அம்மாவின் கொடூரமான மரணம்.. கடைசியாக சொன்ன வார்த்தை இதுதான்! வெங்கடேஷ் பட் எமோஷனல்
சென்னை: செஃப் வெங்கடேஷ் பட் தன்னுடைய அம்மாவின் மரணம் குறித்தும் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்தும் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். தன்னுடைய அம்மா கடைசியாக இறப்பதற்கு முன்பு தன்னிடம் பேசியதை இப்போதும் என்னால் மறக்க முடியாது என்று வேதனையோடு பகிர்ந்திருக்கிறார்.
பொதுவாக பெற்றோர்கள் எப்போதுமே தங்களுடைய பிள்ளைகள் நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் ஆசைப்பட்ட மாதிரி பிள்ளைகள் நல்லா இருக்கும்போது சில பெற்றோர்களால் அதை பார்த்து ரசிக்க முடியாத சூழ்நிலை ஆகிவிடுகிறது. காலத்தின் கட்டாயத்தால் அவர்களும் காலம் சென்று விடுகிறார்கள்.

ஒரு சிலர் தங்களுடைய பெற்றோரின் ஆசையை தொடர்ந்து நிறைவேற்றி அவர்கள் இந்த மண்ணுலகில் இல்லை என்றாலும் அவர்களுடைய கனவை நிறைவேற்றுகிறார்கள். அதுபோலத்தான் வெங்கடேஷ் பட் தன்னுடைய அம்மாவின் ஆசை கனவில் நிறைவேற்றி இருக்கிறேன் என்று பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
செஃப் வெங்கடேஷ் பட் விஜய் டிவி, ஜீ தமிழில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சமையல் செய்பவராகவும் வந்திருக்கிறார். ஆனால் அதை விடவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகத்தான் பெரிய அளவில் பிரபலமானார். திடீரென்று அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டார்.
Bigg Boss Hindi: நட்பை நம்பி ஏமாந்த ஸ்ருதிகா.. கதறி அழுது சொன்ன வார்த்தை.. சுற்றி நடக்கும் துரோகம்
அதுபோல சமூக வலைத்தளத்தில் எப்போதும் செம ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசி இருக்கிறார். அதில் அவர் நான் முதல் முறையாக விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சி ஒரு வாரம் ஒளிபரப்பாகியது. அடுத்த வாரம் சூட்டிங் நடைபெற்று விட்டது அது டெலிகாஸ்ட் ஆகவில்லை அதற்குள் என்னுடைய அம்மா இறந்து போய்விட்டார்.
முதல் வாரம் என்னை டிவியில் பார்த்ததும் எங்க அம்மாவுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. நான் இந்த பிறவியில் பிறந்ததற்கு பலன் கிடைத்துவிட்டது, உன்னை டிவியில் பார்த்து விட்டேன். நீ இவ்வளவு வளர்ந்தது எனக்கு சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

ஆனால் அடுத்த வாரத்தில் என்னுடைய அம்மா ட்ரெயினில் வரும்போது தவறி கீழே விழுந்து இறந்து போய்விட்டார். அப்போது அம்மாவின் பேக்கில் என்னுடைய மனைவியின் போட்டோ இருந்தது. அவரைத்தான் எனக்கு பெண் பார்த்து வந்திருந்தார். இதனால் நான் என்னுடைய மனைவி எப்படி இருந்தாலும் ஓகே என்று திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டேன்.
சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன முத்து.. விஜயாவுக்கு பெரிய ஏமாற்றம்
என்னுடைய அம்மா சொன்னால் அது சரியாக இருக்கும் என்று நம்பினேன். அதுபோலத்தான் என்னுடைய வாழ்க்கை துணை எனக்கு இப்ப வரைக்கும் உறுதுணையாக இருக்கிறார். நான் இன்று இவ்வளவு வளர்ந்து சிறப்பாக இருக்கிறேன் அதை பார்ப்பதற்கு என்னுடைய அம்மா இல்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.
அதே நேரத்தில் என்னுடைய அம்மா காலமாகி தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறார் என்றும் எனக்கு தோன்றுகிறது என எமோஷனலாக அந்த பேட்டியில் வெங்கடேஷ் பட் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications