ஐக்கிக்கு அதிர்ச்சி கொடுத்த வருண்... இது என்ன புது ட்விஸ்ட்... குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு வருண் செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஒரு சில நாட்களுக்குள் இவ்வளவு வேகமா என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
திடீரென்று வருணை பார்த்த மகிழ்ச்சியில் ஐக்கி பெர்ரி துள்ளி குதித்துள்ளார்.

நண்பர்களோடு என்ஜாய்
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் வருண் தன்னுடைய நண்பர்களை சந்திக்க துவங்கிவிட்டார். அவருடைய பிக்பாஸ் தோழியான அக்ஷராவுடன் காபி ஷாப் சென்று பல போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பிவிட்டு கொண்டிருக்கும் நேரத்தில் அடுத்த நண்பர்களையும் சந்திக்க கிளம்பியிருக்கிறார். ஒரே நாளில் இவர் சுற்றி சுற்றி வலம் வருவதைப் பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

வழக்கமாக நடைபெறுவது தான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது போட்டியாளர்கள் அடித்துக் கொண்டு இருப்பதும், வெளியே வந்ததும் பாச மழை பொழிவதும் ஒவ்வொரு சீசனிலும் நடந்து கொண்டுதான் வருகிறது. என்ன தான் இவர்கள் உள்ளே அடித்துக்கொண்டிருந்தாலும், டாஸ்க்குகாக தான் நாங்கள் அப்படி செய்து கொண்டிருந்தோம் என்று ஒரே வார்த்தையில் கூறி விடுகிறார்கள். ஆனால் நாங்கள் எல்லாமே ஒன்றுதான் என்று இவர்கள் ஒவ்வொரு சீசனிலும் நிரூபித்து வருகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது கூட வருண் அவருடைய நண்பர்களுடன் வலம் வரும் போட்டோக்கள் ரசிகர்களுக்கு இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

செம என்ஜாய் போல. ..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் முதல் முறையாக இரண்டு எலிமினேஷன் நடந்து இரண்டு போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் வெளியாகி இருக்கின்றனர். அதுவும் ஒன்றாக சுற்றி திரிந்த நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அக்ஷரா மற்றும் வருண் வெளியேற்றம் ரசிகர்களை வருத்தமடையச் செய்திருந்தாலும் போட்டியாளர்களுக்கு எஞ்சாய் ஆகத்தான் இருக்கிறது என்று ஹோட்டல் சென்று என்ஜாய் செய்து வருகிறார்கள். நேற்று அக்ஷரா வருண் மதுமிதா சேர்ந்து தங்கள் நட்பை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

இன்ப அதிர்ச்சி கொடுத்த வருண்
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஐக்கி பெர்ரி அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களையும் சந்தித்து கொண்டிருக்கும் நேரத்தில் நேற்று இவர்கள் அணியில் ஐக்கி பெர்ரி காணவில்லையே என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வந்தனர். அது வருணுக்கு தெரிந்து விட்டது போல, அதனால் ஐக்கியின் வீட்டிற்கு சென்று வருண் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவருடைய வீட்டிற்கு செல்லும்போது அக்ஷரா தான் போன் செய்துள்ளார். அதனால் அக்ஷரா தான் வருகிறார் என்று எதிர்பார்த்தாராம். ஆனால் அக்ஷரா வராமல் வருண் மட்டும் சென்று உள்ளார். இது ஐக்கி பெர்ரிக்கு ஒரு பக்கத்தில் வருத்தமாக இருந்தாலும், ஒரு பக்கத்தில் இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications