நண்பர்களை இணைத்த பிரியாணி...அவங்களே ஷாக் ஆகிட்டாங்களாம்!!
சென்னை:என்னது..!! நீயா!!!?? மூவ்மென்ட் என்று கேப்ஷன் உடன் சர்வைவர் டைட்டில் வின்னர் விஜயலட்சுமி போஸ்ட் செய்துள்ள போட்டோவை பார்த்து,கலாய்த்து வருகின்றனர்
ஒரு மந்தையில் இருந்த ஆடுகள்... வெவ்வேறு பாதையில் சென்றுவிட்டன... இரண்டும்.. மீண்டும் சந்தித்துக் கொண்ட பொழுது பேச முடியவில்லையோ....!.? அதனாலதான் செல்பி எடுத்துக்கிட்டாங்க போல.. என்று இணைய குறும்பர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மனதில் பதிந்த முகம்
காதல் கோட்டை போன்ற பிரம்மாண்ட ஹிட் கொடுத்த இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி, வெங்கட்பிரபு டீமின் முதல் படமான சென்னை 28 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார்.பெரிய அளவில் கதாநாயகிகளுக்கு உண்டான அம்சங்கள் இல்லாவிட்டாலும் பார்ப்பதற்கு தங்கள் ஏரியாவில் இருக்கும் பக்கத்து வீட்டு பெண் போல் இருந்ததால் ஓரளவிற்கு அனைவரது மனதிலும் தனது முகத்தை கொஞ்சம் பதிய வைத்தார்.

சென்னை 28 ல் ஜோடி
சென்னை 28 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெய்யும் நடித்திருந்தார். அதற்கு முன்பு வரை சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜெய்க்கு சென்னை 28 படம் நடிப்பதற்கு பெரிய அளவு ஸ்பேஸ் கொடுத்தது.அந்தப் படத்தின் போதே இவர்களுக்குள் இருந்த நட்பு சிறிது நாட்களுக்கு பிறகு "அதே நேரம், அதே இடம்" என்ற படத்தில் கதாநாயகன் கதாநாயகியாக இனைந்து நடிக்கும் அளவிற்கு சென்றது.

பரவிய வதந்தி
பிரேம்ஜி அப்படி இப்படி என்று கொஞ்சம் முக்கி முக்கி படத்தின் பாடல்களை கொஞ்சம் ஹிட் செய்திருந்தாலும், முக்கியமாக கதை சரியில்லை என்பதால் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் எல்லாம் சர்ச்சையில் சிக்கும் ஜெய், 'அதே நேரம் அதே இடம்' படத்தில் அவருடன் நடித்த விஜயலட்சுமி யுடனும் சேர்த்துவைத்து வதந்தி அந்த நேரத்தில் கிளம்பியது. அதற்குக் காரணம் அந்தப் படத்தில் விஜயலட்சுமி கொஞ்சம் கிளாமராக நடித்தது கூட இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

பிரியாணி கடையில் சந்திப்பு
அதன் பிறகு தங்கள் வழியில் தனித்தனியே பயணிக்க ஆரம்பித்த நண்பர்களில் விஜயலட்சுமி திருமணத்திற்குப் பின்பு சின்னத்திரை, சர்வைவர் ரியாலிட்டி ஷோ என்று ஒரு ரூட்டில் போய்க்கொண்டு இருக்கிறார். ஜெய்யும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதும், அவ்வப்போது படங்களில் நடிப்பதுமாக அவரும் ஒரு ரூட்டில் போய்க்கொண்டிருக்கிறார். வருட கடைசி நாளை பிரியாணியுடன் முடிப்போம் என்று நினைத்த இருவரும், பிரியாணி வாங்கி வந்த இடத்தில் எதேச்சையாக சந்தித்துக்கொண்ட சம்பவத்தை, என்னது..! நீயா..!?என்று ஆச்சரியம் பொங்க மகிழ்ச்சியுடன் போஸ்ட் செய்துள்ளனர்.அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் நடிப்பில் வெளியான அதே நேரம் அதே இடம் படத்திலிருந்து .. 'அது ஒரு காலம்.. அழகிய காலம்..' என்ற பாடலை ஏகமனதாக போட்டு கலாய்த்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications