கனவு நிறைவேறியது.. மகிழ்ச்சியுடன் அறிவித்த வரலட்சுமி.. இதனால் தான் டான்ஸ் ஜோடி டான்ஸ்க்கு வரலையா?
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தமிழில் போடா போடி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல தைரியமான கேரக்டரில் நடித்து வந்தார். சமீபத்தில் அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டார். ஆனால் கடந்த வார எபிசோடில் நிகழ்ச்சிக்கு வரவில்லை. இந்த நிலையில் தன்னுடைய பல நாள் கனவு நிறைவேறி விட்டதாக மகிழ்ச்சியுடன் வரலட்சுமி பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர் நடிகைகளின் குழந்தைகள் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்களை போல அவர்களால் ஜெயிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. தங்களுடைய அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக எவ்வளவோ முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் வரலட்சுமி. அவருடைய தந்தை சுப்ரீம் ஸ்டார் ஆக சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். சரத்குமார் 90ஸ் கால கட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இப்போதும் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து மிரட்டி கொண்டு இருக்கிறார்.

சரத்குமார் மகள்
அவரைப் போல வரலட்சுமி சினிமாவில் பெரிய லெவலில் ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனாலும் அதற்கு தகுந்தது போல அவருக்கு தமிழில் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறது. ஒரு சில சினிமா வாய்ப்பு கிடைத்தாலும் தன்னுடைய கேரக்டரில் கச்சிதமாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தமிழை விட மற்ற மொழிகளில் பிஸியான நடிகையாக வரலட்சுமி இருக்கிறார்.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நடுவர்
அதுபோல வரலட்சுமி ஜீ தமிழில் சமீபத்தில் தொடங்கப்பட்ட டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருந்தார். ஆனால் கடந்த வாரத்தில் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. எதனால் வரலட்சுமி வரவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர். வரலட்சுமி கை விரல்களில் அடிபட்டு இருந்த நேரத்தில் கூட அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதனால் அவர் இப்போது கலந்து கொள்ளவில்லையே என்று பலர் கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.
வரலட்சுமி ஹாலிவுட்டில் அறிமுகம்
இப்படியான நிலையில் தான் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமான மகிழ்ச்சி செய்தியை வரலட்சுமி அறிவித்திருக்கிறார். வரலட்சுமி ஹாலிவுட்டில் நடிக்கும் படத்திற்கு இயக்குனர் சந்திரன் ரூட் இயக்கத்தில் பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐராண்ன்ஸ் (actor Jeremy irons) நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு வரலட்சுமி இலங்கைக்கு சென்றிருக்கிறார். அந்த படத்திற்கு ரிசானா ஏ சாகேப் பிரட்(RIZANA- A Caged Bird) பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.

வாழ்த்துக்கள்
இந்த படப்பிடிப்பு பற்றி வரலட்சுமி பேசும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியிருந்தார். அதோடு தனக்கு லயன் கிங் மற்றும் ஸ்கார் பிரேம் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும் ஜெர்மி உடன் இணைந்து பணியாற்றுவது எனது கனவு. அந்த கனவு இன்று நினைவாகி இருக்கிறது என்று தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருந்தார். வரலட்சுமிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications