Vanitha: என் மகள் ஜோவிகா காதலிக்க மாட்டாள்! எனக்கு 100% தெரியும்! ஏன்னா.. வனிதா விஜயகுமார் உருக்கம்
சென்னை: என் மகள் ஜோவிகா காதலிக்க மாட்டாள், நல்ல வேளை அவளை நான் காலேஜுக்கு அனுப்பவில்லை என்று தாயும் நடிகையுமான வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் வனிதா பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார்.

தனது 13 வயதிலேயே சந்திரலேகா என்ற படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்தவர் வனிதா விஜயகுமார். அதன் பின்னர் மாணிக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். பிரபல நடிகர், நடிகையான விஜயகுமார்- மஞ்சுளா ஆகியோரின் மகளாக இருந்தும் அவரால் சோபிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து சிறு வயதிலேயே சீரியல் நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இதையடுத்து அவர் சொத்து விவகாரம் தொடர்பாக தனது தாய்- தந்தையுடன் தகராறில் ஈடுபட்டார்.
மஞ்சுளா விஜயகுமார்
ஒரு கட்டத்தில் மஞ்சுளா, வனிதாவை என் மகளே இல்லை என சொல்லும் அளவுக்கு நடந்து கொண்டார். இன்று வரை வனிதாவுடன் விஜயகுமாரோ அவரது மூத்த தாரத்து மகன், மகள்களோ, மஞ்சுளாவின் மற்ற மகளான ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோரோ பேசுவதே இல்லை.
ஆந்திரா தொழிலதிபர்
இதையடுத்து ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரான ஆனந்த் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் ஜெயினிதா என்ற மகள் உள்ளார். அவருடனும் பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டார்.
வனிதா மகள்கள்
இந்த நிலையில் மகன் ஸ்ரீஹரி தாத்தா, அப்பாவின் அரவணைப்பில் இருக்கிறார். அவர் வனிதாவுடன் பேசுவதில்லை. இதனால் வனிதா, மகள்கள் ஜோவிகா, ஜெயினிதாவும் வசித்து வருகிறார். குக் வித் கோமாளி ஷோ மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் வனிதா. அந்த முதல் சீசனில் பட்டத்தையும் வென்றார்.
விஜய் டிவி ரியாலிட்டி ஷோ
இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்து கொண்டார். இதையடுத்து பிக்பாஸ், பிபி ஜோடிகள் எனும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். நடுநடுவே சில படங்களிலும் நடித்து வந்தார்.
பார்த்திபனிடம் உதவி இயக்குநர்
இவரது மகள் ஜோவிகா பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். இந்த நிலையில் தற்போது தனது தாய் வனிதா, ராபர்ட் மாஸ்டரை வைத்து Mrs & Mr எனும் படத்தை ஜோவிகா தயாரித்துள்ளார். படத்தை வனிதா இயக்கியுள்ளார்.
தாவணி அணிந்த ஜோவிகா
இந்த படத்தின் விழா ஒன்றில் ஜோவிகா தாவணி அணிந்து கொண்டு வந்தார். அதில் இடுப்பு தெரியும் வரை இருந்தது. இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தேவயானியின் மகள் இனியாவை எப்படி வளர்த்திருக்கிறார்கள். ஆனால் இந்த பெண்ணை வனிதா எப்படி வளர்த்திருக்கிறார் என்ற பேச்சு வந்தது.
பாரம்பரியம்
இந்த நிலையில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் வனிதாவும் ஜோவிகாவும் கூறுகையில், எது பாரம்பரியம் என்பதை சொல்லுங்கள். ஜீன்ஸ் போட்டால், ஜீன்ஸா என்பது! புடவை, தாவணி போட்டால் அதில் குறை கண்டுபிடிப்பது! எதற்காக என் மகளையும் தேவயானி மகளையும் ஒப்பிட வேண்டும்? குஷி படத்தில் ஜோதிகா கூட தனது இடுப்பை காட்டினாரே, அந்த காட்சி பிரபலமாச்சே.
காதலிக்க மாட்டாள்
முதலில் எனது மகளை என்னுடனேயே ஒப்பிடுவது மிகவும் தவறு என வனிதா தெரிவித்தார். மேலும் அவர் தொடர்கையில் என் மகள் காதலிக்க மாட்டாள், இது 100 சதவீதம் எனக்கு தெரியும். அவளுக்கு காதல் வராது, ஏனென்றால் நான் வாழ்க்கையில் என்னென்ன கஷ்டப்பட்டேன் என்று அவள் பார்த்திருக்கிறாள்.
முட்டாள்
அவ என்னை ஒரு பெரிய முட்டாள் என்றுதான் நினைச்சுட்டு இருக்காள். எமோஷனலாக பார்த்தால் அது கரெக்ட்தான். இப்போது அதெல்லாம் அவளுக்கு ஒரு பாடமாக அமைந்துவிட்டது. அட்லீஸ்ட் ஜோவிகாவுக்கு எந்த தவறும் நடக்காதுல்ல!
கண்டுபிடிப்பது ஈஸி
அவளுக்கு எப்போது யாரை காதலிக்கணும் என்று தெரியும். ஏனென்றால் நாங்கள் எல்லா முட்டாளையும் பார்த்தாச்சு, கரெக்ட் யாரு என எளிதாக கண்டுபிடித்துவிடலாம். எப்போதுமே எனது மகள் எனக்கு அட்வைஸ் செய்துக் கொண்டிருப்பாள். நல்ல வேளை என் மகளை காலேஜுக்கு அனுப்பவில்லை என வனிதா தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications