வீட்டில் விசேஷம்.. மனைவி கர்ப்பமாக இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்த தீனா! பதிவில் இதை கவனிச்சீங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பிரபலமாகி விடுகிறார்கள். அந்த வகையில் ஒரு நபர் தீனா. இவர் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது இவருடைய டைமிங் காமெடி பார்த்து பலர் பாராட்டி இருக்கிறார்கள். தீீனா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரகதி என்பவரை திருமணம் செய்திருந்தார். இப்போது தீனா தான் அப்பாவுக்கு போகும் மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
தீனாவின் காமெடி திறமையை கண்டு சிலர் இப்படி நீ கேமராவுக்கு பின்னாடி இருக்க வேண்டிய ஆள் இல்லப்பா. நீ கேமராவுக்கு முன்னாடி இருக்க வேண்டிய ஆள் என்று கூறியிருக்கிறார்கள். இப்படித்தான் இவர் கேமராவுக்கு முன்னாடி வந்து பலரையும் கலாய்க்க தொடங்கி இருக்கிறார்கள்.

விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அங்கே வரும் பிரபலங்களை போன் பண்ணி கலாய்த்து அவர்களை பேசவிடாமல் பல நேரங்களிலும் சிரிக்க மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் இவருடைய அல்டிமேட் காமெடி பார்த்து ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் இவர் இப்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார.
வெள்ளி திரையில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இப்போதும் சில படங்கள் அவருடைய கைவசம் இருக்கிறது. ஸ்டேஜ் ஷோக்களிலும் பிஸியாகவே இருக்கும் தீனா சில மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய சொந்த ஊரில் வீட்டைக் கட்டி முடித்து இருந்தார்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கேமராவுக்கு பின்னாடி ஒரு துணை இயக்குனராக பணியாற்றி வந்த தீனா பிறகு தனக்கு இருக்கும் திறமையை பார்த்து பலரும் இவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொன்ன பிறகுதான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் தீனா இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய பிராங்கால் திடீர் விசிட் அடித்து விடுவார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக செல்லாமல் போட்டியாளராக அங்கு மிரட்டி கொண்டிருப்பவர்களையும் திடீரென்று போய் மிரட்டி விட்டு வந்திருக்கிறார். இந்த அளவிற்கு பலரையும் பாடாய் படுத்தி எடுத்த தீனா இப்போது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் தன்னுடைய சொந்த ஊரில் பிரம்மாண்டமான வீடு கட்டி கிரகப்பிரவேசம் வைத்திருந்தார்.
அடுத்த சில மாதங்களிலேயே பிரகதி என்பவரை திருமணம் செய்து இருந்தார்.பிரகதி இப்போது கர்ப்பமாக இருக்கிறார். அந்த மகிழ்ச்சி செய்தியை நேற்று தீனா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் "என் உயிர் பெற்று உன் உயிர் கொண்டு நம் உயிரை பெறுவோம் என் உயிரே" என்று கவிதைகளை பகிர்ந்து இருக்கிறார். தீனா மற்றும் பிரகதிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications