலர் திரிஷாவை குறித்து ட்ரோல் செய்பவர்களுக்கு தான் இந்த பதிவு வெளியிட்டு இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+