Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாஸ்ட் மினிட்டில் பிக் பாஸ் வீட்டில் ரம்யா ஜோ எஸ்கேப் ஆன ரகசியம்.. Bigg Boss கெமிக்கு டபுள் ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, யாருமே எதிர்பாராத நேரத்தில் வெளியேறியவர் கெமி.. இன்னும் சில நாட்களுக்கு பிக்பாஸ் வீட்டில் விளையாடுவார் என்று பலராலும் கணிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென வெளியேறினார்.. கெமியின் இந்த வெளியேற்றத்துக்கு ஒரு பின்னணி காரணம் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, கெமிக்கு தற்போது டபுள் ஜாக்பாட் அடித்துள்ளதாம்.. அதை பற்றி பேட்டி ஒன்றில் கெமியே
பூரிப்புடன் கூறியிருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய துணிச்சலான பேச்சுகள், செயல்பாடுகளால் கவனம் ஈர்த்தவர் கெமி... ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 49-வது நாளில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், கெமியின் பங்களிப்பு பல ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.

Bigg Boss tamil season 9 Ramya Joo Kemi 9

குறிப்பாக, தான் வாழ்க்கையில் சாதித்த விஷயங்களை லிஸ்ட் போட்டு சொன்னபோது, பலரும் ஆச்சரியப்பட்டனர்.. அதேபோல பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றத்தின்போது கெமி மேடையில் கண்கலங்கியபோது, நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய கண்ணாடியை கொடுத்து கண்ணீரை மறைக்க சொன்னது, இணையத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது..

டபுள் ஜாக்பாட்

இப்போது கெமிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.. சமீப நாட்களாகவே பல சேனல்களுக்கு கெமி பேட்டிகளை தந்து வருகிறார்.. அதில், இரண்டு முக்கிய தமிழ்ப் படங்களில் கெமி நடித்து வருகிறாராம்.

அதில் முதலாவது படம், ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் 'மை லார்ட்' ஆகும். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடிக்க, குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மை லார்ட்

இதை பற்றி கெமி சொல்லும்போது, "இப்போது நான் 2 படங்கள் பண்ணி கொண்டிருக்கிறேன். அதில், ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள 'மை லார்ட்' படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறேன்... இந்த நெகட்டிவ் கேரக்டர் எனக்கு மிகவும் புதிய அனுபவமாக இருக்கிறது..

இந்த படத்தின் ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், 'மை லார்ட்' படம் இந்த டிசம்பர் மாதத்தில் திரைக்கு வரும்.. இந்தப படம்தான், தான் நடித்த படங்களிலேயே முதலில் வெளியாகப்போகும் படம்.

அடுத்ததாக, நயன்தாரா, கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்கிறேன்.. இந்தப் படத்தில் நான் நிறைய சீனில் வருவேன். முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது..

நயன்தாரா பெரிய நடிகை

பிரபல நடிகர், நடிகைகளுடன் நான் ஷூட்டிங்கில் இருந்த அனுபவம் என்னால் மறக்க முடியாது.. ஒவ்வொரு நொடியும் நான் என்ஜாய் பண்ணி நடித்தேன். சினிமா எனக்கு புதிய அனுபவம்தான். நயன்தாரா போன்ற பெரிய ஸ்டாருடன் முதலில் நடிக்க பயந்தேன். அப்பறம், கவின் நடிக்க சொல்லி தந்த விதம், நயன்தாரா எங்களுடன் சகஜமாக பழகிய விதம், இதெல்லாம் எனக்கு உதவியாய் இருந்தது.

'ஹாய்' படத்தின் 2ம் கட்ட ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க போகிறது,.. இந்த படம் 2026-ல் வெளியாகும்" என்று தன்னுடைய ஷூட்டிங் அனுபவம் குறித்து உற்சாகத்துடன் கூறுகிறார் கெமி.

கெமி எவிக்‌ஷன்

இதனிடையே, கெமி ஏன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் என்பது குறித்த செய்திகள் இன்னமும் மீடியாவில் கசிந்தவண்ணம் உள்ளன. அந்தவகையில் இப்போதும் ஒரு தகவல் வலம் வருகிறது.

அதாவது, 'கெமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அக்ரிமென்ட்டில் கையெழுத்து போடும்போதே, பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் கமிட் ஆகிவிட்டாராம்.. இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளதால், அதில் கெமி கலந்துகொள்ள வேண்டியிருக்கிறதாம்.

ரம்யா கிரேட் எஸ்கேப்

படத்தின் தயாரிப்பு தரப்பில், பிக் பாஸ் செல்வதற்கு முன்பே ஷூட்டிங் குறித்து கெமியிடம் பேசினார்களாம்.. ஷெட்யூலில் எப்படியும் மாற்றம் வரும் என்பதால், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துள்ளனர்..

அதனால்தான் பெருத்த நம்பிக்கையுடன் கெமியும் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாட வந்துள்ளார். ஆனால், திடீரென சம்பந்தப்பட்ட படக்குழு ஷூட்டிங்கிற்கு ரெடியாகிவிட்டதால், படக்குழுவினர் நேரடியாகவே சேனலில் பேசி கெமியை எவிக்ட் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாம். எனவேதான், எவிக்ஷன் புராசஸில் கெமி வெளியேற்றப்பட்டதாக கூறுகிறார்கள்..

ஒருவேளை கெமி பிக்பாஸ் வீட்டிலேயே விளையாட்டை தொடர்ந்திருந்தால், அந்த வாரம் வெளியில் வந்திருக்க வேண்டியது ரம்யா ஜோ தானாம்.. ஆனால், ரம்யா ஜோ இந்த வாரமும் எவிக்‌ஷனில் இருந்து தப்பியிருப்பது கவனிக்கக்கூடிய விஷயமாகும்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+