கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த ராதிகா.. கடுப்பான கோபி.. இவ்வளவு சீக்கிரத்திற்குள் இப்படி ஒரு முடிவா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டை குறித்து பேசியதற்கு பாக்கியலட்சுமி தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார்.
பாக்கியலட்சுமி செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபிக்கு பிபி எகிரி கொண்டிருக்கிறது.
ராதிகாவிடம் கோபி நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று முன்பு சொன்ன பொய் இப்போது அவருக்கு ஈட்டியாய் வந்து குத்திக் கொண்டிருக்கிறது.

பொய்க்கு கிடைத்த தண்டனை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில், இனியா ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருக்கிறார். அவரைக் வேன் ஏத்தி விடுவதற்காக பாக்யா வருகிறார். நான் மட்டும் தனியாகவே போய் விடுவேன் அம்மா என்று இனியா, அம்மாவை அனுப்பி விடுகிறா.ர் அதே நேரத்தில் இந்த பக்கம் ராதிகா மயூவுக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுக்க, கோபி எனக்கு லஞ்ச் இல்லையா? என கேட்க நீங்கதானே மூணு வேலையும் வெளியே தான் சாப்பிடுவேன் என்று சொன்னீங்க? உங்களுக்கு லஞ்ச் வேணுமா? வேணும்னா உப்புமா இருக்கு தரவா? என கேட்க கோபி வேண்டாம் என சொல்லி விடுகிறார். உனக்கு எதுக்கு கஷ்டம் நான் வெளியவே பாத்துக்குறேன். நீ மயூக்கு மட்டும் லஞ்ச் கொடுத்தால் போதும் என்று அப்போதைய நேரத்தில் இருந்து தப்பித்து விடுகிறார்.

பாக்கியா கொடுத்த பதிலடி
அடுத்ததாக கோபி மயூவின் ஸ்கூல் பேக்கை தூக்கிக்கொண்டு காருக்கு வந்து கொண்டிருக்கிறார். அப்போது இனியா கோபி மற்றும் மயூவை பார்த்து கடுப்பாகி வேணுக்கு நடந்து செல்கிறார். இனியாவிடம் கோபி நான் ட்ராப் செய்கிறேன் இனியா காரில் ஏறு என்று கூறுகிறார். அதற்கு இனியா பதில் பேசாமல் நடந்து செல்கிறார். அடுத்ததாக கோபி தன்னுடைய நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு 40 ஆயிரம் கிரெடிட் ஆக யார் பணம் போட்டது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கோபிக்கு பாக்கியா போன் செய்து உங்களுக்கு 40 லட்சம் தருவதாக சொல்லி இருந்தேன். அதில் முதல் தவணையாக 40 ஆயிரம் போட்டு இருக்கிறேன். வந்து இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க என்ன சொல்லி போனை கட் பண்ணுகிறார்.

பிபி அதிகரிக்கிறது
கோபி பேசுவதை கண்டுகொள்ளாமல் ராதிகா பாக்யா போனை கட் செய்து விட்டதால், கோபிக்கு பிபி அதிகரிக்கிறது .இடியட் இடியட் என திட்டி கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய நண்பன் யாரடா? இப்படி திட்டுகிறாய் என்று கேட்க, அது பழைய கிளையன்ட், பழைய கணக்கு என்று சொல்லி சமாளிக்கிறார் .அடுத்து மையூவைக் கூட்டிக்கொண்டு கோபி வீட்டிற்கு வருகிறார். தலை வலிக்குது கொஞ்சம் காபி கிடைக்குமா? என கேட்க அதே நேரத்தில் ரூமுக்குள் இருந்து மயூ ராதிகாவை கூப்பிட்டதும் ராதிகா சென்று விடுகிறார். கடைசி வரைக்கும் இந்த வீட்ல காபி கிடைக்காது. ஒருத்தன் கத்திக்கிட்டு இருக்கேன், நம்மள கொஞ்சமாவது கண்டுக்கிறாளா? மயூவை தான் எப்பவும் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்று பொறாமையில் கோபி புலம்பிக் கொண்டிருக்கிறார்.

குழப்பமான போஸ்ட்மேன்
அடுத்ததாக ராதிகாவிடம் பாஸ்போர்ட் ஆபீஸ்ல இருந்து அப்பாயின்மென்ட் லெட்டர் வரும். அது அந்த வீட்டு அட்ரஸ்க்கு தான் போகும், போஸ்ட்மேன் வர டைம் என்பதால் போஸ்ட்மேனை பார்த்து லெட்டர் வாங்க காத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார். அதே நேரத்தில் போஸ்ட்மேன் பாக்யா வீட்டிற்கு சென்று கோபியின் பெயரில் லெட்டர் வந்திருப்பதாக சொல்கிறார். அதற்கு கோபியின் அப்பா அப்படி யாரும் இந்த வீட்டில் இல்லை. அந்த பெயருக்கு லெட்டர் வந்தால் இங்கே கொண்டு வராதீங்க என சொல்கிறார். உடனே போஸ்ட்மேன் லெட்டர் எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications