கண்ணிவெடி வைத்த விஜய் டிவி "தளபதி" நடிகர்? பணத்தை இறைத்து! சூர்யாவை சுற்றி பின்னப்படும் வலை: பிரபலம்
சென்னை: சூர்யா மீது என்னதான் தாக்குதல் நடத்தினாலும், எதை பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை .. அகரம் அறக்கட்டளை மூலம் 8000 பேருக்கு கல்வி தந்து, உலக நாடுகளில் பலரை பணியாற்ற செய்துள்ளார்.. அவர் தன்னுடைய பொதுப்பணிகளை இப்படி செய்து கொண்டேதானிருப்பார். சூர்யா மேலே வரக்கூடாது என்று பலரும் சதி செய்தாலும், அவரது நல்ல எண்ணம் அனைத்து சதியையும் முறியடித்துவிடும்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய பேட்டியில் "நடிகர் சூர்யாவை ஒழித்து கட்டுவதற்காகவே சிலர் எதிராக பேசுகிறார்கள்.. சூர்யாவுக்கு எதிராக சில அரசியல் சக்திகளும், சினிமாவிலிருந்தே சூர்யாவை ஓரம்கட்ட, சில திரைப்பட பிரமுகர்களும் பின்னணியில் உள்ளனர்..

அதனால்தான், திட்டமிட்டே ரெட்ரோ படத்தை சோஷியல் மீடியாவில் கலாய்த்து வருகிறார்கள். இது மிகவும் தவறானது.. எப்போதோ பேசிய ஜோதிகாவின் பேச்சு, சிவக்குமாரின் பேச்சுக்களை வைத்து, இப்போதுவரை அவர்களை டார்கெட் செய்வது ஏற்புடையதல்ல" என்றார்.
மொக்கை படம், சூர்யா மார்க்கெட் அவுட்
அதேபோல, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "ரொட்ரோ படத்தை நெட்பிலிக்ஸ் 65 கோடிக்கு வாங்கியிருக்கிறது. இதனால், சூர்யா, ஜோதிகா இருவருக்கும் லாபம்தான்.. பிளஸ் பாயிண்ட்தான். 30 கோடி சம்பளம் பெற்று வந்த சூர்யாவுக்கு, வெங்கி அட்லூரியின் அடுத்த படத்தில் 60 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை 85 கோடிக்கு வாங்கியிருக்கிறது நெட்பிளிக்ஸ் நிறுவனம். எனவே சூர்யாவுக்கு மார்க்கெட் அவுட், படம் மொக்கை என்பதெல்லாம் பொய்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "சூர்யா படம் நல்லா இல்லை என்றால், அதை தாராளமாக சொல்லலாம்.. கங்குவா படம் உண்மையிலேயே நல்லா இல்லை..
கங்குவா, ரெட்ரோ
அந்த படத்தை அனைவரும் ட்ரோல் செய்து விமர்சிக்க காரணம், "2000 கோடி கங்குவா படம் அடிக்கும்" என்று மேடையிலேயே ஞானவேல்ராஜா பேசியிருந்தார். "வாயை பொளந்துட்டு கங்குவா படத்தை பார்ப்பீங்க" என்று சூர்யாவும் பேசியிருந்தார்.. இதை வைத்துதான் அதிகமாக டிரோல செய்யப்பட்டது.
ஆனால், இதையே சாக்காக வைத்துக் கொண்டு, ஒருசிலர் சூர்யாவிடம் மோசமான வன்மத்தை கக்கி வருகிறார்கள்.. அதிலும் சூர்யா மீதான தனிநபர் தாக்குதல் அதிகமாகிவிட்டது.. தனிநபர் விமர்சனங்கள் தேவையில்லை. ரெட்ரோ படமும்கூட பெரிய வெற்றிப்படமில்லை என்றாலும் சுமாரான படம்தான். உண்மையிலேயே படத்தை பற்றி கருத்து சொல்ல விமர்சனம் எல்லாருக்கும் உரிமை உண்டு. ஆனால் சூர்யாவை தாக்கி பேசுவதை ஏற்க முடியாது..
விஜய் டிவி நடிகர்
சூர்யாவை சினிமாவில் அழிச்சிவிடணும், முன்னுக்கு வரக்கூடாது என்று சினிமாவிலேயே சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள்.. குறிப்பாக விஜய் டிவியிலிருந்து வந்த பிரபல நடிகர், அடுத்த தளபதியாக வரணும் என்று நினைக்கிறார்.. அவர்தான் தன்னுடைய ஐடி விங்கை வைத்து, சூர்யாவை கடுமையாக தாக்கி வருகிறார்.. இதற்காகவே பல லட்சங்களையும் செலவு செய்து கொண்டிருக்கிறார்.
விஜய் டிவியிலிருந்து வந்த இந்த நடிகருக்கும் சூர்யாவுக்கும் உண்மையிலேயே என்ன பிரச்சனை என்றால், சூர்யாவின் உறவினரான ஞானவேல்ராஜாவின் ஒரு படத்தில் அந்த நடிகர் ஏற்கனவே நடித்திருந்தார்..
அதில் ஏற்பட்ட ஒரு பஞ்சாயத்துக்கு. சூர்யாதான் காரணம் என்று அந்த நடிகர் நினைக்கிறார். அதுமட்டுமல்லாமல், இன்றைக்கு சூர்யாவைவிட அதிகமாக வளர்ந்துவிட்டோம் என்றும் தளபதியையும் தாண்டி தான்தான் மேலே இருக்கணும் என்றும் நினைக்கிறார்.
வன்மம் கக்கும் நபர்கள்
மற்றொருபுறம் ஜெய் பீம் படத்துக்கு பிறகு பாமக தரப்பில் சூர்யாவுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.. நீட் தேர்வு பற்றி சூர்யா கருத்து சொல்லவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர் என்ற முத்திரை குத்தி பரப்புரை செய்கிறார்கள்.. அன்று கோவில் சம்பந்தமாக ஜோதிகா சொன்ன கருத்து, சிக்ஸ் பேக் பற்றி சிவக்குமார் சொன்ன கருத்து, இவைகளை வைதது இன்னமும் சோஷியல் மீடியாவில் சிவக்குமார் குடும்பத்தை விமர்சித்து வருகிறார்கள்.
தொடர்ந்து மேலே செல்வார் சூர்யா
இப்படி பலரும் சூர்யா மீது வன்மம் கக்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால், சூர்யா ஆர்ஜே பாலாஜி படத்தில் நடித்து வருகிறார்.. இது வெற்றிப்படமாக வர வாய்ப்புள்ளது.. வெற்றிப்படங்களை தொடர்ந்து தரும் வெற்றிமாறனின் வாடிவாசல் படமும் சூர்யாவுக்கு வேற லெவலில் பெயர் பெற்றுத்தர போகிறது. என்னதான் தாக்குதல் நடத்தினாலும், சூர்யா எதை பற்றியும் கவலைப்படுவதில்லை .. அகரம் அறக்கட்டளை மூலம் 8000 பேருக்கு கல்வி தந்து, உலக நாடுகளில் பலரை பணியாற்ற செய்துள்ளார்..
அவர் தன்னுடைய பொதுப்பணிகளை இப்படி செய்து கொண்டேதானிருப்பார். சூர்யா மேலே வரக்கூடாது என்று பலரும் சதி செய்தாலும், அவரது நல்ல எண்ணம் அனைத்து சதியையும் முறியடித்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
சிறகடிக்க ஆசை: போலி சாமியார் பற்றி உண்மையை நிரூபித்த முத்து! விஜயாக்கு தெரிய வந்த இன்னொரு உண்மை! செம சம்பவம் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா?












Click it and Unblock the Notifications