வடிவேலு பாலாஜியின் புகைப்படத்தை தொட்டு வணங்கி ஆசி பெற்ற புகழ்.. உருக்கமான வேண்டுதல்கள்
சென்னை: மறைந்த நடிகர் வடிவேலு பாலாஜிக்கு உருக்கமாக புகழ் திருமண நல்வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். தன் மனதில் இருக்கும் பாசத்தினை புகழ் மற்றும் அவருடைய மனைவி இருவரும் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
சமீபத்தில் திருமணம் முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான புகழ் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு பலரையும் கண் கலங்க வைத்துள்ளதாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சியின் மூலமாக பலரையும் சோகத்தை மறக்க வைத்து சிரிக்க வைத்த காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியை நினைத்து புகழ் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

மறையாத பாசம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான வடிவேலு பாலாஜி ஒரு காமெடி நடிகராக தான் பலருக்கும் தெரியும். ஆனால், அவருக்குள் இருக்கும் மனிதநேயம் மற்றும் பாசம் அவரோடு நெருங்கி பழகியவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று அவருடன் நிகழ்ச்சியில் பல கலந்து கொண்ட பலர் பிரபலங்கள் தெரிவித்து இருக்கின்றனர். அந்த வகையில் தனக்கு வாழ்க்கை தந்தது, இந்த சினிமா துறைக்கு அறிமுகப்படுத்தியது வடிவேலு பாலாஜி தான் என்றும் வடிவேலு பாலாஜி மறைந்த பிறகும் அவர் மீது தன்னுடைய பாசத்தை வெளிக்காட்டி வரும் புகழ் தற்போது வடிவேலு பாலாஜிக்கு திருமண நல்வாழ்த்துக்கள் கூறி உருக்கமான பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.

வடிவேலு பாலாஜி செய்த உதவி
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பலரையும் மகிழ்வித்தவர்தான் புகழ். இவர் அந்த நிகழ்ச்சியில் அதிக அளவில் பிரபலமடையவில்லை என்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பலருடைய மனதில் தனக்கென்று இடத்தைப் பிடித்துக் கொண்டவர். தனக்கு வாழ்க்கை கொடுத்த யாரையும் மறக்காத புகழ் தற்போது வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனாலும் அடிக்கடி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டு வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் புகழ் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கும் போது வடிவேலு பாலாஜி தான் உதவி செய்துள்ளாராம். பல நேரங்களில் புகழ் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் இருந்த போதிலும் அவருக்கு பல உதவிகளை வடிவேலு பாலாஜி செய்து இருக்கிறார் என்று புகழ் கூறி இருக்கிறார்.

குறையாத அன்பு
புகழ் இன்று திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்ததற்கு காரணமாக வடிவேலு பாலாஜியும் இருந்திருக்கிறார். ஆரம்பம் முதலே புகழுக்கு பல மோட்டிவேஷன்களையும் கொடுத்து உறுதுணையாக இருந்துள்ளாராம். தற்போது திருமணம் முடிந்த புகழ் தன் மனைவியோடு தன் வீட்டில் மாட்டப்பட்ட புகழ் மற்றும் வடிவேலு பாலாஜி இருக்கும் புகைப்படத்தில் ஆசீர்வாதங்களை வாங்கி இருக்கிறார். இந்தப் புகைப்படங்களை பார்த்த பலர் புகழ் இந்த அளவிற்கு வடிவேலு பாலாஜியின் மீது பாசம் வைத்திருக்கிறார் என்று கூறி வந்தாலும், ஒரு சிலர் வடிவேலு பாலாஜியின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்து வருகிறது. அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று புகழிடம் அன்பு வேண்டுகோள்களை விடுத்து வருகிறார்கள்.

புகழின் ஆசை
புகழுக்கு திருமணம் முடிந்த கையோடு தற்போது வடிவேலு பாலாஜியின் திருமணத்திற்கு நல்வாழ்த்துக்கள் கூறி புகழ் வெளியிட்ட பதிவு பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. அந்த பதிவில் புகழ், "இனிய திருமண நல்வாழ்த்துக்கள் மாமா... உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைக்கிறேன். உங்க ஆசீர்வாதம் எப்பவும் எங்க இரண்டு பேருக்கும் இருக்கும்னு நம்புறேன். எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுளை வேண்டுகிறேன் மாமா..."என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் கண்டிப்பாக நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் என்று வாழ்த்து கூறி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications