CWCஇல் அறிமுகமான நடிகர் நாகேஷ் பேரன்..வந்ததும் இப்படி ஒரு கேள்வியா?கதி கலங்கிய சிவாங்கி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக இரண்டு போட்டியாளர்கள் அறிமுகம் ஆகின்றனர்.
அதில் ஒருவராக பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரன் குக்காக களம் இறங்குகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பத்து குக்குகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து குக்குகளாக சுருங்கி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இரண்டு புதிய வைல்ட் கார்ட் என்ட்ரி அறிமுகமாகி இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் மதுரை காளையன், ராஜ் ஐயப்பன், விஜே விஷால், இயக்குனர் கிஷோர், ஷெரின், சிவாங்கி, ஆண்ட்ரியன், விசித்திரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி என மொத்தம் பத்து போட்டியாளர்கள் இந்த சீசனில் அறிமுகம் ஆகி இருந்தனர். இதில ஆண் போட்டியாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காளையன், ராஜ் ஐயப்பன், விஷால், ஆகிய நான்கு போட்டியளவில் முதலில் வெளியேறினார்கள். கடந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டில் சிவாங்கி ஸ்ருஷ்டி, ஷெரின் ஆகிய மூவர் இருந்தனர். அதில் ஷெரின் வெளியேற்றப்பட்டார.
ஷெரினுக்கு அசைவ கடல் உணவுகள் என்றால் அலர்ஜி. அவரது தொண்டை கட்டி அவருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு விடுமாம். ஆனாலும் கடந்த வாரம் கடல் உணவு சமைக்கும் சேலஞ்ச் என்பதால் தனது அலர்ஜியையும் பொருள்படுத்தாமல் அவர் சமைத்தார். ஆனால் அவரால் சிறப்பாக சமைக்க முடியாமல் ஆகிவிட்டது. அதனால் அவர் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது,

இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக அறிமுகம் ஆகி இருக்கின்றனர். அதில் பழம்பெரும் நடிகர் நாகேஷ் பேரனான கஜேஷ் என்பவர் இறங்கி இருக்கிறார். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தந்தை ஆனந்தபாபு நாகேஷின் மகனாவார். இவரும் நடிகர் மற்றும் நடன கலைஞராகவும் இருந்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மௌனராகம் என்று சீரியலில் முத்தழகு என்ற சீரியலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரைத் தொடர்ந்து இரண்டாவதாக கலை இயக்குனர் கிரண் என்பவரையும் குக்காக களம் இறக்கி இருக்கின்றனர். தொடர்ந்து ஆண் போட்டியாளர்களே வெளியேறி வந்த நிலையில் இரண்டு ஆண் போட்டியாளர்களை மீண்டும் களம் இறங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்களுடைய வருகையை பார்த்த சிவாங்கி, எங்களுடைய முகம் மாறி சில வாரங்களாக ஆகிறது என்று கூறியதை தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications